under review

ஞானபோதினி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 20: Line 20:


என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது.
என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது.
சைவசித்தாந்தம், தமிழ்நாட்டு வரலாறு, aறிவியல் செய்திகள், தமிழ் இலக்கணம், பொருளியல், உடலியல், மருத்துவ இயல், தத்துவம், இசை, நாடகம், கல்வி, சமயம் எனப் பல்வேறு பொருள் குறித்த கட்டுரைகள் ஞானபோதினியில் வெளியாகின. மிருச்சகடிகம், விக்கிரமோர்வசியம் , பர்த்தருஹரி , முத்திரராட்சகம், காதம்பரி போன்ற வடமொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் 'ஞான போதினி'யில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலக் கவிதைகள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்ப்பட்டுள்ளன. 'The Nightingale and Glow worm' என்ற கவிதை 'இராப்பாடியும் மின்மினியும்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்ப்பட்டுள்ளது.
சைவசித்தாந்தம், தமிழ்நாட்டு வரலாறு, அறிவியல் செய்திகள், தமிழ் இலக்கணம், பொருளியல், உடலியல், மருத்துவ இயல், தத்துவம், இசை, நாடகம், கல்வி, சமயம் எனப் பல்வேறு பொருள் குறித்த கட்டுரைகள் ஞானபோதினியில் வெளியாகின. மிருச்சகடிகம், விக்கிரமோர்வசியம் , பர்த்தருஹரி , முத்திரராட்சகம், காதம்பரி போன்ற வடமொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் 'ஞான போதினி'யில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலக் கவிதைகள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்ப்பட்டுள்ளன. 'The Nightingale and Glow worm' என்ற கவிதை 'இராப்பாடியும் மின்மினியும்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்ப்பட்டுள்ளது.
[[File:Thanipasura Thokai Advt.jpg|thumb|தனிப்பாசுரத் தொகை]]
[[File:Thanipasura Thokai Advt.jpg|thumb|தனிப்பாசுரத் தொகை]]
====== தனிப்பாசுரத் தொகை ======
====== தனிப்பாசுரத் தொகை ======
'ஞானபோதினி' இதழ் ஆங்கிலத்திலுள்ள 'சானெட்' என்னும் இலக்கிய வகையைத் தமிழில் ‘[[தனிப்பாசுரத் தொகை]]’ என்னும் பெயரில் அறிமுகம் செய்தது. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஞானபோதினி இதழில், ஜனவரி 1898 முதல் அக்டோபர் 1900 வரை இரண்டாண்டு காலம் ‘தனிப்பாசுரத் தொகை’ என்னும் தலைப்பில், ‘பரிதிமாற் கலைஞர்’ என்ற புனை பெயரில் குறுங்கவிதைகளை எழுதி வந்தார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. ஜி. யு. போப் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
'ஞானபோதினி' இதழ் ஆங்கிலத்திலுள்ள 'சானெட்' என்னும் இலக்கிய வகையைத் தமிழில் ‘[[தனிப்பாசுரத் தொகை]]’ என்னும் பெயரில் அறிமுகம் செய்தது. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஞானபோதினி இதழில், ஜனவரி 1898 முதல் அக்டோபர் 1900 வரை இரண்டாண்டு காலம் ‘தனிப்பாசுரத் தொகை’ என்னும் தலைப்பில், ‘பரிதிமாற் கலைஞர்’ என்ற புனை பெயரில் குறுங்கவிதைகளை எழுதி வந்தார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. ஜி. யு. போப் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
== ஞானபோதினி இதழ்க் கட்டுரைகள் ==
== ஞானபோதினி இதழ்க் கட்டுரைகள் ==
ஞானபோதினி இதழில் இடம் பெற்ற சில முக்கியமான கட்டுரைகள்
ஞானபோதினி இதழில் இடம் பெற்ற சில முக்கியமான கட்டுரைகள்

Revision as of 06:01, 13 September 2022

ஞானபோதினி 1988 இதழ்
ஞானபோதினி 1903 இதழ் உள்ளடக்கம்
ஞானபோதினி இதழ் - பொருளடக்கம்

ஞானபோதினி (1897-1905) பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் ஆய்விதழ். எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை மற்றும் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இருவரும் இதன் ஆசிரியராக இருந்தனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு அறிவியல் செய்திகளுக்கும், வரலாற்றுக் கருத்துக்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. எளிய செந்தமிழ் நடையில் இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

ஞானபோதினி ஆகஸ்ட், 1897-ல் தொடங்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இதழ்களில் ஒரு மாறுபட்ட இதழாக இதனைக் கொண்டு வர வேண்டும் என்று, இதன் ஆசிரியர்களான மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளையும் பரிதிமாற்கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியும் கருதினர். அதன் படி எளிய செந்தமிழ் நடையில் தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், வரலாறு, பண்பாடு, அறிவியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழை வெளியிட்டனர்.

இதழின் மொத்தப் பக்கங்கள் 40. வருஷ சந்தா இரண்டு ரூபாய், எட்டணா. தனி இதழ் ஒன்றின் விலை நான்கணா. இதனை சென்னை ‘தாம்ஸன் கம்பெனியார் அச்சிட்டுப் பதிப்பித்தனர்.

இதழின் பெயர்க்காரணம்

இதழின் பெயர்க் காரணம் குறித்து, ஞானபோதினி முதல் இதழில் கீழ்காணும் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சில வருடங்களுக்கு முன்னர் கல்வி ரசங்கொண்டு கேட்டவர்க்கும் பார்த்தவர்க்கும் இன்பம் அளித்துதவிய ஞானாமிர்தம் என்னும் பத்திரிகையில் ஸ்ரீ சபாபதி நாவலரவர்கள் பெரும்பாலும் சைவ சமயத்தைக் குறித்து மட்டும் எழுதிக் கொண்டிருந்தமையால் அப்பத்திரிக்கை சைவ சமயங்களால் மட்டும் ஆதரிக்கப்பெற்று நாளடைவில் அவர்களும் கைவிடவே விளங்காதொழிந்தது. ஆகையால் முன்னோர் அனுபவத்தைச் சிரமேற்கொண்டு பன்னாட் சிந்தித்துப் பலவகை ஞானங்களே ஓருருவமாய் விளங்கா நின்ற சரஸ்வதியினடி பணிந்து அடியேன் பிரசுரிக்கும் பத்திரிகைக்கு ‘ஞானபோதினி’ என்னும் நாமகரணமிடத் துணிந்தனம்"

உள்ளடக்கம்

ஞானபோதினி இதழின் முகப்புப் பக்கத்தில், ‘ஞானபோதினி’ என்ற இதழின் தலைப்பின் கீழ்,

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது. சைவசித்தாந்தம், தமிழ்நாட்டு வரலாறு, அறிவியல் செய்திகள், தமிழ் இலக்கணம், பொருளியல், உடலியல், மருத்துவ இயல், தத்துவம், இசை, நாடகம், கல்வி, சமயம் எனப் பல்வேறு பொருள் குறித்த கட்டுரைகள் ஞானபோதினியில் வெளியாகின. மிருச்சகடிகம், விக்கிரமோர்வசியம் , பர்த்தருஹரி , முத்திரராட்சகம், காதம்பரி போன்ற வடமொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் 'ஞான போதினி'யில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலக் கவிதைகள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்ப்பட்டுள்ளன. 'The Nightingale and Glow worm' என்ற கவிதை 'இராப்பாடியும் மின்மினியும்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்ப்பட்டுள்ளது.

தனிப்பாசுரத் தொகை
தனிப்பாசுரத் தொகை

'ஞானபோதினி' இதழ் ஆங்கிலத்திலுள்ள 'சானெட்' என்னும் இலக்கிய வகையைத் தமிழில் ‘தனிப்பாசுரத் தொகை’ என்னும் பெயரில் அறிமுகம் செய்தது. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஞானபோதினி இதழில், ஜனவரி 1898 முதல் அக்டோபர் 1900 வரை இரண்டாண்டு காலம் ‘தனிப்பாசுரத் தொகை’ என்னும் தலைப்பில், ‘பரிதிமாற் கலைஞர்’ என்ற புனை பெயரில் குறுங்கவிதைகளை எழுதி வந்தார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. ஜி. யு. போப் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஞானபோதினி இதழ்க் கட்டுரைகள்

ஞானபோதினி இதழில் இடம் பெற்ற சில முக்கியமான கட்டுரைகள்

  • சீவகசிந்தாமணி வசனம்   
  • அத்துவித வாக்கியத் தெளிவுரை   
  • ஒட்டக்கூத்தரருளிச் செய்த குலோத்துங்க சோழன் கோவை
  • மகாபாரதம்     
  • தமிழ்ப்புலவர் நிலைமை   
  • இரண்டு அருட்செய்யுட்களும் அவற்றின் உரையும்   
  • அந்தகக்கவி வீரராகவ முதலியார்   
  • மாணிக்கவாசகரும் கடைச் சங்கமும்   
  • இயலும் இயற்கையும்
  • பெரிய திருமொழி
  • திருவிளையாடற் கருப்பொருள்   
  • மதிவாணனாராய்ச்சி   
  • தாயுமானவர் தத்துவ விசாரம்     
  • இராமாயணம்     
  • காசிக்காண்டம்  
  • சிறுநூலாராய்ச்சி
  • இலக்கணவதிகாரம்   
  • பதினெண் கீழ்க்கணக்கு
  • மானவிஜய ஆராய்ச்சி    காளிதாசர்
  • கலிங்கத்துப்பரணி   
  • சந்தான குரவர்   
  • சித்தாந்த தீபிகை புத்துரை விளக்கம்
  • நக்கீரனாரின் தெய்வப்புலமை மாட்சி   
  • ஆசாரவிளக்கம்   
  • நாடகவிலக்கணச் சுருக்கம்   
  • சீவகசிந்தாமணி   
  • ஒழிவிலொடுக்கச் சிறப்புப் பாயிரவுரை     
  • இராமாயணத்தின் தத்துவபோதம்     
  • சித்தாந்த தீபிகை நூதனவுரை
  • நெடுநல்வாடை ஆராய்ச்சி   
  • திருக்கோவையாருண்மை விளக்கம்     
  • ஔவை முனிமொழி   
  • முதலாழ்வார்கள் வைபவம்   
  • திருவள்ளுவர்
  • தமிழக்கவி சரிதம் கல்லாட ஆராய்ச்சி
  • இராமயண வாராய்ச்சி   
  • இராமாயண வெண்பா     
  • திருவிடைமருதூர் கலம்பக ஆராய்ச்சி     
  • மதுரைத் தமிழ்ச்சங்க வருடோற்சவம்   
  • சிலப்பதிகார ஆராய்ச்சி

பங்களிப்பாளர்கள்

  • மு. சேஷகிரி சாஸ்திரி எம்.ஏ.
  • டி. ஆர். இராமநாத ஐயர் பி.ஏ. எல்.டி.
  • வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரிகள் பி.ஏ.
  • பிரணதார்த்திஹர சிவன் பி.ஏ.
  • கல்யாணராம சாஸ்திரிகள் பி.ஏ.
  • சருக்கை இராமசாமி ஐயங்கார் பி.ஏ.
  • சுந்தரம் ஐயர் பி.ஏ.
  • கோபாலசாரியார்
  • பலராம ஐயர்
  • ஸ்ரீநிவாசாச்சாரியார்
  • ஸாமிநாத ஐயர்
  • கள்ளப்பிரான் பிள்ளை பி.ஏ.
  • முத்துராமலிங்கம் பிள்ளை பி.ஏ.
  • லக்ஷ்மண பிள்ளை பி.ஏ.
  • அனவரதவிநாயகம் பிள்ளை பி.ஏ.
  • சேஷகிரிப் பிள்ளை பி.ஏ.
  • இராமஸ்வாமியா பிள்ளை பி.ஏ.
  • சங்கரலிங்கம் பிள்ளை பி.ஏ.
  • திருமலைக்கொழுந்துப் பிள்ளை பி.ஏ.
  • குப்புசாமி முதலியார் பி.ஏ.
  • சுப்பிரமணிய ஆசாரியார் பி.ஏ.
  • வேதாசலம் பிள்ளை
  • வித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளை
  • வி. வே, கி. நாராயணசாமிப் பிள்ளை
  • சிவஞானயோகிகள்
  • சொக்கலிங்கம் பிள்ளை
  • யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை
  • திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்
  • குருவிக்குளம் ஜமீன்தார்
  • சாமுவேல் பிள்ளை
  • உ.வே.சாமிநாதையர்
  • சுந்தரராஜ ஐயர் பி.ஏ.எல்.டி.
  • சுவேதாரண்ய சாஸ்திரி பி.ஏ.
  • இராமஸ்வாமி ஐயரவர்கள் பி.ஏ.
  • சுப்பிரமணிய சாஸ்திரி
  • சேதுராமபாரதி
  • ஸ்ரீ ரங்காசாரியர்
  • ஸ்ரீ சிவராம பிள்ளை
  • கந்தசாமிக் கவிராயர்
  • மதுரை சண்முகம் பிள்ளை
  • எம். பி. ஈசுவரமூர்த்தியா பிள்ளை
  • ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
  • இராமநாதபுரம் தங்கவேலுசாமித் தேவர்
  • மஹேசகுமாரா சர்மா
  • ரங்கநாதாசாரியர்

ஆவணம்

ஞானபோதினி தமிழ் இணைய ஆவணக்காப்பகம்

வரலாற்று இடம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் பழைய இலக்கியங்கள் அச்சேறத்தொடங்கியபோது அவற்றை சமகாலத்தில் நின்று வரலாற்றுப்பார்வையுடனும், வாழ்க்கைசார்ந்தும் பொருள்கொள்ளவேண்டிய தேவை எழுந்தது. அதன்பொருட்டு பல தமிழறிஞர்கள் பலகோணங்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்கள். அவர்களின் எழுத்துக்களை வெளியிட்ட இலக்கிய ஆய்விதழ்களில் ஞானபோதினி குறிப்பிடத்தக்க ஒன்று. அறிவியல் சார்ந்த வாழ்க்கைப் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகளையும் சமகாலச் செய்திகளையும் ஞானபோதினி வெளியிட்டது.

உசாத்துணை

தமிழ்வு, பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் ஞானபோதினி தமிழ் இணைய ஆவணக்காப்பகம்


✅Finalised Page