எம்.கே. சானு: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Sanu Mash.jpg.webp|thumb|எம்.கே.சானு]] | [[File:Sanu Mash.jpg.webp|thumb|எம்.கே.சானு]] | ||
எம். கே. சானு 17 அக்டோபர் | எம். கே. சானு (17 அக்டோபர் 1928- 2 ஆகஸ்ட் 2025) கேரள சிந்தனையாளர். பேச்சாளர். நூலாசிரியர். நாராயணகுரு உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரிவாக எழுதியவர். நாராயணகுருவின் இயக்கத்துடனும், இடதுசாரி இயக்கத்துடனும் இணைந்து செயல்பட்டவர். | ||
எம்.கே.சானு | == பிறப்பு, கல்வி == | ||
எம்.கே. சானு 17 அக்டோபர் 1928 பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் எம்.சி.கேசவன், கே.பி.பவானி இணையருக்குப் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதல் மாணவராகத் தேறி முதுகலைப் பட்டம் பெற்றார். | |||
== தனிவாழ்க்கை == | |||
எம்.கே.சானு ரத்னம்மாவை மணந்தார்.எம்.எச், ரஞ்சித், எம்.எஸ்.கீதா, எம்.எஸ்.சீதா, எம்.எஸ்.ஹாரீஸ் ஆகியோர் வாரிசுகள். | |||
எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கொல்லம் எஸ்.என் கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி உட்பட வெவ்வேறு அரசுக் கல்லூரிகளில் ஆசிரியராக ஆனார். 1983ல் பணி ஓய்வு பெற்றார். | |||
== இலக்கியவாழ்க்கை == | |||
1958ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ எம்.கே.சானுவின் முதல் நூல். 1960ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று. | |||
எம்.கே.சானு இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு என்னும் களங்களில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்காகவே அவர் புகழ்பெற்றார். அவர் எழுதிய [[நாராயணகுரு]] வாழ்க்கை வரலாறு முதன்மையானது. சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, [[எம்.கோவிந்தன்|'''எம்.கோவிந்தன்''']], '''[[வைக்கம் முகமது பஷீர்]]''' ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல்படைப்புகளாகக் கருதப்படுகின்றன. | |||
== அரசியல் == | |||
எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார். | எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார். | ||
Revision as of 10:02, 3 August 2025

எம். கே. சானு (17 அக்டோபர் 1928- 2 ஆகஸ்ட் 2025) கேரள சிந்தனையாளர். பேச்சாளர். நூலாசிரியர். நாராயணகுரு உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரிவாக எழுதியவர். நாராயணகுருவின் இயக்கத்துடனும், இடதுசாரி இயக்கத்துடனும் இணைந்து செயல்பட்டவர்.
பிறப்பு, கல்வி
எம்.கே. சானு 17 அக்டோபர் 1928 பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் எம்.சி.கேசவன், கே.பி.பவானி இணையருக்குப் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதல் மாணவராகத் தேறி முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
எம்.கே.சானு ரத்னம்மாவை மணந்தார்.எம்.எச், ரஞ்சித், எம்.எஸ்.கீதா, எம்.எஸ்.சீதா, எம்.எஸ்.ஹாரீஸ் ஆகியோர் வாரிசுகள்.
எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கொல்லம் எஸ்.என் கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி உட்பட வெவ்வேறு அரசுக் கல்லூரிகளில் ஆசிரியராக ஆனார். 1983ல் பணி ஓய்வு பெற்றார்.
இலக்கியவாழ்க்கை
1958ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ எம்.கே.சானுவின் முதல் நூல். 1960ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.
எம்.கே.சானு இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு என்னும் களங்களில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்காகவே அவர் புகழ்பெற்றார். அவர் எழுதிய நாராயணகுரு வாழ்க்கை வரலாறு முதன்மையானது. சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.கோவிந்தன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல்படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
அரசியல்
எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார்.