under review

வாள் மண்ணுநிலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 19: Line 19:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|31-Jul-2025, 18:39:58 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 1 August 2025

வாள் மண்ணுநிலை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. (மண்ணுதல்- கழுவுதல்) போருக்குப்பின் வாளை நீரில் முழுக்காட்டுவதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உயர்ந்தவர்கள் வாழ்த்தி நிற்க, தூய நீரால் முழுக்காட்டிய வாளின் மறப்பண்பினைச் சொல்லியது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

புண்ணிய நீரில் புரையோர் ஏத்த
மண்ணிய வாளின் மறம் கிளந்தன்று(கொளு 6.27)

வெண்பா

தீர்த்த நீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்
கூர்த்த வாள்மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்தும்
இடிஆர் பணை துவைப்ப இம்மதிலுள் வேட்டான்
புடையார் அறையாப் புகழ் (121)

பொருள்: உழிஞை வேந்தன், இரண்டாவது முறையும், நொச்சியரின் மதிலின் உள்ளே இடியைப் போன்ற முரசு முழங்கப் பண்ணி, சூழ்ந்துள்ள மன்னர் எல்லாரும் தனது புகழைச் சொல்லும்படியாகக் கூர்மையான கொற்ற வாளைப் புனித நீரால் கழுவினான்; மலர்களொடு நறுமணப் பொருள்கள் பிறவும் சொரிந்தான்; திசைகள் தோறும் தன்புகழே விளங்கக் களவேள்வியை விரும்பினான்.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:39:58 IST