under review

வேம்பு(பொதுவியல் திணை): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 19: Line 19:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|31-Jul-2025, 18:59:15 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 1 August 2025

வேம்பு பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. வேம்பு, வேப்பம் பூவைக் குறிக்கும். பாண்டியனுக்குரிய அடையாளப் பூவான வேப்பம்பூவைப் புகழ்வது வேம்பு என்னும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவருடனான போரின்போது பாண்டியன் தன் முடியில் சூடும் வேப்பம்பூவைப் புகழ்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி
சுரும்பு ஆர் முடிமிசைப் பூப் புகழ்ந்தன்று (கொளு 10.2)

வெண்பா

தொடிஅணிதோள் ஆடவர் தும்பை புனையக்
கொடுமணிதேர் கூட்டு அணங்கும் போழ்தின் - முடிஅணியும்
காத்தல்சால் செங்கோல் கடுமான் நெடுவழுதி
ஏத்தல் சார் வேம்பின் இணர் (241)

பொருள்: வீரர்கள் போர்ப்பூவைச் சூடிக்கொள்ளப் பாண்டியன் வேப்பம் பூக்கொத்தினைத் தன் மகுடத்தில் சூடிக்கொள்வான்.

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:59:15 IST