under review

யானை மறம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 19: Line 19:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|28-Jul-2025, 19:11:51 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 29 July 2025

யானை மறம் தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. யானைப் படையின் திறம் எனப் பொருள்படும். படையில் உள்ளவர்கள் தம் படைப்பிரிவிலுள்ள யானைகளின் திறனைப் பேசுவதும் போர் ஊக்கம் தருவதாகும்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கடல் போன்று பரந்ததாகவும் ஆரவாரம் மிக்கதாகவும் இருக்கின்ற படையினைக் கொண்ட மன்னனின் இளம் களிற்றின் வீரத்தைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

எழும் அரவக் கடல் தானையான்
மழகளிற்றின் மறம் கிளர்ந்தன்று
(கொளு 7.6)

வெண்பா

அடக்க அரும் தானை அலங்கு தார் மன்னர்
விடக்கும் உயிரும் இசையக் - கடல்படையுள்
பேயும் எருவையும் கூற்றும்தன் பின்படரக்
காயும் கழலான் களிறு (132)

பொருள்: யானையின் ஆற்றலால் பகைப்படைக்கு நேரப்போகிற அழிவினைக் குறித்து இரங்கிய, தும்பை மறவன் ஒருவனது கூற்று - "வீரக் கழலினை உடையானான தும்பை வேந்தனின் கொல்களிறானது,பகையரசரது கடல்போன்ற படையுள் புகுந்து, அடக்குதற்கரிய அவரது படையையும், அசைகின்ற மாலையுடைய அம் மன்னர்களது தசையையும், உயிரினையும் - உண்ணும்பொருட்டாகக் கழுகுகளும் கூற்றுவனும் தன்னைப் பின்தொடர்ந்து வரச் சென்று வெகுளுமே! "

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 19:11:51 IST