under review

புணரா இரக்கம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 20: Line 20:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|23-Jul-2025, 21:06:55 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 24 July 2025

புணரா இரக்கம் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. தலைவன் தான் கண்டு காதலுற்ற பெண்ணுடன் கூடாமையால் வந்த துன்பத்தைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் சுடரும் அணிகளை அணிந்த இப்பெண்ணைத் தழுவ இயலவில்லை என்ற பிறர் அறிய இயலாத துன்பத்தோடு தலைவன் தனிமையில் இருத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

உணரா எவ்வம் பெருக ஒளிஇழைப்
புணரா இரகடகமொடு புலம்பு தர வைகின்று(கொளு 14.8)

வெண்பா

இணர் ஆர் நறும் கோதை பல்வளையாள் கூட்டம்
புணராமல் பூசல் தரவும் - உணராது
தண்டா விழுப் படர் நலியவும்
உண்டால் இன்உயிர் ஓம்புதற்கு அரிதே (292)

பொருள்: மணம் மிக்க மாலையினையும் அழகிய வளையல்களையும் அணிந்த பெண்ணைத் தழுவுதல் கூடாமையால், பிறர் இகழக்கூடிய சூழல் உருவாகும் நிலையாலும் உள்ள வருத்தத்தாலும் என் உயிர் பாதுகாத்தற்கு அரியதாக இருக்கிறது.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2025, 21:06:55 IST