நலம் பாராட்டல்: Difference between revisions
Logamadevi (talk | contribs) (→வெண்பா) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 19: | Line 19: | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214552-19925 கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214552-19925 கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 20:20, 14 July 2025
நலம் பாராட்டல் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. தலைவன் தான் கண்டு வியந்த பெண்ணின் அழகைப் பாராட்டுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காதல் துயரம் மிகும்வண்ணம் பெண்ணின் அழகினைப் பாராட்டுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நல்நலம் பாராட்டின்று(கொளு 14.6)
வெண்பா
அம்என் கிளவி கிளி பயில ஆயிழை
கொம்மை வரிமுலை கோங்கு அரும்ப - இம்மலை
நறும் பூஞ்சாரலாம் கண்
குறும்சுனை மலர்ந்தன தடம்பெரும் கண்ணே (290)
பொருள்: தலைவன் கூற்று: அவளது இனிய குரலைக் கேட்டுக் கிளிகள் மொழி பேசிப் பழகுகின்றன; அவளுடைய மார்புகளைப் போலக் கோங்கு அரும்பை முகிழ்க்கிறது; அவளுடைய கண்களைப் போலக் குவளை மலரைச் சுனைகள் பூத்தன.
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page