being created

ஒளவை நோன்பு: Difference between revisions

From Tamil Wiki
Line 27: Line 27:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.hindutamil.in/news/spirituals/9942-.html அவ்வையார் நோன்பு -  என்.சுவாமிநாதன் - Hindu Tamil]
* [https://www.hindutamil.in/news/spirituals/9942-.html அவ்வையார் நோன்பு -  என்.சுவாமிநாதன் - Hindu Tamil]
* ஆடி ஔவையார் நோன்பு - tirunelveli
* [https://www.tirunelveli.today/ta/aadi-avvaiyar-nombu/ ஆடி ஔவையார் நோன்பு - tirunelveli]


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:03, 10 July 2025

ஒளவை

ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர்.

பார்க்க: அவ்வைச் சித்தர்

ஒளைவை நோன்பு

அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. நாஞ்சில் நாட்டில் ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழக்குடிக்கு அடுத்து அவ்வையார் அம்மனுக்கு என தனிக்கோவில் உள்ளது. இங்கு அவ்வைக்கு நெல்லியடி அம்மன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் தான் அவ்வையார் முக்தி நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாநகர்., பாளையம்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கதாகவும். இக்கோயில்களில் ஒளவையாரம்மன் வழிபடப்படுகிறார்.

ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டுமே மேற்கொள்கிற நோன்பு ஒளவை நோன்பு எனப்படும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் நோன்பு. இது தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

ஒளைவை நோன்பு முறை

ஆடிச்செவ்வாயன்று மாலையில் நீராடி நோன்பு கடைபிடிக்கும் வீட்டிலிருக்கும் ஆண்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டை சுத்தப்படுத்தி, செம்மண் இட்டு மெழுகி, கோலம் போட்டு நோன்பு கடைபிடிக்க தயார் ஆவார்கள். நோன்பில் கலந்து கொள்ளும் பெண்கள் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வரும் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், புங்க இலை, புளிய இலை ஆகியவற்றை ஒன்றாக கலந்து பூஜைக்கு பயன்படுத்துவார்கள். துவக்கமாக சாணத்தால் பிள்ளையார் பிடிச்சு வைக்க பூஜை ஆரம்பமாகும்.

அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து, உரலில் இட்டு கைகளால் இடித்து மாவாக்கி கொழுக்கட்டை தயார் செய்வார்கள். அவ்வையார் நோன்பில் இந்த கொழுக்கட்டைதான் நைவேத்தியத்துக்கு மிக முக்கியம் ஆகும். ஒளவயம்மனுக்கு உப்பு இல்லாத கூழும், கொழுக்கட்டையும் படைப்பர். கொழுக்கட்டை வீட்டிற்குத்தேவையான பொருட்களின் வடிவத்தில் படைப்பர். அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு எடுப்பர்.

அதன் பின்னர் திருவிளக்கை ஏற்றி வைத்து பூஜைகள் செய்ய தொடங்குவார்கள். இரவு பத்து மணிக்குமேல் நோன்பு தொடங்கி காலை ஐந்து மணி வரை நோன்பு மேற்கொள்வர். நோன்பிருக்கும் அறையில் கண்ணாடியை வைத்து அதில் அவ்வையம்மனின் உருவத்தை வரைவர். அதற்கு பூசைப் பொருள் படைப்பர்.

நோன்பு மேற்கொள்வர்களில் முதியவர் அவ்வையாரம்மனின் கதையைச் சொல்வார். கதை சொல்லும் போது புன்கு இலை, புளியிலை கொடுத்து கதை சொல்வது வழக்கம். பூஜையின் முடிவில், அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் பெண்கள் அனைவரும் தங்கள் மாங்கல்யத்தை காட்டுவார்கள். அந்த தண்ணீரில் தெரியும் பிம்பத்தை அனைவரும் கண்டு வணங்குவர். இறுதியில் நைவேத்தியமாக படைத்த உடைத்து வைத்த தேங்காய், வாழைப்பழம், கொழுக்கட்டை ஆகியவற்றை அனைவருக்கும் பிரித்து பிரசாதமாக வழங்குவார்கள். முதன்முதலில் கன்னிப்பெண்ணுக்கே கொழுக்கட்டை கொடுப்பார்கள்.

ஆண்களுக்கு இந்தக் கொழுக்கொட்டைகளைக் கொடுக்கக் கூடாது. பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை இல்லை.

பொழுது விடிவதற்குள் பூஜை செய்த தடமே தெரியாமல் வீட்டை சுத்தப்படுத்தி மொழுகி கழுவிய பின் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்று விடுவார்கள். அதன் பின்னர் தான் அந்த வீட்டு ஆண்கள் அந்த வீட்டிற்குள் நுழையலாம். இந்த வழிபாட்டை நடத்த வருடா வருடம் சுழற்சி முறையில் ஒவ்வொரு வீட்டை தேர்வு செய்வார்கள்.

தொன்மம்

ஆண்கள் ஏன் ஒளைவை நோன்புக்கு அனுமதியில்லை என்பதற்கு தொன்மக்கதை ஒன்று உள்ளது. கன்னியாகுமரியிலுள்ள குறத்தியறையில் காணப்படும் ஒளவை சிலையின் பின்புறம் ஒரு குகை இருந்ததது. அங்கு பெண்கள் தாங்கள் திருமணம் செய்யத் தேவையான நகை, ஆடைகளைக் கேட்டு கண்ணீரோடு வேண்டுவர். காலையில் துணிகளால் மூடப்பட்ட இரு தட்டுகள் இருக்கும். அதில் அவர்கள் கேட்ட பொருட்கள் இருக்கும். அதை ஒளவையாரம்மன் செய்வதை ஒரு முறை ஒரு ஆடவர் பார்த்து கூச்சல் போட்டதால் அன்று முதல் ஆண்களுக்கு ஒளை நோன்பில் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது. ஒளிந்திருந்து பார்த்த காரணத்தால் ஆடவருக்கு கொழுக்கட்டை கூட கொடுக்கக்கூடாது என்ற நம்பிக்கை பல ஆண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.