being created

ஒளவை நோன்பு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 4: Line 4:

== ஒளைவை நோன்பு ==
== ஒளைவை நோன்பு ==
அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. தோவாளை தாலுகாவில் ஆண், பெண் இருபாலருக்கும் அவ்வையால் என்ற பெயர் வைக்கப்பட்டது.  
அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஒளவையாரம்மன் வழிபடப்படுகிறார். ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டுமே மேற்கொள்கிற நோன்பு ஒளவை நோன்பு எனப்படும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் நோன்பு.

அவ்வையை தெய்வமாக்கி நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு ஒளவை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அவ்வையார் இந்த ஊரில்தான் இயற்கை எய்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வரும் பெண்கள் கொழுக்கட்டை படைத்து அவ்வையார் வழிபாடு செய்வார்கள்.  
== ஒளைவை நோன்பு முறை ==
ஆடிச்செவ்வாயன்று  மாலையில் நீராடி ஆடவர் இல்லாத வீட்டில் ஒரு அறையில் பெண்கள் கதவை அடைத்து விட்டு இரவு பத்து மணிக்குமேல் நோன்பு தொடங்கி காலை ஐந்து மணி வரை நோன்பு மேற்கொள்வர். ஒளவயம்மனுக்கு உப்பு இல்லாத கூழும், கொழுக்கட்டையும் படைப்பர். கொழுக்கட்டை வீட்டிற்குத்தேவையான பொருட்களின் வடிவத்தில் படைப்பர். அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு எடுப்பர்.  

அதில் மூன்று வேந்தர்களும் தங்குவதற்கு தனித்தனி பந்தல் போடப்பட்டது. அதனால்தான் இந்த ஊருக்கு முப்பந்தல் எனப் பெயர் வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் இங்கு சொல்லப்படுகிறது.
நோன்பிருக்கும் அறையில் கண்ணாடியை வைத்து அதில் அவ்வையம்மனின் உருவத்தை வரைவர். அதற்கு பூசைப் பொருள் படைப்பர். புன்கு இலை, புளியிலை, அரளி இலைகள் பூசைக்கு முக்கியப் பொருட்களாக உள்ளது.

இதேபோல் அழகியபாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடைவரைக் கோயிலையும் அந்தச் சுற்றுவட்டார மக்கள் அவ்வையார் அம்மன் கோயில் என்றே சொல்கிறார்கள். இந்தச் கோயில்களில் எல்லாம் ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூடி, கூழும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள்.
நோன்பு மேற்கொள்வர்களில் முதியவர் அவ்வையாரம்மனின் கதையைச் சொல்வார். கதை சொல்லும் போது புன்கு இலை, புளியிலை கொடுத்து கதை சொல்வது வழக்கம். முதன்முதலில் கன்னிப்பெண்ணுக்கே கொழுக்கட்டை கொடுப்பார்கள். ஆண்களுக்கு இந்தக் கொழுக்கொட்டைகளைக் கொடுக்கக் கூடாது. பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை இல்லை.

குமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் ஒரு அறையில் பெண்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்துவார்கள். பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். அதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்றும் ஒரு வழக்கம் இருக்கிறது.
== தொன்மம் ==
 
ஆண்கள் ஏன் ஒளைவை நோன்புக்கு அனுமதியில்லை என்பதற்கு தொன்மக்கதை ஒன்று உள்ளது. கன்னியாகுமரியிலுள்ள குறத்தியறையில் காணப்படும் ஒளவை சிலையின் பின்புறம் ஒரு குகை இருந்ததது. அங்கு பெண்கள் தாங்கள் திருமணம் செய்யத் தேவையான நகை, ஆடைகளைக் கேட்டு கண்ணீரோடு வேண்டுவர். காலையில் துணிகளால் மூடப்பட்ட இரு தட்டுகள் இருக்கும். அதில் அவர்கள் கேட்ட பொருட்கள் இருக்கும். அதை ஒளவையாரம்மன் செய்வதை ஒரு முறை ஒரு ஆடவர் பார்த்து கூச்சல் போட்டதால் அன்று முதல் ஆண்களுக்கு ஒளை நோன்பில் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது. ஒளிந்திருந்து பார்த்த காரணத்தால் ஆடவருக்கு கொழுக்கட்டை கூட கொடுக்கக்கூடாது என்ற நம்பிக்கை பல ஆண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை எதுவும் இல்லை” என்கிறார் பத்மநாபன்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 11:51, 10 July 2025

ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர்.

பார்க்க: அவ்வைச் சித்தர்

ஒளைவை நோன்பு

அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஒளவையாரம்மன் வழிபடப்படுகிறார். ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டுமே மேற்கொள்கிற நோன்பு ஒளவை நோன்பு எனப்படும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் நோன்பு.

ஒளைவை நோன்பு முறை

ஆடிச்செவ்வாயன்று மாலையில் நீராடி ஆடவர் இல்லாத வீட்டில் ஒரு அறையில் பெண்கள் கதவை அடைத்து விட்டு இரவு பத்து மணிக்குமேல் நோன்பு தொடங்கி காலை ஐந்து மணி வரை நோன்பு மேற்கொள்வர். ஒளவயம்மனுக்கு உப்பு இல்லாத கூழும், கொழுக்கட்டையும் படைப்பர். கொழுக்கட்டை வீட்டிற்குத்தேவையான பொருட்களின் வடிவத்தில் படைப்பர். அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு எடுப்பர்.

நோன்பிருக்கும் அறையில் கண்ணாடியை வைத்து அதில் அவ்வையம்மனின் உருவத்தை வரைவர். அதற்கு பூசைப் பொருள் படைப்பர். புன்கு இலை, புளியிலை, அரளி இலைகள் பூசைக்கு முக்கியப் பொருட்களாக உள்ளது.

நோன்பு மேற்கொள்வர்களில் முதியவர் அவ்வையாரம்மனின் கதையைச் சொல்வார். கதை சொல்லும் போது புன்கு இலை, புளியிலை கொடுத்து கதை சொல்வது வழக்கம். முதன்முதலில் கன்னிப்பெண்ணுக்கே கொழுக்கட்டை கொடுப்பார்கள். ஆண்களுக்கு இந்தக் கொழுக்கொட்டைகளைக் கொடுக்கக் கூடாது. பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை இல்லை.

தொன்மம்

ஆண்கள் ஏன் ஒளைவை நோன்புக்கு அனுமதியில்லை என்பதற்கு தொன்மக்கதை ஒன்று உள்ளது. கன்னியாகுமரியிலுள்ள குறத்தியறையில் காணப்படும் ஒளவை சிலையின் பின்புறம் ஒரு குகை இருந்ததது. அங்கு பெண்கள் தாங்கள் திருமணம் செய்யத் தேவையான நகை, ஆடைகளைக் கேட்டு கண்ணீரோடு வேண்டுவர். காலையில் துணிகளால் மூடப்பட்ட இரு தட்டுகள் இருக்கும். அதில் அவர்கள் கேட்ட பொருட்கள் இருக்கும். அதை ஒளவையாரம்மன் செய்வதை ஒரு முறை ஒரு ஆடவர் பார்த்து கூச்சல் போட்டதால் அன்று முதல் ஆண்களுக்கு ஒளை நோன்பில் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது. ஒளிந்திருந்து பார்த்த காரணத்தால் ஆடவருக்கு கொழுக்கட்டை கூட கொடுக்கக்கூடாது என்ற நம்பிக்கை பல ஆண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.