பின்தேர்க்குரவை: Difference between revisions
(Created page with "பின்தேர்க் குரவை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. தும்பைப் போரிலே வென்ற மன்னனின் படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின்...") |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 22: | Line 22: | ||
* [https://www.tamilvu.org/courses/degree/d021/d0214/html/d02141nd.htm தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | * [https://www.tamilvu.org/courses/degree/d021/d0214/html/d02141nd.htm தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
* [http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1434 தேர்க்குரவைகள்-வரலாறு.காம்] | * [http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1434 தேர்க்குரவைகள்-வரலாறு.காம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 10:49, 10 July 2025
பின்தேர்க் குரவை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. தும்பைப் போரிலே வென்ற மன்னனின் படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றி கொண்டாடப்படுகிறது.
தேரின் பின்னே ஆடுதல் பின் தேர்க்குரவை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கணைய மரத்தைப் போன்று வலிய தோள்களையுடைய அரசனது வெற்றி மிக்க தேரின் முன் வலிமையில் சிறந்த வீரர் ஆடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கழுஉறழ் திணிதோள் வேந்தன் வெல்தேர்
முழுவலி வயவர் முன் ஆடின்று(கொளு 7.17)
வெண்பா
ஆன்ஆ வயவர் முன் ஆட அமர் களத்து
வான் ஆர் மின் ஆகி வழி நுடங்கும் - நோனாக்
கழுமணிப் பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும்
குழுமணித் திண் தேர்க் கொடி (143)
பொருள் : பகை பொறாதவனும், மணிகளால் அமைந்த அணிகலன்களைப் பூண்டவனும், வீரக் கழல் அணிந்தவனும், போர் விருப்பினை உடையோனுமாகிய தும்பை வேந்தனின் ஊர்கின்ற திரண்ட மணிகளையுடைய திண்ணிய தேரின் கொடியானது, வீரர்கள் தேர்முன் ஆடிவர, அமர்க்களத்தே, மின்னலைப் போன்ற ஒளியுடன் ஆடிவருகிறது.
உசாத்துணை
✅Finalised Page