அர்ச். லூர்து மாதா அம்மானை: Difference between revisions

From Tamil Wiki
ASN (talk | contribs)
Page Created: Para Added and Edited: Image Added: Link Created: Proof Checked
 
Corrected typo errors;
Line 16: Line 16:

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
லூர்து மாதா அம்மானை நூலில் அன்னையின் பெருமை, பெர்னதெத் வாழ்வில் பட்ட துயரங்கள், அவளுக்கு அன்னை காட்சி அளித்துத் துயர் கலைந்தது, அன்னையின் சிறப்புத் தோற்றம், வெண்ணிற ஆடையின் தோற்றப்பொலிவு, காலில் இருக்கும் ரோஜா மாலை, கையில் ஏந்திருக்கும் ஜெபமாலை, விண்ணோக்கிய பார்வை பற்றிய சிறப்புகள் இடம்பெற்றன. அன்னை மரியாளின் மாட்சி, அன்னை செய்த புதுமைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.  

== பாடல் ==
== பாடல் ==

Revision as of 01:14, 30 June 2025

அர்ச். லூர்து மாதா அம்மானை (அர்ச்சியசிஷ்ட லூர்து மாதா அம்மானை; புனித லூர்து மாதா அம்மானை) (முதல் பதிப்பு: 1930), லூர்து மாதாவைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு இயற்றப்பட்ட அம்மானை இலக்கிய நூல். இதனை இயற்றியவர் யாகப்ப முதலியார்.

(அர்ச் என்பது அர்ச்சியசிஷ்ட என்பதன் சுருக்கம். இதற்கு ‘புனிதம்’ என்பது பொருள்)

வெளியீடு

அர்ச்சியசிஷ்ட லூர்து மாதா அம்மானை எனப்படும் அர்ச். லூர்து மாதா அம்மானை நூலை, சென்னை அருள் அண்டு கம்பெனி, 1930-ல் பதிப்பித்து வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பை, குறிப்புரையுடன் எழுதி, 1987-ல், திருச்சி ஆரோக்கியம் பதிப்பகம் மூலம், ஆ.பி. அந்தோணி இராசு பதிப்பித்தார். அர்ச். லூர்து மாதா அம்மானை நூலை இயற்றியவர் யாகப்ப முதலியார்.

ஆசிரியர் குறிப்பு

யாகப்ப முதலியார் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிஞர். பாளையங்கோட்டை உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை எழுத்தராகப் பணியாற்றினார். கிறித்தவம் சார்ந்த பல நூல்களை எழுதினார்.

நூல் அமைப்பு

அர்ச். லூர்து மாதா அம்மானை, 772 கண்ணிகளையும், 12 விருத்தப்பாக்களையும், 35 உட்தலைப்புகளையும் கொண்டது. நூலின் தொடக்கத்தில் சிறப்புப் பாயிரம் இடம்பெற்றது. தொடர்ந்து காப்பு, கடவுள் வாழ்த்து, அவையடக்கம், மரியாள் வணக்கம், சூசையப்பர் வணக்கம் ஆகியன இடம்பெற்றன.

லூர்து அன்னை வரலாறு

ஃபிரான்ஸ் நாட்டின் பிபரனிஸ் மலை அடிவாரத்தில் லூர்து என்னும் குன்று உள்ளது. அங்கு பிரான்சிஸ் சுபிருஸ் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் பெர்னதெத். பெர்னதெத்திற்கு லூர்து நகரை அடுத்துள்ள நசபியேல் என்ற குன்றின் மீது அன்னை மரியம்மை காட்சி அளித்தார். ‘நானே அமல உற்பவி’’ என்று கூறி விடைபெற்றார். அன்னை அவ்வாறு காட்சி கொடுத்த நாள், பிப்ரவரி 11. அந்த நாளில் லூர்து அன்னையின் திருநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

லூர்து மாதா அம்மானை நூலில் அன்னையின் பெருமை, பெர்னதெத் வாழ்வில் பட்ட துயரங்கள், அவளுக்கு அன்னை காட்சி அளித்துத் துயர் கலைந்தது, அன்னையின் சிறப்புத் தோற்றம், வெண்ணிற ஆடையின் தோற்றப்பொலிவு, காலில் இருக்கும் ரோஜா மாலை, கையில் ஏந்திருக்கும் ஜெபமாலை, விண்ணோக்கிய பார்வை பற்றிய சிறப்புகள் இடம்பெற்றன. அன்னை மரியாளின் மாட்சி, அன்னை செய்த புதுமைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

வெண்ணிற நற்கலை யுடுத்திப் பூங்கதிர்க

ளணிந்திரு மேனியாளை

வண்பதத்தால் ரோஜை செடி மிதித்து

செபமாலை கரமேந்தினாளை

கண்மணி வான்புகழ் நீலக் கற்புகச்சை

விடைதனிலே கட்டினாளை

மதிப்பீடு

இயேசு கிறிஸ்துவின் தாயான அன்னை மரியாள் மீது பல சிற்றிலக்கியங்கள் புனையப்பட்டன. அவற்றுள் லூர்து அன்னை மீது இயற்றப்பட்டஅம்மானை இலக்கிய நூலாகவும், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய கிறித்தவ அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அர்ச். லூர்து மாதா அம்மானை இலக்கிய நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  1. அர்ச். லூர்து மாதா அம்மானை, யாகப்ப முதலியார், ஆரோக்கியம் பதிப்பகம், திருச்சி; இரண்டாம் பதிப்பு: 1987.
  2. Story of Lourdes & Saint Bernadette

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.