வேத்தியல்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Jayashree (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
வேத்தியல் [[கரந்தைத் திணை]]யின் துறைகளில் ஒன்று. மறவர்கள் தம்முடைய வேந்தனின் இயல்பைப் பெரிதும் வியந்து கூறுவது வேத்தியல்.
வேத்தியல் [[கரந்தைத் திணை]]யின் துறைகளில் ஒன்று. மறவர்கள் தம்முடைய வேந்தனின் இயல்பைப் பெரிதும் வியந்து கூறுவது வேத்தியல். வேத்தியல் மலிபு என்றும் அழைக்கப்படுகிறது.


==விளக்கம்==
==விளக்கம்==

Revision as of 01:38, 1 April 2025

வேத்தியல் கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. மறவர்கள் தம்முடைய வேந்தனின் இயல்பைப் பெரிதும் வியந்து கூறுவது வேத்தியல். வேத்தியல் மலிபு என்றும் அழைக்கப்படுகிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தோள் கொண்டு மலைவதில் வல்லவனான, மறத்தைப் பொருந்திய கரந்தை மன்னனின் படைவீரரும் வாட்போரில் வலிமையுடையவருமாகிய கரந்தை மறவர்கள் அவனைப் புகழ்ந்து கூறுவது வேத்தியல் மலிபு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

தோள்வலிய வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று (கொளு.2.14)

வெண்பா

அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடைநிழல் கீழ்த் - தங்கிச்
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்றடையார் வேல்வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும் ( 34)

பொருள்: தேன் சொரியும் வெற்றி மாலையை உடைய நம் மன்னனின் குடைநிழலில் தங்கி, போர் புரிந்து, பகைவரின் வேலின் முனையில் உயிர் விடும் இந்த வாழ்வு உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியானது.

மன்னனின் வெற்றிப்பெருமிதம் சிறப்பிக்கப்படுகிறது.

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.