கட்காஞ்சி(கள் காஞ்சி): Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Jayashree (talk | contribs)
No edit summary
Line 24: Line 24:
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213553-19680 காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213553-19680 காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]  


{{Being created}}
 
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:35, 18 March 2025

கக்காஞ்சி(கள் காஞ்சி) காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சி மன்னன் தனது மறவர்க்குக் கள் வழங்கியதைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தேன் மலிந்து, வாசனை உடைய மாலையை அணிந்த காஞ்சி மன்னன், மறமும் வலிமையும் வாய்ந்த தனது மறவர் போரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணி அவர்களுக்குக் கள்ளினை வழங்கியதைக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 நறமலியு நறுந்தாரோன்
மறமைந்தர்க்கு மட்டீந்தன்று. - (கொளு 4.21)

வெண்பா

ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில்
மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும்(81)

பொருள்: காஞ்சி மன்னன் தன் மறவர்கள் கள் உண்டு மகிழ்ந்தாடுவதற்கு முன்னரே, இளம் மறவனுக்கு விரும்பத்தக்க கள்ளை வார்த்தான். இனிப் பகைவர்க்குத் தூக்கம் ஒழிவதாக. ஏனெனில், கள்வழங்கப்படுவதற்கு முன்பே களித்தாடியவன், கள் பெற்ற பின்னர் எந்நேரமும் போரெனப் புகுவான்; எனவே விழித்திருங்கள்.

உசாத்துணை

காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.