first review completed

ரவிசுப்பிரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
(changed single quotes)
Line 7: Line 7:
ரவி சுப்ரமணியம் பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர். சாகித்ய அக்காதமியில் உறுப்பினராக 2003 முதல் 2007 வரை இருந்தார். பாவலர் விருது சாரல் விருது போன்றவற்றின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர். 5-வது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலையின் வருகைதரு பேராசிரியராக 2020-ல் பணியாற்றினார்.

ரவி சுப்ரமணியம் மரபிசை பயின்றவர். 80 தமிழ் நவீனக்கவிதைகளுக்கு இசையமைத்தார்.ஒடிசி நடனநாடகமான ‘உடையவர்’ ஐ இயக்கினார். சுப்ரிதா திரிலோக் நடித்த இந்த நாடகம் 2017-ல் அரங்கேறியது.
ரவி சுப்ரமணியம் மரபிசை பயின்றவர். 80 தமிழ் நவீனக்கவிதைகளுக்கு இசையமைத்தார்.ஒடிசி நடனநாடகமான 'உடையவர்’ ஐ இயக்கினார். சுப்ரிதா திரிலோக் நடித்த இந்த நாடகம் 2017-ல் அரங்கேறியது.

== ஊடகப்பணிகள்  ==
== ஊடகப்பணிகள்  ==
Line 64: Line 64:
* ஜெயகாந்தன் - "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்"<ref>[https://www.youtube.com/watch?v=ahC22jv1JjQ&ab_channel=PaintingWithLife-RaviSubramaniyan எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - ஜெயகாந்தன் ஆவணப்படம் | YouTube]</ref>

* சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் - "சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்"<ref>[https://www.youtube.com/watch?v=q5NSUSjLAms&ab_channel=PaintingWithLife-RaviSubramaniyan சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் - ஆவணப்படம் | YouTube]</ref>

* திருலோக சீத்தாராம் - ”திருலோகம் என்றொரு கவி ஆளுமை”<ref>[https://www.youtube.com/watch?v=m9u2KOygB3g&ab_channel=PaintingWithLife-RaviSubramaniyan திருலோகம் என்றொரு கவி ஆளுமை - ஆவணப்படம் | youtube]</ref>
* திருலோக சீத்தாராம் - "திருலோகம் என்றொரு கவி ஆளுமை"<ref>[https://www.youtube.com/watch?v=m9u2KOygB3g&ab_channel=PaintingWithLife-RaviSubramaniyan திருலோகம் என்றொரு கவி ஆளுமை - ஆவணப்படம் | youtube]</ref>
* பாலசந்தர் ஆவணப்படம்  
* பாலசந்தர் ஆவணப்படம்  

Revision as of 09:06, 23 August 2022

ரவி சுப்ரமணியன்

ரவி சுப்ரமணியன் ( ) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியலாளர் மற்றும் இசைக்கலைஞர். ஜெயகாந்தன், திருலோகசீதாராம், மா.அரங்கநாதன் போன்றவர்களைப்பற்றிய ஆவணப்படங்களை இயக்கியவர். தமிழ்ப்புதுக்கவிதைகளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இசையமைத்து பாடியவர்.

இலக்கிய வாழ்க்கை

கவிஞராக அறிமுகமான ரவி சுப்ரமணியனின் முதல் தொகுதி 1989-ல் வெளிவந்த ஒப்பனை முகங்கள். கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்து தொலைக்காட்சி ஊடகத்தில் ஈடுபட்டார். நூறுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை தொலைக்காட்சிகளுக்காக இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்து தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படம் அவற்றில் முக்கியமானது. மா.அரங்கநாதன், திருலோக சீதாராம் ஆகியோரைப்பற்றிய ஆவணப்படங்கள் முதன்மையான கொடைகள்.

ரவி சுப்ரமணியம் பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர். சாகித்ய அக்காதமியில் உறுப்பினராக 2003 முதல் 2007 வரை இருந்தார். பாவலர் விருது சாரல் விருது போன்றவற்றின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர். 5-வது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலையின் வருகைதரு பேராசிரியராக 2020-ல் பணியாற்றினார்.

ரவி சுப்ரமணியம் மரபிசை பயின்றவர். 80 தமிழ் நவீனக்கவிதைகளுக்கு இசையமைத்தார்.ஒடிசி நடனநாடகமான 'உடையவர்’ ஐ இயக்கினார். சுப்ரிதா திரிலோக் நடித்த இந்த நாடகம் 2017-ல் அரங்கேறியது.

ஊடகப்பணிகள் 

  • இயக்குனரும், படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராக
  • நிகழ்ச்சி தயாரிப்பாளர் விஜய், ஜெயா டிவி
  • சென்னை ஆன்லைன், ஆறாம்திணை இணைய இதழ்களின் ஊடக ஒருங்கிணைப்பாளர்
  • தூரதர்சன் மற்றும் சன் டிவியின் சுதந்திர நிகழ்ச்சி தயாரிப்பாளர்
  • சி.ஜெ.பாஸ்கர் இயக்கிய பெண் திரைத்தொடரின் பாடலாசிரியர், திரைக்கதையாளர். .
  • அனல் காற்று படத்தின் பாடலாசிரியர்
  • பி கிரேட் நாடக நடிகர் ஆல் இந்தியா ரேடியோ 1986 முதல்
  • தாமரை  என்னும் குறும்பட இயக்குநர்

விருதுகள்

  • 1991 - தமிழக அரசு விருது
  • 1996 - திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • 2005 - நியூஜெர்ஸி தமிழ்சங்க விருது
  • 2015 - சிற்பி இலக்கிய விருது
  • 2017 - தி க சி இயற்றமிழ் விருது
  • 2018 - மா அரங்கநாதன் விருது
  • 2018 - தமிழ் வித்தகர் விடுது
  • 2018 - தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
  • 2019 - ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
  • 2021 - இலக்கியப்பேராளுமை விருது

நூல்கள்

கவிதைகள்
  • ஒப்பனை முகங்கள் - 1989
  • காத்திருப்பு - 1995
  • காலாதீத இடைவெளியில் - 2000
  • சீம்பாலில் அருந்திய நஞ்சு - 2006
  • விதானத்துச் சித்திரம் - 2017
கட்டுரைகள்
  • ஆளுமைகள் தருணங்கள் - 2014
  • நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் - 2020
தொகுப்புகள்
  • வண்ணதாசன் கடிதங்கள் - 1997
  • பாலகுமாரனின் தேர்ந்தெடுத்த கதைகள் - 2016
  • எம்.வி.வெங்கட்ராம் கதைகள்  - 2021
மொழியாக்கம்
  • That was a Different Season (Selected Poems) English Translation Poems - 2018

ஆவணப்படங்கள்

  • இந்திரா பார்த்தசாரதி - "இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்"[1]
  • மா. அரங்கநாதனும் - "மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்"[2]
  • ஜெயகாந்தன் - "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்"[3]
  • சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் - "சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்"[4]
  • திருலோக சீத்தாராம் - "திருலோகம் என்றொரு கவி ஆளுமை"[5]
  • பாலசந்தர் ஆவணப்படம்

உசாத்துணை

Documenting writer who propagated Bharati’s works - The Hindu ]

இணைப்புகள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.