under review

கோவி. மணிசேகரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:
கோவி. மணிசேகரன், மே 2, 1927 அன்று, வேலூரை அடுத்த சல்லிவன்பேட்டையில், கோவிந்தராசன் - பட்டம்மாள் இணையருக்கு பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். குடும்பச் சூழலால் முறையான பள்ளிக் கல்வி இவருக்கு அமையவில்லை. சிலகாலம் அச்சுக்கூட உதவியாளராகப் பணியாற்றினார். பின் வேலூரில் பேராசிரியா் காரழகனாரிடம் தமிழ் பயின்றார். தனித்தேர்வராகத் தேர்வு எழுதி ‘மெட்ரிக்’ தேர்ச்சி பெற்றார். வேலூர் அண்ணல் தங்கோவிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.  

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கா்நாடக இசையும், தமிழிசையும் பயின்றாா். ‘சங்கீத பூக்ஷணம்’ பட்டம் பெற்றார். [[சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை|சித்தூர் சுப்பிரமணிய]]த்திடம் முறையாக இசை பயின்றார். உடன் பயின்றவர் [[மதுரை சோமு]]. சம்ஸ்கிருதமும் கற்றுக் கொண்டார்.  
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கா்நாடக இசையும், தமிழிசையும் பயின்றாா். ‘சங்கீத பூஷணம்’ பட்டம் பெற்றார். [[சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை|சித்தூர் சுப்பிரமணிய]]த்திடம் முறையாக இசை பயின்றார். உடன் பயின்றவர் [[மதுரை சோமு]]. சம்ஸ்கிருதமும் கற்றுக் கொண்டார்.  
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. மகன்கள் அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்றும், மகள்கள் பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி  
1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. மகன்கள் அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன், மகள்கள் பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
கோவி மணிசேகரன் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] மற்றும் [[மு. வரதராசன்|டாக்டர் மு.வ]].வின் எழுத்துக்கள்ளால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார்.  
கோவி மணிசேகரன் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] மற்றும் [[மு. வரதராசன்|டாக்டர் மு.வ]].வின் எழுத்துக்கள்ளால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார்.  
Line 16: Line 16:
கோவி. மணிசேகரன் எழுதிய முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுதியான ‘கற்பனாஞ்சலி’ அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.
கோவி. மணிசேகரன் எழுதிய முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுதியான ‘கற்பனாஞ்சலி’ அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.
====== நாடகம் ======
====== நாடகம் ======
சி.என். அண்ணாத்துரையின் நாடகங்களால் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன் 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை, ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களை எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’  என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
சி.என். அண்ணாத்துரையின் நாடகங்களால் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன் 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை', ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களை எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’  என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
====== புனைவுகள் ======
====== புனைவுகள் ======
[[File:கோவி மணிசேகரன் இயக்குநராக.jpg|thumb|கோவி மணிசேகரன் இயக்குநராக]]
[[File:கோவி மணிசேகரன் இயக்குநராக.jpg|thumb|கோவி மணிசேகரன் இயக்குநராக]]
வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. [[குமுதம்]], விகடன், [[கல்கி (வார இதழ்)|கல்கி]], [[கலைமகள்]], குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார்.

கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992-, சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.
கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.
== இதழியல்  ==
== இதழியல்  ==
கோவி மணிசேகரன் 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 'முருகு' மற்றும் 'மங்களம்' போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

Line 26: Line 26:
கோவி. மணிசேகரன் 1958-ல் வெளியான ‘பூலோகரம்பை’ படத்தில் முதன்முதலாகப் பாடல் எழுதினார். 1954-ம் ஆண்டு வெளியான ‘நல்லகாலம்’ படத்திற்கு வசனம் எழுதினார். பின்னர் இயக்குநர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். ‘அரங்கேற்றம்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

கோவி மணிசேகரன் தான் எழுதிய தென்னங்கீற்று’ என்ற நாவலை 1975 ல் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். அது கன்னடத்தில் வெற்றி பெற்று சிறந்த திரைப்படத்திற்கான நிரீக்ஷே விருதையும் பெற்றது. தமிழில் தோல்வி அடைந்தது. தன் ‘மனோரஞ்சிதம்’ என்ற நாவலைப் படமாக்க்க முயன்று அப்படம் பாதியிலேயே நின்று போனது. கோவி. மணிசேகரனின் ‘அகிலா’ என்ற கதை ‘மீண்டும் பல்லவி’ என்ற பெயரில் ஏ.பி.ஜெகதீஷ் இயக்கத்தில் 1986 ல் திரைப்படமானது.
கோவி மணிசேகரன் தான் எழுதிய 'தென்னங்கீற்று' என்ற நாவலை 1975 ல் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். அது கன்னடத்தில் வெற்றி பெற்று சிறந்த திரைப்படத்திற்கான நிரீக்ஷே விருதையும் பெற்றது. தமிழில் தோல்வி அடைந்தது. தன் ‘மனோரஞ்சிதம்’ என்ற நாவலைப் படமாக்க்க முயன்று அப்படம் பாதியிலேயே நின்று போனது. கோவி. மணிசேகரனின் ‘அகிலா’ என்ற கதை ‘மீண்டும் பல்லவி’ என்ற பெயரில் ஏ.பி.ஜெகதீஷ் இயக்கத்தில் 1986 ல் திரைப்படமானது.

கோவி மணிசேகரன் 1980ல் ‘யாகசாலை’ என்ற நாவலை படமாகத் தயாரித்து இயக்கி வெளியிட்டார். படம் ஓடாததால் பெரும் நஷ்டமடைந்தார். அது முதல் திரைப்படத் துறையிலிருந்து விலகினார்..  
கோவி மணிசேகரன் 1980ல் ‘யாகசாலை’ என்ற நாவலை படமாகத் தயாரித்து இயக்கி வெளியிட்டார். படம் ஓடாததால் பெரும் நஷ்டமடைந்தார். அது முதல் திரைப்படத் துறையிலிருந்து விலகினார்..  
Line 49: Line 49:
*கலைமாமணி விருது 2019  
*கலைமாமணி விருது 2019  
== மறைவு ==
== மறைவு ==
வயது மூப்பால், கோவி. மணிசேகரன் நவம்பர் 18, 2021-ல், காலமானார்.
வயது மூப்பால் கோவி. மணிசேகரன் நவம்பர் 18, 2021-ல் காலமானார்.
== ஆவணம் ==
== ஆவணம் ==
கோவி. மணிசேகரனின் வாழ்க்கை வரலாற்றை ‘கோவி.மணிசேகரன் எழுத்தும் - வரலாறும்’ என்ற தலைப்பில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நூலாக வெளியிட்டுள்ளன.
கோவி. மணிசேகரனின் வாழ்க்கை வரலாற்றை ‘கோவி.மணிசேகரன் எழுத்தும் - வரலாறும்’ என்ற தலைப்பில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நூலாக வெளியிட்டுள்ளன.
Line 55: Line 55:
கோவி மணிசேகரன் தமிழில் நவீன இலக்கியத்திற்குரிய குறிப்பிடத்தக்க விருதுகள் அனைத்தையும் பெற்றவர். ஆனால் அவர் இலக்கியத்தகுதி கொண்ட எவற்றையும் எழுதவில்லை என்பதே இலக்கிய விமர்சன மதிப்பீடாக இருந்தது. 1992 ல் கோவி மணிசேகரனுக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டபோது அதை கடுமையாகக் கண்டித்து இலக்கிய இதழான [[சுபமங்களா]] கட்டுரைகளை வெளியிட்டது.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
பொது வாசிப்பிற்குரிய நாவல்கள், சிறுகதைகளை எழுதியவர் கோவி. மணிசேகரன். மரலக்கியமும் பயின்றவர் என்பதால் இவரது படைப்புகளின் மொழிடையில் மரபான அணிகளும் சொல்லாட்சிகளும் அமைந்திருந்தன. கோவி மணிசேகரனின் நாவல்கள் வழக்கமான தொடர்கதைக் கதைக்கட்டமைப்பும், சொற்பொழிவுத்தன்மை கொண்ட நடையும் உடையவை. அவருடைய வரலாற்று நாவல்கள் வரலாற்றுச் சார்பு மிகக்குறைவானவை.  
பொது வாசிப்பிற்குரிய நாவல்கள், சிறுகதைகளை எழுதியவர் கோவி. மணிசேகரன். மரபிலக்கியமும் பயின்றவர் என்பதால் இவரது படைப்புகளின் மொழிநடையில் மரபான அணிகளும் சொல்லாட்சிகளும் அமைந்திருந்தன. கோவி மணிசேகரனின் நாவல்கள் வழக்கமான தொடர்கதைக் கதைக்கட்டமைப்பும், சொற்பொழிவுத்தன்மை கொண்ட நடையும் உடையவை. அவருடைய வரலாற்று நாவல்கள் வரலாற்றுச் சார்பு மிகக்குறைவானவை.  
[[File:Kovi.mani books 1.jpg|thumb|கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-1]]
[[File:Kovi.mani books 1.jpg|thumb|கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-1]]
[[File:Kovi.mani books 2.jpg|thumb|கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-2]]
[[File:Kovi.mani books 2.jpg|thumb|கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-2]]
Line 238: Line 238:
* [https://archive.ph/sgyNJ கோவி.மணிசேகரனின் தென்னங்கீற்று]
* [https://archive.ph/sgyNJ கோவி.மணிசேகரனின் தென்னங்கீற்று]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{first review completed}}
{{finalised}}

Revision as of 05:54, 22 August 2022

கோவி மணிசேகரன்
கோவி. மணிசேகரன்
செம்பியன் செல்வி
கோவி மணிசேகரன்
கோவி மணிசேகரன், எம்.எஸ்.விஸ்வநாதனுடன்

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார்.

பிறப்பு, கல்வி

கோவி. மணிசேகரன், மே 2, 1927 அன்று, வேலூரை அடுத்த சல்லிவன்பேட்டையில், கோவிந்தராசன் - பட்டம்மாள் இணையருக்கு பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். குடும்பச் சூழலால் முறையான பள்ளிக் கல்வி இவருக்கு அமையவில்லை. சிலகாலம் அச்சுக்கூட உதவியாளராகப் பணியாற்றினார். பின் வேலூரில் பேராசிரியா் காரழகனாரிடம் தமிழ் பயின்றார். தனித்தேர்வராகத் தேர்வு எழுதி ‘மெட்ரிக்’ தேர்ச்சி பெற்றார். வேலூர் அண்ணல் தங்கோவிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கா்நாடக இசையும், தமிழிசையும் பயின்றாா். ‘சங்கீத பூஷணம்’ பட்டம் பெற்றார். சித்தூர் சுப்பிரமணியத்திடம் முறையாக இசை பயின்றார். உடன் பயின்றவர் மதுரை சோமு. சம்ஸ்கிருதமும் கற்றுக் கொண்டார்.

தனி வாழ்க்கை

1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. மகன்கள் அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன், மகள்கள் பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி

இலக்கிய வாழ்க்கை

கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்கள்ளால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார்.

கவிதை

கோவி. மணிசேகரன் எழுதிய முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுதியான ‘கற்பனாஞ்சலி’ அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.

நாடகம்

சி.என். அண்ணாத்துரையின் நாடகங்களால் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன் 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை', ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களை எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’  என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

புனைவுகள்
கோவி மணிசேகரன் இயக்குநராக

வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கி, கலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.

இதழியல்

கோவி மணிசேகரன் 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 'முருகு' மற்றும் 'மங்களம்' போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரைப்படம்

கோவி. மணிசேகரன் 1958-ல் வெளியான ‘பூலோகரம்பை’ படத்தில் முதன்முதலாகப் பாடல் எழுதினார். 1954-ம் ஆண்டு வெளியான ‘நல்லகாலம்’ படத்திற்கு வசனம் எழுதினார். பின்னர் இயக்குநர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். ‘அரங்கேற்றம்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

கோவி மணிசேகரன் தான் எழுதிய 'தென்னங்கீற்று' என்ற நாவலை 1975 ல் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். அது கன்னடத்தில் வெற்றி பெற்று சிறந்த திரைப்படத்திற்கான நிரீக்ஷே விருதையும் பெற்றது. தமிழில் தோல்வி அடைந்தது. தன் ‘மனோரஞ்சிதம்’ என்ற நாவலைப் படமாக்க்க முயன்று அப்படம் பாதியிலேயே நின்று போனது. கோவி. மணிசேகரனின் ‘அகிலா’ என்ற கதை ‘மீண்டும் பல்லவி’ என்ற பெயரில் ஏ.பி.ஜெகதீஷ் இயக்கத்தில் 1986 ல் திரைப்படமானது.

கோவி மணிசேகரன் 1980ல் ‘யாகசாலை’ என்ற நாவலை படமாகத் தயாரித்து இயக்கி வெளியிட்டார். படம் ஓடாததால் பெரும் நஷ்டமடைந்தார். அது முதல் திரைப்படத் துறையிலிருந்து விலகினார்..

தொலைக்காட்சி

சென்னைத் தொலைக்காட்சியில் கோவி மணிசேகரன் எழுதி இயக்கிய “ஊஞ்சல் ஊர்வலம்” என்ற தொடர் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ‘திரிசூலி’, ‘அக்னிப் பரீட்சை’ போன்ற தொடர்கள் வெளியாகின.

விருதுகள்

  • தமிழக அரசின் ராஜராஜன் விருது 1984
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது 1984
  • தமிழ் வளர்ச்சித்துறை விருது
  • சாகித்ய அகாதமி விருது 1992
  • கலைஞர் விருது
  • எம்.ஜி.ஆர். விருது
  • வி.ஜி.பி. விருது
  • தினத்தந்தி நிறுவனம் வழங்கிய சி. பா. ஆதித்தனார் விருது 2008
  • குழந்தை எழுத்தாளர் சங்க விருது
  • காஞ்சி காமகோடி பீட விருது
  • முகம் மாமணி விருது
  • புதுவை வ.உ.சி. விருது
  • வேலூர் தமிழிசைச் சங்கம் வழங்கிய இசைச்செல்வம் பட்டம்
  • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு
  • லில்லி தேவசிகாமணிப் பரிசு 1992
  • கலைமாமணி விருது 2019

மறைவு

வயது மூப்பால் கோவி. மணிசேகரன் நவம்பர் 18, 2021-ல் காலமானார்.

ஆவணம்

கோவி. மணிசேகரனின் வாழ்க்கை வரலாற்றை ‘கோவி.மணிசேகரன் எழுத்தும் - வரலாறும்’ என்ற தலைப்பில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நூலாக வெளியிட்டுள்ளன.

விவாதங்கள்

கோவி மணிசேகரன் தமிழில் நவீன இலக்கியத்திற்குரிய குறிப்பிடத்தக்க விருதுகள் அனைத்தையும் பெற்றவர். ஆனால் அவர் இலக்கியத்தகுதி கொண்ட எவற்றையும் எழுதவில்லை என்பதே இலக்கிய விமர்சன மதிப்பீடாக இருந்தது. 1992 ல் கோவி மணிசேகரனுக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டபோது அதை கடுமையாகக் கண்டித்து இலக்கிய இதழான சுபமங்களா கட்டுரைகளை வெளியிட்டது.

இலக்கிய இடம்

பொது வாசிப்பிற்குரிய நாவல்கள், சிறுகதைகளை எழுதியவர் கோவி. மணிசேகரன். மரபிலக்கியமும் பயின்றவர் என்பதால் இவரது படைப்புகளின் மொழிநடையில் மரபான அணிகளும் சொல்லாட்சிகளும் அமைந்திருந்தன. கோவி மணிசேகரனின் நாவல்கள் வழக்கமான தொடர்கதைக் கதைக்கட்டமைப்பும், சொற்பொழிவுத்தன்மை கொண்ட நடையும் உடையவை. அவருடைய வரலாற்று நாவல்கள் வரலாற்றுச் சார்பு மிகக்குறைவானவை.

கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-1
கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-2
கோவி. மணிசேகரன் புத்தகங்கள்-3

நூல்கள்

கவிதை நூல்கள்
  • கற்பனாஞ்சலி
  • கோவி.ராமாயணம்
நாடகங்கள்
  • புரட்சிப் புலவன் அம்பிகாபதி
  • ஜுலியஸ் ஸீஸர்   
  • ஹாம்லெட்
  • பிறவிப் பெருங்கடல்   
  • சுமித்திரை   
  • ஜாதிமல்லி   
  • நான்கு திசைகள்   
  • ராட்சஸன்
சிறுகதைத் தொகுப்புகள்
  • தாயும் சேயும்
  • வாழ்வின் விளக்குகள்   
  • பூந்தாது   
  • தாகத் தேர்   
  • காலம் சொல்லும் கதை   
  • உயிரும் ஒளியும்   
  • சரித்திரக் கதைக் களஞ்சியம்
  • காளையார் கோயில் ரதம்   
  • மஞ்சள் குங்குமம் கதைகள்   
  • இதயங்கள்   
  • நீலாம்பரி   
  • கல்லுளிமங்கன்   
  • தொட்டில் பழக்கம்   
  • இரவின் இளநகை   
  • வெறும் வயிறு   
  • சிறுகதைச் செல்வம்   
  • கொடுத்துச் சிவந்த கைகள்   
  • கோவியின் கதைகள்   
  • அரண்மனை ராகங்கள்   
  • பொன் விளக்கு எரிகிறது     
  • செந்தமிழ்ச் செல்வர்கள்   
  • மகுடங்கள்   
  • கழுவேறி மேடு   
  • செங்கோலின் சங்கீதங்கள்   
சமூக நாவல்கள்
  • பனிரோஜா   
  • தேன் நிலவு   
  • கங்கையம்மன் திருவிழா   
  • நீலமல்லிகை   
  • தென்னங்கீற்று   
  • ஒரு கொடியில் இருமலர்கள்   
  • பூங்குயில்   
  • வலம்புரிமுத்து   
  • வாழ்விக்க வந்த தெய்வம்   
  • தவமோ! தத்துவமோ   
  • நேற்றுப் பெய்த மழையில்   
  • ஜயஜய சங்கரி   
  • காக்கைச் சிறகு   
  • மனோரஞ்சிதம்   
  • வாழ்க்கை ஒரு விளையாட்டு   
  • நிலாச்சோறு   
  • அகிலா   
  • ஆத்மா   
  • முள்   
  • ஒரு தீபம் ஐந்து திரிகள்   
  • காவிய மனைவி   
  • யாகசாலை   
  • சூரியன் மேற்கே உதிக்கிறான்   
  • திரிசூலி   
  • இதழ்கள்   
  • வேரில் மலரும் பூக்கள்   
  • மிதக்கும் திமிங்கிலங்கள்
  • மூங்கில் இலை மேல்   
  • சொல்லித் தெரிவதில்லை
வரலாற்று நாவல்கள்
  • அக்கினிக் கோபம்
  • குறவன் குழலி
  • ஆதித்த கரிகாலன் கொலை
  • முகிலில் முளைத்த முகம்
  • செம்பியன் செல்வி   
  • காந்தருவதத்தை
  • சேரன் குலக்கொடி
  • சீவக சிந்தாமணி   
  • ராஜசிம்மன் காதலி   
  • கங்கை நாச்சியார்
  • ஹைதர் அலி
  • இளவரசி மோகனாங்கி
  • கவிஞனின் காதலி
  • கானல் கானம்
  • மாவீரன் காதலி
  • மகுடங்கள்
  • மலையமாருதம்
  • தம்பூர்   
  • மாலிக்காபூர்
  • மாண்புமிகு முதலமைச்சர்
  • மணிமண்டபம்
  • மனோரஞ்சிதம்
  • மயிலிறகு
  • மேவார் ராணா
  • நாகநந்தினி
  • நந்திவர்மன்
  • ராஜமாதா
  • நாயகன் நாயகி
  • நாயக்க மாதேவிகள்
  • மேவார் ராணி
  • நிலாக்கனவு
  • பத்தாயிரம் பொன் பரிசு
  • பெண்மணீயம்
  • தேவ தேவி
  • அக்கினி வீணை
  • அஜாதசத்ரு
  • முதல் உரிமைப் புரட்சி
  • முடிசூட்டுவிழா
  • காவிய ஓவியம்
  • கொல்லிப்பாவை
  • குடவாயில்கோட்டம்
  • குமரி
  • குற்றாலக் குறிஞ்சி
  • மேகலை
  • இந்திர விஹாரை
  • பொன் வேய்ந்த பெருமாள்
  • பூங்குழலி
  • தட்சிண பயங்கரன்
  • பொற்கிழி
  • அச்சுத ரங்கம்மா
  • பொற்காலப் பூம்பாவை
  • மறவர் குல மாணிக்கம்
  • அழகுநிலா
  • தென்றல் காற்று
  • சித்ராங்கி
  • சோழதீபம்
  • தேவதேவி
  • எரிமலை
  • காந்தருவதத்தை
  • காஞ்சிக் கதிரவன்
  • ராஜராகம்
  • ராஜசிம்ம பல்லவன்
  • ராஜசிம்மன் காதலி
  • ராஜதரங்கனி
  • செம்பியன் செல்வி
  • தூது நீ சொல்லிவாராய்
  • வாதாபி வல்லபி
  • வராகநதிக் கரையில்
  • வீணாதேவி
  • வேங்கைவனம்
  • பேய்மகள் இளவெயினி
  • ராஜாளிப் பறவை
  • ரத்த ஞாயிறு
  • சாம்ராட் அசோகன்
  • சமுத்திர முழக்கம்
  • ராஜ கர்ஜனை
  • ராஜ மோகினி
  • ராஜ நந்தி
  • காந்தாரி
  • செஞ்சி அபரஞ்சி
  • செஞ்சிச் செல்வன்
  • சேர சூரியன்
  • சந்திரோதயம்
  • சேரன் குலக்கொடி
  • சுதந்திரத்தீவில் வெள்ளை நாரைகள்
  • ராணி வேலுநாச்சியார்
  • தலைவன் தலைவி
  • தென்னவன்பிராட்டி
  • தேரோடும் வீதியிலே
  • திருமேனித் திருநாள்
  • தியாகத் தேர்
  • தோகை மயில்
  • வெற்றித் திருமகன்
கட்டுரை நூல்கள்
  • காலம் சொல்லும் கதை   
  • சொல்லேருழவர்   
  • நந்திக்கொடி நாயகர்கள்   
  • தமிழும் இன்றைய இலக்கியங்களும்   
  • கயற்கொடிக் காவலர்கள்   
  • விற்கொடி வேந்தர்கள்   
  • மதுரை மன்னர்கள்   
  • ஆராய்ச்சி மணி

உசாத்துணை

✅Finalised Page