first review completed

நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை (தக்ஷிணாமூர்த்தி) (1861 - 1937) ஒரு தவில் கலைஞர்.

== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள நாச்சியார்கோவிலில் 1861-ஆம் ஆண்டில் அம்மாளம்மாள் மகனாக சக்திவேல் பிள்ளை பிறந்தார்.  

சக்திவேல் பிள்ளை, சிக்கல் சிங்காரவேல் தவில்காரரிடம் தவில் பயிற்சி பெற்றார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
சக்திவேல் பிள்ளைக்கு நடேசத் தவில்காரர் என்றொரு தம்பி இருந்தார்.

சக்திவேல் பிள்ளை அகிலாண்டத்தம்மாள் என்பவரை மணந்தார். இவர்களின் ஒரே பெண் பாக்கியம் (கணவர்: திருவாலங்காடு வேணுகோபால பிள்ளை)

== இசைப்பணி ==
== இசைப்பணி ==
சக்திவேல் பிள்ளையின் தவில் வாசிப்பைப் பாராட்டி மைசூர் மன்னர் தங்க வெண்டையமும் தங்கத் தவில் கம்பும் பரிசளித்து “இது தவிற்கம்பு அல்ல; சக்திவேல். ஏனென்றால் நீயே சக்திவேல்தான்” என்று வாழ்த்த சக்திவேல் என்ற பெயரே நிலைத்துவிட்டது.  

Line 17: Line 14:

தன்னைத் தேடி வருவோருக்கு லய விஷயங்களைக் கற்றுத்தருவது மட்டுமே சக்திவேல் பிள்ளை இறுதி வரை செய்து வந்தார்.

====== உடன் வாசித்த கலைஞர்கள் ======
====== உடன் வாசித்த கலைஞர்கள் ======
நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

* [[திருமருகல் நடேச பிள்ளை]]
* [[திருமருகல் நடேச பிள்ளை]]
* [[செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை]]

*[[திருச்சேறை வெங்கடராம பிள்ளை]]
== மறைவு ==
== மறைவு ==
நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை திருவாலங்காட்டில் தன் மகள் வீட்டில் 1937-ஆம் ஆண்டு எழுபத்தியாறாம் வயதில் காலமானார்.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
{{first review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:30, 14 August 2022

நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை (தக்ஷிணாமூர்த்தி) (1861 - 1937) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள நாச்சியார்கோவிலில் 1861-ஆம் ஆண்டில் அம்மாளம்மாள் மகனாக சக்திவேல் பிள்ளை பிறந்தார்.

சக்திவேல் பிள்ளை, சிக்கல் சிங்காரவேல் தவில்காரரிடம் தவில் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

சக்திவேல் பிள்ளைக்கு நடேசத் தவில்காரர் என்றொரு தம்பி இருந்தார்.

சக்திவேல் பிள்ளை அகிலாண்டத்தம்மாள் என்பவரை மணந்தார். இவர்களின் ஒரே பெண் பாக்கியம் (கணவர்: திருவாலங்காடு வேணுகோபால பிள்ளை)

இசைப்பணி

சக்திவேல் பிள்ளையின் தவில் வாசிப்பைப் பாராட்டி மைசூர் மன்னர் தங்க வெண்டையமும் தங்கத் தவில் கம்பும் பரிசளித்து “இது தவிற்கம்பு அல்ல; சக்திவேல். ஏனென்றால் நீயே சக்திவேல்தான்” என்று வாழ்த்த சக்திவேல் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளைக்கு ஒருமுறை சக்திவேல் பிள்ளை தவில் வாசித்த போது, நாதஸ்வரக் கலைஞரை கவனியாது சக்திவேல் பிள்ளை எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘நீ தவில் வாசிக்க லாயக்கில்லை, குதிரை வண்டி ஓட்டத்தான் லாயக்கு’ என ராமஸ்வாமி பிள்ளை கூறிவிட்டார். அதன் பிறகு தவில் வாசிப்பதை விடுத்து உண்மையாகவே குதிரை வண்டி ஒட்டத் துவங்கிய சக்திவேல் பிள்ளையைக் கண்டு மனம் பதறி, அன்பின் மிகுதியால் கூறிய சொல்லுக்கு இத்தனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ராமஸ்வாமி பிள்ளை கேட்டுக் கொண்டார். ராமஸ்வாமி பிள்ளையைத் தன் குருவென மதித்த காரணத்தால் அவரது அறிவுரையின் படி தவில் வாசிப்பதை விட்டுவிட்டதாக சக்திவேல் பிள்ளை கூறிவிட்டார்.

தன்னைத் தேடி வருவோருக்கு லய விஷயங்களைக் கற்றுத்தருவது மட்டுமே சக்திவேல் பிள்ளை இறுதி வரை செய்து வந்தார்.

உடன் வாசித்த கலைஞர்கள்

நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை திருவாலங்காட்டில் தன் மகள் வீட்டில் 1937-ஆம் ஆண்டு எழுபத்தியாறாம் வயதில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.