under review

செங்குந்தர் மரபு விளக்கம் (நூல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 39: Line 39:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|01-Jan-2025, 15:31:05 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 01:03, 2 January 2025

செங்குந்தர் மரபு விளக்கம் (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு) செங்குந்த மரபின் பெருமை பற்றி, செங்குந்தர்களது புகழ், வீரம், கொடை, வாழ்வு பற்றிக் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் மாகறல் கார்த்திகேய முதலியார்.

வெளியீடு

செங்குந்தர் மரபு விளக்கம், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இதன் பதிப்பாசிரியர் ஸ்ரீ காஞ்சி நாகலிங்க முனிவர். 1926-ல், சிறுமணவூர் முனிசாமி முதலியார் ௮ண்டு சன்ஸின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. இதனை வெளியிட்டவர், திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச.சபாபதி முதலியார். இந்நூலை இயற்றியவர் மாகறல் கார்த்திகேய முதலியார்.

நூல் அமைப்பு

செங்குந்தர் மரபு விளக்கம் நூல், கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்ட 30 பாடல்களைக் கொண்டது. நூலின் தொடக்கத்தில் உள்ள காப்புப் பகுதியில் சத்திய விநாயகர், சுப்பிரமணியர், கச்சபேசர், சுந்தராம்பிகை, ஆளுடைய பிள்ளையார் மீதான ஐந்து நேரிசை வெண்பாக்களும் இறுதியில் வாழ்த்துப்பாவும் உள்ளன.

உள்ளடக்கம்

செங்குந்தர் மரபு விளக்கம் நூல், செங்குந்த மரபின் பெருமை பற்றி, செங்குந்தர்களது புகழ், வீரம், கொடை, வாழ்வு பற்றிக் கூறுகிறது.

பாடல்

செங்குந்தர் மரபின் பெருமை

பொன்பொதி கொன்றை யுமையாள் சிலம்பிற்புடைபெயர்ந்த
ஒன்பது வைரத்தி லொன்பது பெண்வழி யொன்பதின்மர்
என்பது மன்னோர் வழிவீர ரென்பது மென்னவென
மன்பதை சோரத் தலைதந்த செங்குந்தர் வைரநன்றே

வானம் வளரும் பசுக்கள் வளரு மகம்வளரும்
தானம் வளருந் தருமம் வளரும் தமிழ்முதலாம்
ஞானம் வளருஞ் சிவஞான போத நலம்வளரும்
மானம் வளர்க்கின்ற செங்குந்த ரெங்கும் வளர்தலினே

தாயரும் பன்னநன் மாணாக்கர் யாருந் தழைந்துவர
நேயரி னெண்ணி முகமே யகமே நெடிதலர்ந்தே
ஆயரு நூல்பல வாய்கொண் டுரைத்தலி னான்றதந்து
வாயரென் றோர்பெயர் பூண்டனர் செங்குந்தர் மண்டலத்தே

மூத்தவ னென்று முருகப் பிரானை முறைமைகொண்டிங்
கேத்துவர் செங்குந்தர் நீற்றொளி யாசார மேற்றிருக்கும்
மாத்துவர் வைணவர் சைனர் முதலிய மற்றவரும்
நீத்தவர் போற்றரும் வைதிக சைவ நெறியினரே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:31:05 IST