second review completed

நடராஜப் பத்து: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 59: Line 59:
* [https://natarajadeekshidhar.blogspot.com/2010/02/blog-post_22.html நடராஜப் பத்து, நடராஜ தீக்ஷிதர் வலைப்பக்கம்]
* [https://natarajadeekshidhar.blogspot.com/2010/02/blog-post_22.html நடராஜப் பத்து, நடராஜ தீக்ஷிதர் வலைப்பக்கம்]
* [https://mayuragiri.com/nadarajarpathu/ நடராஜப் பத்தி-மயூரகிரி]
* [https://mayuragiri.com/nadarajarpathu/ நடராஜப் பத்தி-மயூரகிரி]
* [https://www.youtube.com/watch?v=gdvDhymXTkQ நடராஜப் பத்து, யூடியூப் காணொளி emusic Abirami] <br />
* [https://www.youtube.com/watch?v=gdvDhymXTkQ நடராஜப் பத்து, யூடியூப் காணொளி emusic Abirami]  
{{Being created}}
 
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:28, 31 December 2024

நடராஜப் பத்து (19-ம் நூற்றாண்டின் இறுதி) சிதம்பரம் நடராஜர் மீது பாடப்பட்ட பத்து பாடல்களைக் கொண்ட நூல். இன்றளவும் பாராயணம் செய்யப்படும் நூல். சிறுமணவூர் முனுசாமி முதலியாரால் எழுதப்பட்டது.

ஆசிரியர்

நடராஜப் பத்து நூலை எழுதியவர் சிறுமணவூர் முனிசாமி முதலியார்.

நூல் அமைப்பு

நடராஜப் பத்து சிதம்பரம் நடராஜரைப் போற்றும் 11 விருத்தப் பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என முடிகிறது.

முதல் மூன்று பாடல்கள் புடவி அனைத்துமான வடிவமாக நடராஜரைப் பாடி, நடராஜர் நடனமாடும் கோலத்தைப் பாடி, வாழ்வின் துயரங்களை நீக்க வேண்டுகின்றன. ஐந்தாம் பாடல் வஞ்சப் புகழ்ச்சியாக சிவனைப் புகழ்கிறது. தன் துரங்களுக்கான காரணத்தைக் கேட்டு, மறுபிறவியின்மையை வேண்டுகிறது. உலக இன்பங்களும், செல்வங்களும், சுற்றமும், நட்பும் எதையும் வேண்டாமல் நடராஜரின் அருளை வேண்டுகிறது. பதினொன்றாம் பாடல் நூலாசிரியரின் பெயரையும், நூற்பயனையும் கூறுகிறது.

கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள்
தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை
அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜப் பத்து நூற்றாண்டுகளாக தமிழகத்தில் சிவ பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டு வரும் நூல். எளிமையான நடையாலும், உருக்கமான கருத்துகளாலும் மிக விரும்பப்பட்டது

பாடல்கள்

ஆனந்த நடனம்

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கைசிவ காமி யாட
மாலாட நூலாட மறையாட திரையாட
மறைதந்த பிரம்ம னாட
கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட
குஞ்சர முகத்த னாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட
குழந்தை முருகேச னாட
ஞானசம் பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகரு மாட
நரைதும்பை யருகாட நந்திவா கனமாட
நாட்டியப் பெண்க ளாட
வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடி ஆடிவரு வாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராசனே (2)

என்குறை தீர்த்தல் பெரிதோ

வாஞ்சையில் லாத போதிலும்
வாலாய மாயக்கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனை யில்லாமலே பாடினும்
முர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும்
முழுகாமி யேயாகினும்
பழியெனக்கல்லவோ தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் ஏசார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுட லீந்தநீ
பாலகனைக் காக்கொ ணாதோ
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய மைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (6)

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.