under review

கீரன் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
(<nowiki/> tag removed)
Line 8: Line 8:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்]
* [https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்]
* <nowiki>https://ganeshkongumatrimony.blogspot.com/2019/03/blog-post_23.html</nowiki>
* https://ganeshkongumatrimony.blogspot.com/2019/03/blog-post_23.html</nowiki>


* [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
* [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]

Revision as of 18:03, 5 July 2022

கீரன் கூட்டம் : கீரன் குலம். கொங்குவேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களான அறுபது கூட்டங்களில் ஒன்று. சங்ககாலம் முதல் நக்கீரன், கீரனார் போன்ற பல பெயர்கள் உள்ளன.நக்கீரன் என்னும் சங்ககாலப் பெயர்களுக்கும் இப்பெயருக்குமான தொடர்பு நிறுவப்படவில்லை. கீரைக் குலம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

பெயர்

நக்கீரன் சங்கில் வளையல்கள் செய்யும் குலத்தவர் என பெருந்தொகை கூறுகிறது. கீரம் என்றால் நீர் என சூடாமணி நிகண்டு பொருள் அளிக்கிறது. சங்கில் கலைப்பொருள் செய்பவர்கள் கடலோரம் வாழ்ந்தமையால் கீரன் எனப்பட்டிருக்கலாம். கீரன் என்னும் சொல் நீருடன், வேளாண்மையுடன் தொடர்புடையவர்களைச் சுட்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்

வரலாறு

காங்கேய நாட்டுக் கீரனூர் கீரன் குலத்தவரின் முதற்காணியாகும். நசியனூர், கோடத்தூர், பாப்பினி, கன்னிவாடி ஆகிய பிற ஊர்கள் இவர்களின் காணி ஊர்கள். இவர்களில் செங்கீரன், கருங்கீரன் என இரு உட்பிரிவுகள் முன்பு இருந்தன. .

உசாத்துணை


✅Finalised Page