திருவாய்மொழி நூற்றந்தாதி: Difference between revisions
No edit summary |
|||
| Line 28: | Line 28: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
{{Being created}} | |||
[https://tamizhini.in/2018/10/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE/ காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ !ஶ்ரீரங்கம் மோகனரங்கன், தமிழினி இதழ்] {{Being created}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 20:51, 8 December 2024
திருவாய்மொழி நூற்றந்தாதி (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) மணவாள மாமுனிகள் திருவாய்மொழியைப் போற்றி எழுதிய அந்தாதி நூல்.
ஆசிரியர்
திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியவர் மணவாள மாமுனிகள்.
நூல் அமைப்பு
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் 100 பதிகங்கள் உள்ளன. திருவாய்மொழியில் அமைந்த ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்களைக் கொண்டது திரிவாய்மொழி நூற்றந்தாதி. திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.
இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள்பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ? அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள். முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும். அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும். ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும். இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது. வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.
இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன.
அனத்யயன காலத்தில் வைணவ் ஆலயங்களில் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில்
திருவாய்மொழி நூற்றந்தாதி சேவிக்கப்படுகிறது.
பாடல் நடை
உயர்வே பரன் படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு ( 1)
வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன் இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து (2)
உசாத்துணை
காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ !ஶ்ரீரங்கம் மோகனரங்கன், தமிழினி இதழ்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.