திருவாய்மொழி நூற்றந்தாதி: Difference between revisions
No edit summary |
|||
| Line 3: | Line 3: | ||
திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியவர் [[மணவாள மாமுனி]]கள். | திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியவர் [[மணவாள மாமுனி]]கள். | ||
நம்மாழ்வார் பாடிய | == நூல் அமைப்பு == | ||
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் 100 பதிகங்கள் உள்ளன. திருவாய்மொழியில் அமைந்த ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்களைக் கொண்டது திரிவாய்மொழி நூற்றந்தாதி. திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன. | |||
இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன. | இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன. | ||
Revision as of 20:47, 8 December 2024
திருவாய்மொழி நூற்றந்தாதி (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) மணவாள மாமுனிகள் திருவாய்மொழியைப் போற்றி எழுதிய அந்தாதி நூல்.
ஆசிரியர்
திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியவர் மணவாள மாமுனிகள்.
நூல் அமைப்பு
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் 100 பதிகங்கள் உள்ளன. திருவாய்மொழியில் அமைந்த ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்களைக் கொண்டது திரிவாய்மொழி நூற்றந்தாதி. திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.
இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன.
அனத்யயன காலத்தில் வைணவ் ஆலயங்களில் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதி சேவிக்கப்படுகிறது.
பாடல் நடை
உயர்வே பரன் படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு ( 1)
வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன் இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து (2)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.