சிவகாமியின் சபதம்: Difference between revisions
Line 6: | Line 6: | ||
ஆந்திரநிலத்தில் குண்டூர் அருகே உருவான பல்லவநாட்டின் இரண்டாம் தலைநகராக இருந்தது காஞ்சிபுரம். தங்கள் தாயாதி முறைகொண்டவர்களான சாளுக்கியர்களுடன் தொடர் போரில் இருந்த பல்லவர்கள் காஞ்சிபுரத்துக்கு பின்வாங்கி அங்கே ஓர் அரசை உருவாக்கினர். சிம்மவிஷ்ணு பொயு 537ல் காஞ்சியில் வலுவான ஒரு அரசை உருவாக்கினார். அவர் மகன் மகேந்திரவர்ம பல்லவன் (பொயு 560 -630) காஞ்சிநகரை வலுப்படுத்தி தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி பல்லவப்பேரரசுக்கு அடித்தளமிட்டார். | ஆந்திரநிலத்தில் குண்டூர் அருகே உருவான பல்லவநாட்டின் இரண்டாம் தலைநகராக இருந்தது காஞ்சிபுரம். தங்கள் தாயாதி முறைகொண்டவர்களான சாளுக்கியர்களுடன் தொடர் போரில் இருந்த பல்லவர்கள் காஞ்சிபுரத்துக்கு பின்வாங்கி அங்கே ஓர் அரசை உருவாக்கினர். சிம்மவிஷ்ணு பொயு 537ல் காஞ்சியில் வலுவான ஒரு அரசை உருவாக்கினார். அவர் மகன் மகேந்திரவர்ம பல்லவன் (பொயு 560 -630) காஞ்சிநகரை வலுப்படுத்தி தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி பல்லவப்பேரரசுக்கு அடித்தளமிட்டார். | ||
பல்லவர்கள் வேங்கியை ஆண்டுவந்த விஷ்ணுகுண்டினர்களுக்கு அணுக்கமாக இருந்தனர். வாதாபியை ஆட்சி செய்துவந்த சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசி வேங்கியை கைப்பற்றினார். அது பல்லவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமிடையே தொடர்ச்சியான சிறு போர்கள் நடைபெற்று வந்தன. வேங்கியின் அரசன் பல்லவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாக ஐஹோல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவர்களின் காசாக்குடி கல்வெட்டு பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் புல்லாலூர் (பல்லாலூரா) போரில் | பல்லவர்கள் வேங்கியை ஆண்டுவந்த விஷ்ணுகுண்டினர்களுக்கு அணுக்கமாக இருந்தனர். வாதாபியை ஆட்சி செய்துவந்த சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசி வேங்கியை கைப்பற்றினார். அது பல்லவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமிடையே தொடர்ச்சியான சிறு போர்கள் நடைபெற்று வந்தன. வேங்கியின் அரசன் பல்லவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாக ஐஹோல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவர்களின் காசாக்குடி கல்வெட்டு பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் புல்லாலூர் (பல்லாலூரா) போரில் எதிரிகளை வென்றதாகச் சொல்கிறது. | ||
பெத்தவடுகூர் கல்வெட்டு பாண அரசனை புலிகேசி வென்றதைச் சொல்கிறது. அவர்கள் பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள். | பெத்தவடுகூர் கல்வெட்டு பாண அரசனை புலிகேசி வென்றதைச் சொல்கிறது. அவர்கள் பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள். ஐஹோல் கல்வெட்டு புலிகேசி மன்னர் சோழர்களையும் சேரர்களையும் பாண்டியர்களையும் வென்றதாகவும் பல்லவர்களை முழுமையாகத் தோற்கடித்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் வெவ்வேறு பல்லவக் கல்வெட்டுகள் புலிகேசி பல்லவர்களால் காஞ்சிபுரத்தை ஒட்டிய பரியாலம், சூரமாரம், மணிமங்கலம் ஆகிய ஊர்களில் நிகழ்ந்த போர்களில் சாளுக்கியர்களுக்கு பெரிய இழப்பை உருவாக்கி அவர்களை பின்னடையச் செய்ததாகச் சொல்கின்றன | ||
சாளுக்கியர்கள் மகேந்திரவர்ம பல்லவனை வென்று, காஞ்சிபுரத்தை கைப்பற்றி ,சோழநாடு வரைச் சென்றது வரலாற்றாசிரியர்களால் உறுதிசெய்யப்படுகிறது. பல்லவப்படைகள் காஞ்சிபுரத்தை விட்டு விலகி பல சிறு போர்களில் சாளுக்கியர்களை எதிர்த்து போரிட்டிருக்கலாம் என்றும், தொடர்போர்களால் இழப்புகள் உருவாகவே புலிகேசி வாதாபிக்கு திரும்பியிருக்கலாம் என்றும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். | சாளுக்கியர்கள் மகேந்திரவர்ம பல்லவனை வென்று, காஞ்சிபுரத்தை கைப்பற்றி ,சோழநாடு வரைச் சென்றது வரலாற்றாசிரியர்களால் உறுதிசெய்யப்படுகிறது. பல்லவப்படைகள் காஞ்சிபுரத்தை விட்டு விலகி பல சிறு போர்களில் சாளுக்கியர்களை எதிர்த்து போரிட்டிருக்கலாம் என்றும், தொடர்போர்களால் இழப்புகள் உருவாகவே புலிகேசி வாதாபிக்கு திரும்பியிருக்கலாம் என்றும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். | ||
Line 14: | Line 14: | ||
மகேந்திரவர்ம பல்லவன் பொயு 630 ல் மறைய அவர் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பதவிக்கு வந்தார். பல்லவத் தளபதி பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பெரும்படை வாதாபியை கைப்பற்றியது.இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றனபுலிகேசி அப்போரில் கொல்லப்பட்டிருக்கலாம். பொயு 642- 643ல் இப்போர் நடைபெற்றது. வாதாபி (பதாமி)யில் நரசிம்மவர்ம பல்லவனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட மல்லிகார்ஜுனதேவர் ஆலயத்து கல்வெட்டு இப்படையெடுப்புச் செய்தியை உறுதி செய்கிறது. | மகேந்திரவர்ம பல்லவன் பொயு 630 ல் மறைய அவர் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பதவிக்கு வந்தார். பல்லவத் தளபதி பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பெரும்படை வாதாபியை கைப்பற்றியது.இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றனபுலிகேசி அப்போரில் கொல்லப்பட்டிருக்கலாம். பொயு 642- 643ல் இப்போர் நடைபெற்றது. வாதாபி (பதாமி)யில் நரசிம்மவர்ம பல்லவனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட மல்லிகார்ஜுனதேவர் ஆலயத்து கல்வெட்டு இப்படையெடுப்புச் செய்தியை உறுதி செய்கிறது. | ||
தொன்மக்கதைகளின்படி பரஞ்சோதி வாதாபியில் இருந்து ஒரு பிள்ளையார் சிலையை வெற்றிச்சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சிபுரம் கோயிலில் நிறுவினார். இந்த பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற வாதாபி கணபதிம் பஜேஹம் என்னும் கீர்த்தனை இந்த பிள்ளையாரை குறித்தது. பரஞ்சோதி பின்னர் சிவனடியார் ஆகி சிறுத்தொண்டர் என பெயர் பெற்றார். 72 சைவ நாயன்மார்களில் ஒருவராக அவர் வணங்கப்படுகிறார். | “புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மவர்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்.’ என்று கூரம் பட்டயங்கள் கூறுகின்றன.நரசிம்மவர்மன்தன்னை ‘வாதாபி கொண்டார் என்று கல்வெட்டுச்சான்றுகள் தெரிவிக்கின்றன. உதயசந்திரமங்கலம் செப்புப் பபட்டயங்கள் 'நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; அடிக்கடி வல்லப அரசனை (சாளுக்கியனை)ப் புரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன் .வாதாபியை அழித்தவன்” என்கின்றன. வேலூர் பாளையப் பட்டயங்கள் “விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டினான்” என்கின்றன. | ||
முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் மற்போரில் சிறந்தவன் என்னும் பொருளில் மகாபலி, மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். பல்லவர்களின் முதன்மையான துறைமுகம் அவர் பெயரால் மகாபலிபுரம், மாமல்லபுரம் என அழைக்கப்பட்டது. அங்கே மகேந்திரவர்ம பல்லவன் காலகட்டத்தில் குடைவரை ஆலயங்கள் அமைக்கும் பணி தொடங்கி, நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தொடர்ந்து, ராஜசிம்ம பல்லவன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன்(பொயு 700-728) காலகட்டத்தில் நிறைவுபெற்றது. மகாபலிபுரம் இன்று தமிழகத்தின் சிற்பநகரம் என அறியப்படுகிறது. | |||
தொன்மக்கதைகளின்படி பரஞ்சோதி வாதாபியில் இருந்து ஒரு பிள்ளையார் சிலையை வெற்றிச்சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சிபுரம் கோயிலில் நிறுவினார். இந்த பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற வாதாபி கணபதிம் பஜேஹம் என்னும் கீர்த்தனை இந்த பிள்ளையாரை குறித்தது. பரஞ்சோதி பின்னர் சிவனடியார் ஆகி சிறுத்தொண்டர் என பெயர் பெற்றார். 72 சைவ நாயன்மார்களில் ஒருவராக அவர் வணங்கப்படுகிறார். இதை பெரியபுராணச் செய்யுள் இவ்வாறு குறிப்பிடுகிறது. | |||
: மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் | |||
: தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் | |||
: பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் | |||
: இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார். | |||
== கதைச்சுருக்கம் == | |||
சிவகாமியின் சபதம் நான்கு பகுதிகளாலானது. | |||
* பரஞ்சோதி யாத்திரை | |||
* காஞ்சி முற்றுகை | |||
* சிதைந்த கனவு | |||
பரஞ்சோதி காஞ்சிபுரத்துக்கு வருவதுடன் கதை தொடங்குகிறது. வழியில் நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியை சந்திக்கிறார். சமணர்களின் ஆதிக்கத்தில் காஞ்சி இருக்கிறது. யானை ஒன்றில் இருந்து சிவகாமியையும் அவர் தந்த ஆயன சிற்பியையும் காப்பாற்றுகிறார். கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் பரஞ்சோதி நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியின் உதவியுடன் தப்பிக்கிறார்.அவர்கள் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் அஜந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களைப் பற்றி தெரிந்துகொள்ள நாகநந்தியின் அறிமுகக்குறிப்புடன் பரஞ்சோதியை அனுப்புகிறார். | |||
நடனமணியாகிய சிவகாமியை நரசிம்ம பல்லவர் காதலிப்பதை மகேந்திரவர்மர் விரும்பவில்லை.சாளுக்கிய மன்னர் புலிகேசியுடன் பல்லவர்கள் போரிட்டுக்கொண்டிருக்கும் காலம் அது. பல்லவநாட்டின் எல்லைக காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்து அவரை அனுப்பியிருந்தார் மகேந்திரவர்மர். வடபுலம் செல்லும் பரஞ்சோதி சாளுக்கியரிடம் சிக்கி வஜ்ரபாகு என்னும் ஒற்றரால் காப்பாற்றப்படுகிறார். பின்னர் வஜ்ரபாகு மகேந்திரவர்மர்தான் என தெரியவருகிறது. பரஞ்சோதி மகேந்திரவர்மரால் படைத்தளபதியாகிறார். நரசிம்மவர்ம பல்லவருக்கும் நெருக்கமாக இருக்கிறார். சிவகாமியை நாகநந்தியின் சூழ்ச்சிகளில் இருந்து நரசிம்மவர்ம பல்லவர் காப்பாற்றுகிறார். | |||
காஞ்சி மேல் படையெடுத்து வந்த புலிகேசி அதை முற்றுகையிடுகிறார். மகேந்திரவர்ம பல்லவரிடம் சமரசம் பேசுவதற்காக வந்த புலிகேசி காஞ்சியின் செல்வ வளம் கண்டு சீற்றம் கொள்கிறார். காஞ்சியை சூறையாடவும், சிற்பிகளின் கைகளை வெட்டவும் ஆணையிடுகிறார். சாளுக்கியப் படைகளிடமிருந்து ஆயனரையும் சிவகாமியையும் நாகநந்தி அடிகள் மீட்கிறார். அவர் புலிகேசியின் உடன்பிறந்தவர் என்பது தெரியவருகிறது. புலிகேசியுடன் நடந்த போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக்களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியைப் புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார். | |||
சிவகாமி வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். தனக்கு சிவகாமி மேல் இருந்த காதலை தன் தம்பி புலிகேசியிடம் நாகநந்தி கூறுகிறார். சிவகாமியை கொடுமைப்படுத்தி சபையில் ஆடச்செய்கிறார் புலிகேசி. சிவகாமி தன் காதலர் நரசிம்ம பல்லவர் வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கித் தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைக்கிறாள். தன்னை அழைத்துச்செல்ல ரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுக்கிறாள். | |||
புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் மறைகிறார். ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர் படைதிரட்டுவதற்காக பாண்டிய இளவரசி வானமாதேவியை மணம்புரிகிறார். வாதாபி மேல் படையெடுத்துச் செல்லும் நரசிம்மவர்மர் அதை தீக்கிரையாக்குகிறார். புலிகேசி கொல்லப்பட , நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று சிதையிலிட்டுவிட்டு புலிகேசிபோல் வேடமிட்டு போர்க்களம் வந்து போரிடுகிறார். போரில் ஒருகை யை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்பதனால் உயிருடன் விடப்படுகிறார். பரஞ்சோதியார் சைவதுறவியாக மாறுகிறார். நாடு திரும்பிய சிவகாமி நரசிம்மவர்ம பல்லவர் மணம்புரிந்துகொண்ட செய்தியை அறிந்து பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாகக் காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொள்கிறாள். | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://themadhuram.blogspot.com/2012/05/blog-post_12.html தேமதுரம்- கல்கியின் நாவல்கள்] | * பல்லவர் வரலாறு . டாக்டர். மா. இராசமாணிக்கனார் | ||
== இணைப்புகள் == | |||
*[https://themadhuram.blogspot.com/2012/05/blog-post_12.html தேமதுரம்- கல்கியின் நாவல்கள்] | |||
* [https://yarl.com/forum3/topic/200596-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/ சிவகாமியின் சபதம் விமர்சனம் ஈகரை] | * [https://yarl.com/forum3/topic/200596-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/ சிவகாமியின் சபதம் விமர்சனம் ஈகரை] | ||
* |
Revision as of 20:21, 15 June 2022
சிவகாமியின் சபதம் ( ) கல்கி எழுதிய நாவல். இந்நாவல் கல்கி எழுதிய இரண்டாவது வரலாற்று மிகுகற்பனை. முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன் தன் தந்தை மகேந்திரவர்ம பல்லவனை தோற்கடித்து காஞ்சிபுரத்தை சூறையாடிய இரண்டாம் புலிகேசியை பழிவாங்குவதற்காக வாதாபிமேல் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்ட வரலாற்றை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
எழுத்து, வெளியீடு
எழுத்த்கல்கி சிவகாமியின் சபதம் நாவலை அவரே நடத்திய கல்கி வார இதழில் 1944 ஜனவரி 1ஆம் நாள் முதல் சிவகாமியின் சபதம் நாவலை தொடங்கி 1946 ஜூன் 30இல் முடித்தார். இந்நாவல் அவருடைய பார்த்திபன் கனவு நாவலுக்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரப்புனைவு. இதற்குப்பின் அவர் பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவலை வானதி பதிப்பகம் நூல் வடிவில் வெளியிட்டது. பின்னர் ஏராளமான பதிப்புகள் வெளிவந்துள்ளன.
வரலாற்றுப் பின்புலம்
ஆந்திரநிலத்தில் குண்டூர் அருகே உருவான பல்லவநாட்டின் இரண்டாம் தலைநகராக இருந்தது காஞ்சிபுரம். தங்கள் தாயாதி முறைகொண்டவர்களான சாளுக்கியர்களுடன் தொடர் போரில் இருந்த பல்லவர்கள் காஞ்சிபுரத்துக்கு பின்வாங்கி அங்கே ஓர் அரசை உருவாக்கினர். சிம்மவிஷ்ணு பொயு 537ல் காஞ்சியில் வலுவான ஒரு அரசை உருவாக்கினார். அவர் மகன் மகேந்திரவர்ம பல்லவன் (பொயு 560 -630) காஞ்சிநகரை வலுப்படுத்தி தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி பல்லவப்பேரரசுக்கு அடித்தளமிட்டார்.
பல்லவர்கள் வேங்கியை ஆண்டுவந்த விஷ்ணுகுண்டினர்களுக்கு அணுக்கமாக இருந்தனர். வாதாபியை ஆட்சி செய்துவந்த சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசி வேங்கியை கைப்பற்றினார். அது பல்லவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமிடையே தொடர்ச்சியான சிறு போர்கள் நடைபெற்று வந்தன. வேங்கியின் அரசன் பல்லவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாக ஐஹோல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவர்களின் காசாக்குடி கல்வெட்டு பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் புல்லாலூர் (பல்லாலூரா) போரில் எதிரிகளை வென்றதாகச் சொல்கிறது.
பெத்தவடுகூர் கல்வெட்டு பாண அரசனை புலிகேசி வென்றதைச் சொல்கிறது. அவர்கள் பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள். ஐஹோல் கல்வெட்டு புலிகேசி மன்னர் சோழர்களையும் சேரர்களையும் பாண்டியர்களையும் வென்றதாகவும் பல்லவர்களை முழுமையாகத் தோற்கடித்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் வெவ்வேறு பல்லவக் கல்வெட்டுகள் புலிகேசி பல்லவர்களால் காஞ்சிபுரத்தை ஒட்டிய பரியாலம், சூரமாரம், மணிமங்கலம் ஆகிய ஊர்களில் நிகழ்ந்த போர்களில் சாளுக்கியர்களுக்கு பெரிய இழப்பை உருவாக்கி அவர்களை பின்னடையச் செய்ததாகச் சொல்கின்றன
சாளுக்கியர்கள் மகேந்திரவர்ம பல்லவனை வென்று, காஞ்சிபுரத்தை கைப்பற்றி ,சோழநாடு வரைச் சென்றது வரலாற்றாசிரியர்களால் உறுதிசெய்யப்படுகிறது. பல்லவப்படைகள் காஞ்சிபுரத்தை விட்டு விலகி பல சிறு போர்களில் சாளுக்கியர்களை எதிர்த்து போரிட்டிருக்கலாம் என்றும், தொடர்போர்களால் இழப்புகள் உருவாகவே புலிகேசி வாதாபிக்கு திரும்பியிருக்கலாம் என்றும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
மகேந்திரவர்ம பல்லவன் பொயு 630 ல் மறைய அவர் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பதவிக்கு வந்தார். பல்லவத் தளபதி பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பெரும்படை வாதாபியை கைப்பற்றியது.இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றனபுலிகேசி அப்போரில் கொல்லப்பட்டிருக்கலாம். பொயு 642- 643ல் இப்போர் நடைபெற்றது. வாதாபி (பதாமி)யில் நரசிம்மவர்ம பல்லவனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட மல்லிகார்ஜுனதேவர் ஆலயத்து கல்வெட்டு இப்படையெடுப்புச் செய்தியை உறுதி செய்கிறது.
“புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மவர்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்.’ என்று கூரம் பட்டயங்கள் கூறுகின்றன.நரசிம்மவர்மன்தன்னை ‘வாதாபி கொண்டார் என்று கல்வெட்டுச்சான்றுகள் தெரிவிக்கின்றன. உதயசந்திரமங்கலம் செப்புப் பபட்டயங்கள் 'நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; அடிக்கடி வல்லப அரசனை (சாளுக்கியனை)ப் புரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன் .வாதாபியை அழித்தவன்” என்கின்றன. வேலூர் பாளையப் பட்டயங்கள் “விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டினான்” என்கின்றன.
முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் மற்போரில் சிறந்தவன் என்னும் பொருளில் மகாபலி, மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். பல்லவர்களின் முதன்மையான துறைமுகம் அவர் பெயரால் மகாபலிபுரம், மாமல்லபுரம் என அழைக்கப்பட்டது. அங்கே மகேந்திரவர்ம பல்லவன் காலகட்டத்தில் குடைவரை ஆலயங்கள் அமைக்கும் பணி தொடங்கி, நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தொடர்ந்து, ராஜசிம்ம பல்லவன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன்(பொயு 700-728) காலகட்டத்தில் நிறைவுபெற்றது. மகாபலிபுரம் இன்று தமிழகத்தின் சிற்பநகரம் என அறியப்படுகிறது.
தொன்மக்கதைகளின்படி பரஞ்சோதி வாதாபியில் இருந்து ஒரு பிள்ளையார் சிலையை வெற்றிச்சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சிபுரம் கோயிலில் நிறுவினார். இந்த பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற வாதாபி கணபதிம் பஜேஹம் என்னும் கீர்த்தனை இந்த பிள்ளையாரை குறித்தது. பரஞ்சோதி பின்னர் சிவனடியார் ஆகி சிறுத்தொண்டர் என பெயர் பெற்றார். 72 சைவ நாயன்மார்களில் ஒருவராக அவர் வணங்கப்படுகிறார். இதை பெரியபுராணச் செய்யுள் இவ்வாறு குறிப்பிடுகிறது.
- மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
- தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
- பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
- இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.
கதைச்சுருக்கம்
சிவகாமியின் சபதம் நான்கு பகுதிகளாலானது.
- பரஞ்சோதி யாத்திரை
- காஞ்சி முற்றுகை
- சிதைந்த கனவு
பரஞ்சோதி காஞ்சிபுரத்துக்கு வருவதுடன் கதை தொடங்குகிறது. வழியில் நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியை சந்திக்கிறார். சமணர்களின் ஆதிக்கத்தில் காஞ்சி இருக்கிறது. யானை ஒன்றில் இருந்து சிவகாமியையும் அவர் தந்த ஆயன சிற்பியையும் காப்பாற்றுகிறார். கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் பரஞ்சோதி நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியின் உதவியுடன் தப்பிக்கிறார்.அவர்கள் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் அஜந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களைப் பற்றி தெரிந்துகொள்ள நாகநந்தியின் அறிமுகக்குறிப்புடன் பரஞ்சோதியை அனுப்புகிறார்.
நடனமணியாகிய சிவகாமியை நரசிம்ம பல்லவர் காதலிப்பதை மகேந்திரவர்மர் விரும்பவில்லை.சாளுக்கிய மன்னர் புலிகேசியுடன் பல்லவர்கள் போரிட்டுக்கொண்டிருக்கும் காலம் அது. பல்லவநாட்டின் எல்லைக காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்து அவரை அனுப்பியிருந்தார் மகேந்திரவர்மர். வடபுலம் செல்லும் பரஞ்சோதி சாளுக்கியரிடம் சிக்கி வஜ்ரபாகு என்னும் ஒற்றரால் காப்பாற்றப்படுகிறார். பின்னர் வஜ்ரபாகு மகேந்திரவர்மர்தான் என தெரியவருகிறது. பரஞ்சோதி மகேந்திரவர்மரால் படைத்தளபதியாகிறார். நரசிம்மவர்ம பல்லவருக்கும் நெருக்கமாக இருக்கிறார். சிவகாமியை நாகநந்தியின் சூழ்ச்சிகளில் இருந்து நரசிம்மவர்ம பல்லவர் காப்பாற்றுகிறார்.
காஞ்சி மேல் படையெடுத்து வந்த புலிகேசி அதை முற்றுகையிடுகிறார். மகேந்திரவர்ம பல்லவரிடம் சமரசம் பேசுவதற்காக வந்த புலிகேசி காஞ்சியின் செல்வ வளம் கண்டு சீற்றம் கொள்கிறார். காஞ்சியை சூறையாடவும், சிற்பிகளின் கைகளை வெட்டவும் ஆணையிடுகிறார். சாளுக்கியப் படைகளிடமிருந்து ஆயனரையும் சிவகாமியையும் நாகநந்தி அடிகள் மீட்கிறார். அவர் புலிகேசியின் உடன்பிறந்தவர் என்பது தெரியவருகிறது. புலிகேசியுடன் நடந்த போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக்களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியைப் புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார்.
சிவகாமி வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். தனக்கு சிவகாமி மேல் இருந்த காதலை தன் தம்பி புலிகேசியிடம் நாகநந்தி கூறுகிறார். சிவகாமியை கொடுமைப்படுத்தி சபையில் ஆடச்செய்கிறார் புலிகேசி. சிவகாமி தன் காதலர் நரசிம்ம பல்லவர் வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கித் தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைக்கிறாள். தன்னை அழைத்துச்செல்ல ரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுக்கிறாள்.
புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் மறைகிறார். ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர் படைதிரட்டுவதற்காக பாண்டிய இளவரசி வானமாதேவியை மணம்புரிகிறார். வாதாபி மேல் படையெடுத்துச் செல்லும் நரசிம்மவர்மர் அதை தீக்கிரையாக்குகிறார். புலிகேசி கொல்லப்பட , நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று சிதையிலிட்டுவிட்டு புலிகேசிபோல் வேடமிட்டு போர்க்களம் வந்து போரிடுகிறார். போரில் ஒருகை யை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்பதனால் உயிருடன் விடப்படுகிறார். பரஞ்சோதியார் சைவதுறவியாக மாறுகிறார். நாடு திரும்பிய சிவகாமி நரசிம்மவர்ம பல்லவர் மணம்புரிந்துகொண்ட செய்தியை அறிந்து பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாகக் காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொள்கிறாள்.
உசாத்துணை
- பல்லவர் வரலாறு . டாக்டர். மா. இராசமாணிக்கனார்