மதார்: Difference between revisions
No edit summary |
|||
Line 19: | Line 19: | ||
* [https://vishnupuramvattam.in/content/3531 குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார், விஷ்ணுபுரம்வட்டம்.இன்] | * [https://vishnupuramvattam.in/content/3531 குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார், விஷ்ணுபுரம்வட்டம்.இன்] | ||
* [https://bookday.in/veyil-paranthathu-book-review/ நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்] | * [https://bookday.in/veyil-paranthathu-book-review/ நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்] | ||
*[https://mayir.in/poetry/mathar/1192/ மதார் கவிதைகள் மயிர் இணையதளம்] | |||
*[https://www.jeyamohan.in/148300/ மதார் கவிதைகள் வேணுதயாநிதி] | |||
*[https://www.youtube.com/watch?v=YxaDhUU__JE வெயில் பறந்தது விழா மதார் ஏற்புரை] | |||
*[https://www.jeyamohan.in/148230/ மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்] | |||
{{finalised}} | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 06:56, 14 June 2022
சா. முகமது மதார் முகைதீன் (எ) மதார் (பிறப்பு: ஏப்ரல் 14, 1993) தமிழ் கவிஞர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏப்ரல் 14, 1993 அன்று சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா இணையருக்குப் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும், ஏழு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தூத்துக்குடியில் இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
2021-ல் திருமணம் ஆனது . மனைவி ஹஸ்மத் ரெஜிபா. ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
முதல் கவிதை 2005-ன் பிற்பகுதியில் வெளியானது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி ஆகியோரை குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வெயில் பறந்தது' பிப்ரவரி, 2021-ல் அழிசி பதிப்பகத்தில் வெளியானது.
இலக்கிய இடம்
கவிதையின் வரிகள் விரியும் திசை வழியாக புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி மனத்தையும் கற்பனையையும் விரிவாக்கிக்கொள்வதாகும், ஆனால் அப்போதும் அறிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவத்துளி எஞ்சியிருக்கும் கவிதைகள், ஆழ்ந்த கவனத்தைக் கோருபவை என மதாரின் கவிதைகள் சொல்லப்படுகின்றன. 'வெயில் பறந்தது' தொகுதி அவருக்கு நல்ல அடித்தளத்தை வழங்கியிருக்கிறது என்று எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
கவிதை தொகுப்பு
- வெயில் பறந்தது (2021)
விருதுகள்
- விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது 2021
உசாத்துணை
- மதார் பேட்டி - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், ஜெயமோகன்.இன்
- குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார், விஷ்ணுபுரம்வட்டம்.இன்
- நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்
- மதார் கவிதைகள் மயிர் இணையதளம்
- மதார் கவிதைகள் வேணுதயாநிதி
- வெயில் பறந்தது விழா மதார் ஏற்புரை
- மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்
✅Finalised Page