உறையூர் இளம்பொன் வணிகனார்: Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) mNo edit summary |
Logamadevi (talk | contribs) |
||
| Line 8: | Line 8: | ||
* வழிபாடு: மரல் நாரைக் கிழித்து மாலை தொடுத்து அணிவித்தனர். மயில்பீலி கட்டிவைத்தனர். | * வழிபாடு: மரல் நாரைக் கிழித்து மாலை தொடுத்து அணிவித்தனர். மயில்பீலி கட்டிவைத்தனர். | ||
* நடுகல்லில் பெயர் பொறித்தனர். | * நடுகல்லில் பெயர் பொறித்தனர். | ||
* பகைவர் ஓட்டிய | * பகைவர் ஓட்டிய ஆநிரைகளைக் கன்றோடு மீட்டுத் தந்தவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. | ||
== பாடல் நடை== | == பாடல் நடை== | ||
<poem> | <poem> | ||
Revision as of 18:44, 7 June 2022
உறையூர் இளம்பொன் வணிகனார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் நடுகல் பற்றிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சோழர்களின் தலைநகரான உறையூரில் பிறந்தார். உறையூரில் பொன்வாணிகம் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
புறநானூற்றின் 264-வது பாடல் இவர் பாடியது. இந்தப்பாடலில் நடுகல் பற்றிய செய்தியும், அதை வழிபடும் முறை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
நடுகல் செய்தி
- பரல் கற்களை அடுக்கிக் கட்டிய பதுக்கைக் கோயிலில் நடுகல் நாட்டினர்.
- வழிபாடு: மரல் நாரைக் கிழித்து மாலை தொடுத்து அணிவித்தனர். மயில்பீலி கட்டிவைத்தனர்.
- நடுகல்லில் பெயர் பொறித்தனர்.
- பகைவர் ஓட்டிய ஆநிரைகளைக் கன்றோடு மீட்டுத் தந்தவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது.
பாடல் நடை
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: tamildigitallibrary
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.