standardised

உறையூர் இளம்பொன் வணிகனார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 24: Line 24:




{{ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:54, 7 June 2022

உறையூர் இளம்பொன் வணிகனார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் நடுகல் பற்றிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழர்களின் தலைநகரான உறையூரில் பிறந்தார். உறையூரில் பொன்வாணிகம் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றின் 264-வது பாடல் இவர் பாடியது. இந்தப்பாடலில் நடுகல் பற்றிய செய்தியும், அதை வழிபடும் முறை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.

நடுகல் செய்தி

  • பரல் கற்களை அடுக்கிக் கட்டிய பதுக்கைக் கோயிலில் நடுகல் நாட்டினர்.
  • வழிபாடு: மரல் நாரைக் கிழித்து மாலை தொடுத்து அணிவித்தனர். மயில்பீலி கட்டிவைத்தனர்.
  • நடுகல்லில் பெயர் பொறித்தனர்.
  • பகைவர் ஓட்டிய ஆனிரைகளைக் கன்றொடு மீட்டுத் தந்தவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது.

பாடல் நடை

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.