மு.ராஜேந்திரன்: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
(Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்Corrected Category:வரலாற்றாய்வாளர்கள் to Category:வரலாற்றாய்வாளர்) |
||
Line 55: | Line 55: | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:வரலாற்றாய்வாளர்]] |
Latest revision as of 14:13, 17 November 2024
- ராஜேந்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜேந்திரன் (பெயர் பட்டியல்)
மு. ராஜேந்திரன்: ( பிறப்பு: மே 6, 1959) தமிழ் நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.
பிறப்பு, கல்வி
மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே வடகரை என்னும் ஊரில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றபின் மதுரை சட்டக் கல்லூரியில் பட்டம்பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்டம் முதுகலை படித்தார். ஆட்சிப்பணியில் நுழைந்தபின் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து 1998-ல் முனைவர் பட்டம் பெற்றார்.சட்ட வல்லுநர் திருவள்ளுவர் என்ற தலைப்பில் அந்த ஆய்வேடு 2011-ல் நூலாகியது.
தனிவாழ்க்கை
மு.ராஜேந்திரன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
வரலாற்றாய்வு
மு.ராஜேந்திரன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் முழுமையாக ஆவணப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பல்லவர், சேரர் ,பாண்டியர் , சோழர் காலச் செப்பேடுகளை ஆவணங்களில் இருந்து நூல்வடிவாக தொகுத்து வெளியிட்டார். வந்தவாசிப்போர் என்னும் நூலை அ. வெண்ணிலாவுடன்இணைந்து வெளியிட்டார்.அ.வெண்ணிலாவுடன் இணைந்து ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை பிழைநோக்கி பதிப்பித்தார்.
இலக்கிய வாழ்க்கை
மு.ராஜேந்திரன் தன்னுடைய ஊரின் பின்னணியில், மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையைச் சொல்லும் 'வடகரை' என்னும் முதல் நாவலை எழுதினார். பிரெஞ்சு ஆதிக்கக் கால பாண்டிச்சேரியின் பின்னணியில் மதாம் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து முதலில் நாடுகடத்தப்பட்டவர் காளையார் கோயிலை ஆட்சி செய்த மருது சகோதரர்களின் குடும்பத்தினர் . அதை பின்னணியாக்கி '1801 'மற்றும் காலாபாணி ஆகிய நாவல்களை எழுதினார்.
விருதுகள்
- சாகித்ய அகாதெமி விருது 2022
- 1801 - நூலுக்காக மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. 2018
- தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது - 2017 (வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு)
- நூலுக்காக SRM பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. (வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு )
- கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது - 2015
- தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு - 2013 (பாண்டியர் காலச் செப்பேடுகள்)
- தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது - 2012(சோழர் காலச் செப்பேடுகள்)
நூல்கள்
நாவல்
- மதாம் - 2021
- காலாபாணி - 2021
- வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு - 2014
- 1801 (நாவல்) - 2016
சிறுகதை
- செயலே சிறந்த நூல் -2018
- வெயில் தேசத்தில் தேசம் - 2018
- கம்பலை முதல் - 2015 (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
- பாதாளி (சிறுகதைகள்) - 2016
- யானைகளின் கடைசி தேசம் - 2018
வரலாறு
- பல்லவர் செப்பேடுகள் - 2015
- சேரர் செப்பேடுகள் - 2015
- பாண்டியர் காலச் செப்பேடுகள் - 2012
- சட்ட வல்லுநர் திருவள்ளுவர் - 2011
- சோழர் காலச் செப்பேடுகள் - 2011
தொகுத்த நூல்கள்
- ’வந்தவாசிப் போர் - 250’ - 2010 (கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து)
- திருவண்ணாமலை - 2009
- மகாமகம் - 1995
- காவிரி தந்த கலைச் செல்வம்- 1992
பதிப்பு
- ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)
மொழி பெயர்ப்பு
- இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை (ஆங்கிலத்திலிருந்து)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Dec-2022, 02:49:49 IST