under review

யவனிகா ஸ்ரீராம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:யவனிகா_ஸ்ரீராம்.JPG|thumb|jeyamohan.in]]

யவனிகா ஸ்ரீராம் [மே 6, 1962] கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். 1993 முதல் தமிழின் நவீன கவிதை வழியில் விலகி தனித் தன்மையான அரசியல் அவதானிப்புடன் எழுதுபவர்.  

== பிறப்பு மற்றும் கல்வி ==
== பிறப்பு மற்றும் கல்வி ==
 
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 1962-ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ராமசாமி-மகமாயி அம்மாளுக்கு இரண்டாவது மகன். இயற்பெயர் இளங்கோவன். சின்னாளப்பட்டி தேவாங்கர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 1962-ம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ராமசாமி-மகமாயி அம்மாளுக்கு இரண்டாவது மகன். இயற்பெயர் இளங்கோவன். சின்னாளப்பட்டி தேவாங்கர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார்.
 
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
 
பதினைந்து வயதிலேயே வணிகத்தில் ஈடுபட்டவர். பின்னர் காப்பிக் கொட்டை, ஜவுளி வியாபாரங்கள் செய்தார். தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்க, கிழக்காசிய நாடுகளுக்கும், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பல தடவை பயணம் செய்தவர்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
 
[[File: யவனிகா_ஸ்ரீராம்_கவிதைகள்.jpg |thumb|நன்றி யவனிகா ஸ்ரீராம் தளம்]] பாரதி, பாரதிதாசன், வானம்பாடி கவிஞர்களின் கவிதைகளை வாசித்து, தனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள் ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் என்று குறிப்பிடுகிறார்.

யவனிகா ஸ்ரீராம் தனது 30-ஆம் வயதில் வணிகம் சார்ந்து அதிகம் பயணத்தில் இருந்த காலகட்டத்தில், சுமார் எட்டு ஆண்டு காலங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘கடவுளின் நிறுவனம்’. வணிகத்துக்காகப் பல நாடுகளில் அலைந்ததிலிருந்து கிடைத்த நகர்மயமான உலகு குறித்த அறிவும், தமிழ் மரபில் இருக்கக்கூடிய தத்துவங்களுடனான பரிச்சயமும் ஏற்படுத்திய தாக்கமும், அதோடு அவர் கொண்ட முரண்பாடுகளும் முழுமையாக அத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கிறது.

Line 23: Line 16:

தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார்.

== விருதுகள் ==
== விருதுகள் ==
 
* பாண்டிச்சேரி மீறல் அமைப்பு வழங்கிய கபிலர் விருது
* 
பாண்டிச்சேரி மீறல் அமைப்பு வழங்கிய கபிலர் விருது

* விருதாச்சலம் களம்புதிது விருது
* விருதாச்சலம் களம்புதிது விருது
Line 33: Line 24:

* ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது
* ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை.

Line 41: Line 30:

"தொண்ணூறுகளில் மார்க்சிய லட்சியவாதத்தின்  வீழ்ச்சிக்குப்பிறகு இடதுசாரிக் கவிஞர்களின் ஓர் அணி தமிழில் உருவாகியது. அவர்கள் லட்சியவாத்தை உணர்ச்சிகரமாக கூவி முன் நிறுத்தவில்லை. அறைகூவும் தோரணை அவர்களிடமில்லை.  அவர்களை பெரிதும் பாதித்த கவிஞர்கள் ஆத்மா நாம் போன்ற இருத்தலியலை எளிய விளையாட்டுத்தனம் மூலம் முன்வைத்தவர்கள். மொழியாக்கம் வழியாக வந்த ழாக் பிரெவர் போன்ற ஐரோப்பியக் கவிஞர்கள். யவனிகா ஸ்ரீராம், லிபி ஆரண்யா இருவரையும் அவர்களில் முதன்மையானவர்களாகச் சுட்டிக்காட்டலாம்." என்று [[ஜெயமோகன்]] குறிப்பிடுகிறார்

== படைப்புகள் ==
== படைப்புகள் ==
==== கவிதைத் தொகுப்புகள் ====
==== கவிதைத் தொகுப்புகள் ====
* இரவு என்பது உறங்க அல்ல
* இரவு என்பது உறங்க அல்ல
* கடவுளின் நிறுவனம்
* கடவுளின் நிறுவனம்
* சொற்கள் உறங்கும் நூலகம்
* சொற்கள் உறங்கும் நூலகம்  
* திருடர்களின் சந்தை
* திருடர்களின் சந்தை  
* காலத்தில் வராதவன்

* காலத்தில் வராதவன்
* தலைமறைவு காலம்
* தலைமறைவு காலம்  
* அலெக்ஸாண்டரின் காலனி
* அலெக்ஸாண்டரின் காலனி
==== கட்டுரைத் தொகுப்பு ====
==== கட்டுரைத் தொகுப்பு ====
* நிறுவனங்களின் கடவுள்
* நிறுவனங்களின் கடவுள்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://yavanikasriram.wordpress.com/blog/ யவனிகா ஸ்ரீராம் தளம்]

Revision as of 09:49, 3 June 2022

jeyamohan.in

யவனிகா ஸ்ரீராம் [மே 6, 1962] கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். 1993 முதல் தமிழின் நவீன கவிதை வழியில் விலகி தனித் தன்மையான அரசியல் அவதானிப்புடன் எழுதுபவர்.

பிறப்பு மற்றும் கல்வி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 1962-ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ராமசாமி-மகமாயி அம்மாளுக்கு இரண்டாவது மகன். இயற்பெயர் இளங்கோவன். சின்னாளப்பட்டி தேவாங்கர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார்.

தனி வாழ்க்கை

பதினைந்து வயதிலேயே வணிகத்தில் ஈடுபட்டவர். பின்னர் காப்பிக் கொட்டை, ஜவுளி வியாபாரங்கள் செய்தார். தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்க, கிழக்காசிய நாடுகளுக்கும், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பல தடவை பயணம் செய்தவர்.

இலக்கிய வாழ்க்கை

நன்றி யவனிகா ஸ்ரீராம் தளம்

பாரதி, பாரதிதாசன், வானம்பாடி கவிஞர்களின் கவிதைகளை வாசித்து, தனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள் ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் என்று குறிப்பிடுகிறார்.

யவனிகா ஸ்ரீராம் தனது 30-ஆம் வயதில் வணிகம் சார்ந்து அதிகம் பயணத்தில் இருந்த காலகட்டத்தில், சுமார் எட்டு ஆண்டு காலங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘கடவுளின் நிறுவனம்’. வணிகத்துக்காகப் பல நாடுகளில் அலைந்ததிலிருந்து கிடைத்த நகர்மயமான உலகு குறித்த அறிவும், தமிழ் மரபில் இருக்கக்கூடிய தத்துவங்களுடனான பரிச்சயமும் ஏற்படுத்திய தாக்கமும், அதோடு அவர் கொண்ட முரண்பாடுகளும் முழுமையாக அத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கிறது.

தமிழ்க் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக, ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம்.

'சொற்கள் உறங்கும் நூலகம்','தலைமறைவுக் காலம்' போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத் தொகுதிகள். 'நிறுவனங்களின் கடவுள்' என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது.

தமிழில் இதுவரை ஏழு கவிதைத்தொகுதிகளும், ஒரு கட்டுரைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார்.

விருதுகள்

  • பாண்டிச்சேரி மீறல் அமைப்பு வழங்கிய கபிலர் விருது
  • விருதாச்சலம் களம்புதிது விருது
  • நெய்வேலி லிக்னைட் வழங்கிய சிறந்த படைப்பாளர் விருது
  • ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது

இலக்கிய இடம்

உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை.

இவரது கவிதைகள் சமகாலத்தில் பின்காலனித்துவ அரசியல் பார்வைகளைக் கொண்டவை.

"தொண்ணூறுகளில் மார்க்சிய லட்சியவாதத்தின்  வீழ்ச்சிக்குப்பிறகு இடதுசாரிக் கவிஞர்களின் ஓர் அணி தமிழில் உருவாகியது. அவர்கள் லட்சியவாத்தை உணர்ச்சிகரமாக கூவி முன் நிறுத்தவில்லை. அறைகூவும் தோரணை அவர்களிடமில்லை.  அவர்களை பெரிதும் பாதித்த கவிஞர்கள் ஆத்மா நாம் போன்ற இருத்தலியலை எளிய விளையாட்டுத்தனம் மூலம் முன்வைத்தவர்கள். மொழியாக்கம் வழியாக வந்த ழாக் பிரெவர் போன்ற ஐரோப்பியக் கவிஞர்கள். யவனிகா ஸ்ரீராம், லிபி ஆரண்யா இருவரையும் அவர்களில் முதன்மையானவர்களாகச் சுட்டிக்காட்டலாம்." என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • இரவு என்பது உறங்க அல்ல
  • கடவுளின் நிறுவனம்
  • சொற்கள் உறங்கும் நூலகம்
  • திருடர்களின் சந்தை
  • காலத்தில் வராதவன்
  • தலைமறைவு காலம்
  • அலெக்ஸாண்டரின் காலனி

கட்டுரைத் தொகுப்பு

  • நிறுவனங்களின் கடவுள்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.