under review

பாரதி பாஸ்கர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
mNo edit summary
 
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=பாரதி|DisambPageTitle=[[பாரதி (பெயர் பட்டியல்)]]}}

[[File:Bharathi.jpg|thumb|பாரதி பாஸ்கர்]]

பாரதி பாஸ்கர் (ஜூன் 22, 1969) தமிழ் மேடைப்பேச்சாளர். இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் பேருரைகள் நிகழ்த்துகிறார். வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்
பாரதி பாஸ்கர் (ஜூன் 22, 1969) தமிழ் மேடைப்பேச்சாளர். இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் பேருரைகள் நிகழ்த்துகிறார். வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
பாரதி பாஸ்கர் ஜூன் 22, 1969-ம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணன் - கல்பகம் இணையருக்கு பிறந்தார்.  சென்னைலேடி வெல்லிங்டன் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணியில் ஆரம்பக்கல்வி, ராணி மெய்யம்மை பள்ளி,  தூய அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிநிறைவு. அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) யில் பி.டெக் (வேதியியல் தொழில்நுட்பம்) சென்னை, . கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம்) எம்.பி.ஏ முடித்தார்

Latest revision as of 10:22, 3 November 2024

பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் (ஜூன் 22, 1969) தமிழ் மேடைப்பேச்சாளர். இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் பேருரைகள் நிகழ்த்துகிறார். வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

பிறப்பு, கல்வி

பாரதி பாஸ்கர் ஜூன் 22, 1969-ம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணன் - கல்பகம் இணையருக்கு பிறந்தார். சென்னைலேடி வெல்லிங்டன் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணியில் ஆரம்பக்கல்வி, ராணி மெய்யம்மை பள்ளி, தூய அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிநிறைவு. அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) யில் பி.டெக் (வேதியியல் தொழில்நுட்பம்) சென்னை, . கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம்) எம்.பி.ஏ முடித்தார்

தனிவாழ்க்கை

பாரதி பாஸ்கர் மார்ச் 7, 1991-ல் பாஸ்கர் லட்சுமணனை மணந்தார். காவ்யா, நிவேதிதா என இரு மகள்கள். சிடி வங்கியில் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆக பணியாற்றி உடல்நிலை குறைவால் பணிவிடுவிப்பு பெற்றார்.

மேடை, இலக்கிய வாழ்க்கை

காரைக்குடி கம்பன் விழாவில் 1983-ல் ஆற்றியது முதல் உரை. அமரர் அ.சா. ஞானசம்பந்தன், திரு. சாலமன் பாப்பையா, திரு. தெ. ஞானசுந்தரம் ஆகியோர் மேடைப்பேச்சில் தன் மொழியிலும் பார்வையிலும் செல்வாக்கு செலுத்தியவர்கள் என்கிறார், 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு’ என்னும் தொடர் அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து பின்னர் விகடன் பிரசுரமாக முதலில் வெளிவந்தது,

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் கம்பன் விருது - 2022
  • திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய செந்தமிழ் கலாநிதி விருது - 2018
  • ஶ்ரீராம் நிறுவனம் வழங்கிய பாரதி இலக்கியச்செல்வர் விருது - 2011
  • மதுரை கம்பன் கழகம் வழங்கிய வள்ளல் சடையப்பர் விருது - 2017

பண்பாட்டு இடம்

பாரதி பாஸ்கர் தமிழகத்தின் புகழ்பெற்ற இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராக அறியப்படுகிறார். மரபிலக்கியத்துடன் நவீன இலக்கியத்தையும் மேடையில் முன்வைத்து வருகிறார். மின்னூடகங்களிலும் இலக்கிய உரைகளை ஆற்றுவதுடன் இலக்கிய நிகழ்வுகளையும் அளித்து வருகிறார்

நூல்கள்

  • சிறகை விரி, பற
  • நீ நதிபோல் ஓடிக்கொண்டிரு
  • அப்பா எனும் வில்லன்
  • ஒரு கடிதம் இன்னொரு கடிதம்
  • பெரிய ஆள்
  • துரத்தும் ஆசைகள்
  • பெற்றவள் பற்றிய குறிப்புகள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:09 IST