வேங்கடலட்சுமி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
[[File:பழனியாண்டி சிறுகதை.jpg|thumb|பழனியாண்டி சிறுகதை]] | [[File:பழனியாண்டி சிறுகதை.jpg|thumb|பழனியாண்டி சிறுகதை (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)]] | ||
வேங்கடலட்சுமி (20ஆம் நூற்றாண்டு தொடக்க காலம்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். இவருடைய தங்கம்மாள் நாவல் குறிப்பிடத்தகுந்த படைப்பு. | வேங்கடலட்சுமி (20ஆம் நூற்றாண்டு தொடக்க காலம்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். இவருடைய தங்கம்மாள் நாவல் குறிப்பிடத்தகுந்த படைப்பு. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
Revision as of 14:27, 31 May 2022
வேங்கடலட்சுமி (20ஆம் நூற்றாண்டு தொடக்க காலம்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். இவருடைய தங்கம்மாள் நாவல் குறிப்பிடத்தகுந்த படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நாவலை வெளியிட வி.குப்புசாமி உதவியிருக்கிறார்
இலக்கிய வாழ்க்கை
'பழனியாண்டி' என்னும் சிறுகதை 1944-இல் குமரிமலர் இதழில் வெளியானது. வேங்கடலட்சுமி அக்காலத்தின் குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியர்களுள் ஒருவர். கல்கி, காவேரி, கலைமகள், மங்கை, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. கல்கி இதழில் நிறையச் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது குறிப்பிடத்தகுந்த நாவல்களுள் ஒன்று ’தங்கம்மாள்’. ‘அந்தகன் குழலோசை', 'சங்கமித்திரை' ( நாடகம் ) போன்றவை இவரது பிற படைப்புகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, மோகினி முதலிய கதைகள்' என்ற தலைப்பில் அல்லயன்ஸ் பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.
இலக்கிய இடம்
தங்கம்மாள் நாவல் பற்றி அம்பை, "1944ஆம் ஆண்டு 'தங்கம்மாள்' என்ற நாவல் வேங்கடலட்சுமியால் எழுதப் பெற்றது. இவர் பிறப்பால் மலையாளி ஆயினும் நல்ல தமிழில் இவர் நாவல் படைத்துள்ளார்” என்கிறார
நூல்கள் பட்டியல்
நாவல்
- தங்கம்மாள் (1944)
பிற
- அந்தகன் குழலோசை
- சங்கமித்திரை (நாடகம்)
- பழனியாண்டி (சிறுகதை)
- மோகினி முதலிய கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
உசாத்துணை
- விடுதலைக்கு முந்தைய பெண் நாவலாசிரியர்கள்- பழனியப்பன்
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.