எலிசா மால்ட்: Difference between revisions
| Line 10: | Line 10: | ||
கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845) வில்லியம் ஆல்பிரட் (1852) அடிங்டன் (1857) ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847) மார்த்தா லூயிசா(1849) மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். | கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845) வில்லியம் ஆல்பிரட் (1852) அடிங்டன் (1857) ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847) மார்த்தா லூயிசா(1849) மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். | ||
1833ல் கால்டுவெல் குடும்பம் தூத்துக்குடிக்குச் சென்றது. கால்டுவெல் ஆகஸ்ட் 28, 1891 ல் மறைந்தார். எஸ்பிஜி அமைப்பு அவருக்கு ரூ 150 பென்ஷனாக வழங்கப்பட்டது. இந்திய மக்களுக்கு மதச்சேவை ஆற்றியமைக்காக கிளாட்ஸ்டோன் நினைவு நிதி (Royal Bounty on the recommendation of Mr Gladstone) இந்த உதவித்தொகையை வழங்கியது | 1833ல் கால்டுவெல் குடும்பம் தூத்துக்குடிக்குச் சென்றது. கால்டுவெல் ஆகஸ்ட் 28, 1891 ல் மறைந்தார். எஸ்பிஜி அமைப்பு அவருக்கு ரூ 150 பென்ஷனாக வழங்கப்பட்டது. இந்திய மக்களுக்கு மதச்சேவை ஆற்றியமைக்காக கிளாட்ஸ்டோன் நினைவு நிதி (Royal Bounty on the recommendation of Mr Gladstone) இந்த உதவித்தொகையை வழங்கியது. | ||
== மதப்பணி == | |||
எலிஸா கால்டுவெல்லின் மதப்பணிகளுக்கு துணைநின்றார். இடையன்குடியிலும் பின்னர் தூத்துக்குடியிலும் கிறிஸ்தவ இறைச்செய்தியாளராகப் பணியாற்றினார். இடையன்குடிக்கு அருகே உள்ள குட்டம் என்ற ஊரில் ஜெனனா (Zenana) என்னும் அமைப்பை தொடங்கினார். முதலில் இரண்டு பெண்களுக்கு வேதாகமப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் அக்காலத்தில் இற்செறிப்பு முறையால் வீடுகளுக்குள் வாழ்ந்த நாடார் இனப்பெண்களுக்கு இல்லம்தேடிச்சென்று மதபோதனை செய்தனர். இது ஜெனனா ஊழியம் என அழைக்கப்பட்டது. இவர்களுக்குரிய நிதியை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கடிதம் வழியாக எலிஸா திரட்டினார். | |||
== கல்விப்பணி == | |||
எலிஸா அம்மையார் கால்டுவெல் தொடங்கிய கல்விப்பணிகளில் இணைநின்றார். இடையன்குடியில் பெண்களுக்கான பள்ளியும் பின்னர் பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளியும் அவரால் தொடங்கப்பட்டன. | |||
1883ல் புதுக்கோட்டையில் அருள்திரு ஷாராக் அவர்களால் நிறுவப்பட்ட உண்டு உறைவிடப்பள்ளியின் நிலை மிக மோசமாக இருந்தமையால் எலிஸா நிதி சேர்த்து அனுப்பி 60 பெண்கள் தங்கி பயின்றுவந்த அந்த அமைப்பை நீடிக்க உதவினார். | |||
“என் மனைவி தன் திறமையினால் பள்ளிக்கூடங்களை நன்கு நடத்தி தான் ஒரு மிஷனரியின் மனைவி என்பதை செயலில் நிரூபித்துவிட்டார். முதலில் மிஷனரியாகவோ பின்னர் பேராயராகவோ ஏதாவது நன்மையானதை நான் செய்திருந்தால் அந்தப்பெருமை இறைவனுக்குப்பிறகு அவர் எனக்கு இரக்கமாய் அளித்த என் மனைவியின் முடிவெடுக்கும் திறமை, ஆராய்ந்து பார்க்கும் கூர்மை, இடைவிடா மூயற்சி மற்றும் பொறுமை ஆகியவற்றையே சாரும்” என்று கால்டுவெல் தன் நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். | |||
== தொழில் == | |||
== மறைவு == | == மறைவு == | ||
Revision as of 20:42, 1 November 2024
எலிசா மால்ட் (1822-1899) (Eliza Caldwell, Mault )எலிஸா கால்டுவெல். கிறிஸ்தவ இறைப்பணியாளர். கல்வியாளர். பிஷப் ராபர்ட் கால்டுவெல் அவர்க்ளின் துணைவி
பிறப்பு, இளமை
எலிஸா மால்ட் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் நாகர்கோயில் பகுதியில் லண்டன் மிஷன் சொசைட்டி இறைப்பணியாளராக இருந்த சார்ல்ஸ் மால்ட், மார்த்தா மால்ட் இணையருக்கு நாகர்கோயிலில் 1822 ல் பிறந்தார். ஐந்து வயதில் கல்வி கற்கும்பொருட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். லண்டனில் லண்டன்மிஷன் பள்ளியில் கல்விபயின்றபின் 1836ல் திரும்பி வந்தார். நாகர்கோயிலில் தன் தந்தைக்கும் தாய்க்கும் மதப்பணியில் உதவிபுரிந்தார். எலிஸா தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். முறையான கிறிஸ்தவ இறையியல் கல்வியும் பெற்றிருந்தார்.
தனிவாழ்க்கை
எலிஸா மால்ட் 20 மார்ச் 1844-ல் நாகர்கோயில் கஸ்பா ஆலயத்தில் (ஹோம் சர்ச்) நடைபெற்ற திருமணத்தில் 29 வயதான கால்டுவெல் ஐ மணந்தார். மெய்ஞானபுரத்தில் இறைப்பணியாற்றி வந்த ஜான் தாமஸ் இத்திருமணத்தை நடத்திவைத்தார். கால்டுவெல்லுடன் எலிஸா இடையன்குடிக்கு சென்று வாழ்ந்தார்.
கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845) வில்லியம் ஆல்பிரட் (1852) அடிங்டன் (1857) ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847) மார்த்தா லூயிசா(1849) மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர்.
1833ல் கால்டுவெல் குடும்பம் தூத்துக்குடிக்குச் சென்றது. கால்டுவெல் ஆகஸ்ட் 28, 1891 ல் மறைந்தார். எஸ்பிஜி அமைப்பு அவருக்கு ரூ 150 பென்ஷனாக வழங்கப்பட்டது. இந்திய மக்களுக்கு மதச்சேவை ஆற்றியமைக்காக கிளாட்ஸ்டோன் நினைவு நிதி (Royal Bounty on the recommendation of Mr Gladstone) இந்த உதவித்தொகையை வழங்கியது.
மதப்பணி
எலிஸா கால்டுவெல்லின் மதப்பணிகளுக்கு துணைநின்றார். இடையன்குடியிலும் பின்னர் தூத்துக்குடியிலும் கிறிஸ்தவ இறைச்செய்தியாளராகப் பணியாற்றினார். இடையன்குடிக்கு அருகே உள்ள குட்டம் என்ற ஊரில் ஜெனனா (Zenana) என்னும் அமைப்பை தொடங்கினார். முதலில் இரண்டு பெண்களுக்கு வேதாகமப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் அக்காலத்தில் இற்செறிப்பு முறையால் வீடுகளுக்குள் வாழ்ந்த நாடார் இனப்பெண்களுக்கு இல்லம்தேடிச்சென்று மதபோதனை செய்தனர். இது ஜெனனா ஊழியம் என அழைக்கப்பட்டது. இவர்களுக்குரிய நிதியை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கடிதம் வழியாக எலிஸா திரட்டினார்.
கல்விப்பணி
எலிஸா அம்மையார் கால்டுவெல் தொடங்கிய கல்விப்பணிகளில் இணைநின்றார். இடையன்குடியில் பெண்களுக்கான பள்ளியும் பின்னர் பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளியும் அவரால் தொடங்கப்பட்டன.
1883ல் புதுக்கோட்டையில் அருள்திரு ஷாராக் அவர்களால் நிறுவப்பட்ட உண்டு உறைவிடப்பள்ளியின் நிலை மிக மோசமாக இருந்தமையால் எலிஸா நிதி சேர்த்து அனுப்பி 60 பெண்கள் தங்கி பயின்றுவந்த அந்த அமைப்பை நீடிக்க உதவினார்.
“என் மனைவி தன் திறமையினால் பள்ளிக்கூடங்களை நன்கு நடத்தி தான் ஒரு மிஷனரியின் மனைவி என்பதை செயலில் நிரூபித்துவிட்டார். முதலில் மிஷனரியாகவோ பின்னர் பேராயராகவோ ஏதாவது நன்மையானதை நான் செய்திருந்தால் அந்தப்பெருமை இறைவனுக்குப்பிறகு அவர் எனக்கு இரக்கமாய் அளித்த என் மனைவியின் முடிவெடுக்கும் திறமை, ஆராய்ந்து பார்க்கும் கூர்மை, இடைவிடா மூயற்சி மற்றும் பொறுமை ஆகியவற்றையே சாரும்” என்று கால்டுவெல் தன் நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.
தொழில்
மறைவு
எலிஸா மால்ட் 1899ல் மறைந்தார். அவருடைய உடல் இடையங்குடியில் கால்டுவெல் கட்டிய தேவாலயத்தின் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது
உசாத்துணை
- அருட்பணியாளர் ராபர்ட் கால்டுவெல். யோ ஞானசந்திர ஜாண்சன்