under review

கே.வி. ஜெயஸ்ரீ: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 50: Line 50:


http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13245
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13245
{{ready for review}}

Revision as of 17:56, 19 May 2022

கே.வி. ஜெயஸ்ரீ

கே.வி. ஜெயஸ்ரீ (ஏப்ரல் 26, 1967) மொழிபெயர்ப்பாளர், பள்ளித் தலைமையாசிரியர், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்.

பிறப்பு, கல்வி, பணி

கே.வி. ஜெயஸ்ரீ கேரள மாநிலம் பாலக்காட்டில் ஏப்ரல் 26, 1967 ல் மாதவி-வாசுதேவன் தம்பதியருக்குப் பிறந்தார்.

இவரின் அக்காவின் பெயர் சுஜாதா. இவரின் தங்கையின் பெயர் கே.வி. ஷைலஜா.

இவரின் தங்கை கே.வி. ஷைலஜா மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்குப் படைப்புகளை மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் எழுத்தாளர் பவா செல்லதுரையின் மனைவி.

கே.வி. ஜெயஸ்ரீ தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார்.

தனி வாழ்க்கை

கே.வி. ஜெயஸ்ரீ  அக்டோபர் 27, 1993 ல் உத்திரகுமாரன் என்பவரை மணந்தார். இவருக்கு சுகானா, அமரபாரதி ஆகிய இரண்டு பிள்ளைகள். சுகானா மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்குப் படைப்புகளை மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இலக்கிய  வாழ்க்கை

நிலம் பூத்து மலர்ந்த நாள் (நாவல்)

கே.வி. ஜெயஸ்ரீ மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் பணியில் 20 ஆண்டுகளாக ஈடுபடுகிறார். எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ என்ற நாவலை எழுதினார். இது கேரள இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த நாவல், தமிழ்ச் சங்க இலங்கியங்களில் இடம்பெற்றுள்ள பாணர் வாழ்வியலை விவரிப்பதாக அமைந்துள்ளது.

இந்த நாவலை கே.வி. ஜெயஸ்ரீ ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார். இதற்காக 2019 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி தமிழில் மொழிபெயர்ப்பு படைப்புகள் பிரிவில் கே.வி. ஜெயஸ்ரீக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்தது.

இலக்கிய இடம்

மலையாள நாவலைத் தமிழ் மக்களின் வாசிப்புச் சுவைக்கு ஏற்ப உரிய தமிழ்ச்சொற்களைக் கையாண்டு அந்தப் படைப்பினை மூலமொழிப் படைப்புக்கு நிகராக மாற்றுவதில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, எழுத்தாளர் சுகுமாரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் வரிசையில் வைக்கத்தக்கவர் கே.வி. ஜெயஸ்ரீ.  

''மூலத்தில் இதன் தலைப்பு ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ தமிழாக்கத்தில் கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ தலைப்பின் இயல்பான மொழிமாற்றம் போலவே, மொத்த நாவலின் மொழிமாற்றமும் எந்த நெருடலும் இன்றி, பூ உதிர்வது போல நடந்திருக்கிறது." - நாஞ்சில் நாடன்

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • இதுதான் என் பெயர் (சிறுகதைகள்) – பால் சக்காரியா
  • இரண்டாம் குடியேற்றம் (சிறுகதைகள்) – பால் சக்காரியா
  • அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் (சிறுகதைகள்) - பால் சக்காரியா
  • யேசு கதைகள் (சிறுகதைகள்) - பால் சக்காரியா
  • பால் சக்காரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
  • பிரியாணி (சிறுகதைகள்) – சந்தோஷ் ஏச்சிக்கானம்
  • ஒற்றைக் கதவு (சிறுகதைகள்) – சந்தோஷ் ஏச்சிக்கானம்
  • கவிதையும் நீதியும் (நேர்காணல்) – சுகதகுமாரியுடன் ஒரு நேர்காணல்
  • நிசப்தம் (கவிதைகள்) – சியாமளா சசிகுமார்
  • வார்த்தைகள் கிடைக்காத தீவில் (கவிதைகள்) – ஏ. அய்யப்பன்
  • ஹிமாலயம் (பயணக் கட்டுரை) – ஷௌக்கத்
  • உஷ்ணராசி (கரைப்புறத்தின் இதிகாசம்) - கே.வி. மோகன் குமார்
  • நிலம் பூத்து மலர்ந்த நாள் (நாவல்) – மனோஜ் குரூர்

விருதுகள்

  • திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
  • திருப்பூர் திசை எட்டும் விருது
  • அங்கம்மாள் முத்துச்சாமி நினைவு அறக்கட்டளை விருது
  • சாகித்ய அகாடெமி - சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2019)

உசாத்துணைகள்

https://www.jeyamohan.in/157995/

https://nanjilnadan.com/2020/06/29/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/

https://tamil.asianetnews.com/politics/sagitta-academy-award-for-translation-writer-kv-jayasri-q6agy0

https://www.hindutamil.in/news/literature/541909-sahitya-academy-awardee-k-v-jeyasri-interview.html

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13245


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.