கஜாம்பிகை: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
No edit summary
Ramya (talk | contribs)
No edit summary
Line 17: Line 17:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 12:38, 10 May 2022

கஜாம்பிகை தமிழின் தொடக்க கால எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்ரீமதி (எ) அம்பரீஷோபாக்கியானம் முக்கியமான படைப்பு. குறுகிய காலத்திலேயே மூன்று பதிப்புகளைக் கண்டது.

வாழ்க்கைக் குறிப்பு

கஜாம்பிகை திருசிரபுரம் பிரம்மஸ்ரீ சிவானந்த யோகீஸ்வரரின் இளைய மகளாக திருச்சியில் பிறந்தார். தந்தை ‘திருச்செந்தில் வெண்பா அந்தாதி’, சமய நூல்களையும், தொடர்ந்து ஆனந்தபோதினி இதழில் பல இலக்கிய, ஆன்மீக, சமயக் கட்டுரைகளையும் எழுதினார். ’பிரம்மவித்யா’, ‘ஆரிய ஜனப் பிரியன்’ போன்ற இதழ்களின் துணையாசிரியர். கஜாம்பிகையின் அக்காள் பாலசரஸ்வதி தேவகுஞ்சரியம்மாளும் எழுத்தாளர். இலக்கியச் சூழலில் கஜாம்பிகை வளர்ந்தார். இவரது பிற வாழ்க்கைக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

வேறு பெயர்கள்
  • கஜாம்பாள்
  • கஜாம்பிகை அம்மாள்

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீமதி (எ) அம்பரீஷோபாக்கியானம், ஞானாம்பாள் போன்ற கதைகளை எழுதினார். அம்பரீஷோபாக்கியானம் என்பது அம்பரீஷன் எனும் மன்னனின் புராணக் கதை. இந்நூலின் மூன்றாம் பதிப்பு 1917-ல் வெளிவந்தது. 1920-ல் நான்காம் பதிப்பாக வந்தது. குறுகிய காலத்திற்குள்ளேயே பல பதிப்புகள் கண்டதன் மூலம் இவரின் கதைகளுக்கு இருந்த வரவேற்பை அறியலாம். 1907-ல் சக்கரவர்த்தினியில் எழுதிய கெளரி என்ற சிறுகதை புகழ்பெற்றது. வேறு சிறுகதை எழுதியிருக்கிறாரா என்பது பற்றி அறிய முடியவில்லை.

நூல்கள்

  • ஸ்ரீமதி (எ) அம்பரீஷோபாக்கியானம்
  • ஞானாம்பாள்
  • கெளரி (சிறுகதை)

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.