டி.கே. முத்துசாமி: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
|||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=முத்துசாமி|DisambPageTitle=[[முத்துசாமி (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:டி.கே.எஸ் சகோதரர்கள்5.png|thumb|டி.கே.எஸ் சகோதரர்கள் ]] | [[File:டி.கே.எஸ் சகோதரர்கள்5.png|thumb|டி.கே.எஸ் சகோதரர்கள் ]] | ||
டி.கே. முத்துசாமி (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர். டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவர். ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையின் நிறுவனர்களில் ஒருவர். நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார். | டி.கே. முத்துசாமி (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர். டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவர். ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையின் நிறுவனர்களில் ஒருவர். நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார். | ||
Revision as of 18:35, 27 September 2024
- முத்துசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துசாமி (பெயர் பட்டியல்)
டி.கே. முத்துசாமி (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர். டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவர். ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையின் நிறுவனர்களில் ஒருவர். நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
டி.கே. முத்துசாமி டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை, சீதையம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி.
டி.கே. முத்துசாமி ஏப்ரல் 31, 1937-ல் கோலம்மாளை மணந்தார்.
நாடக வாழ்க்கை
டி.கே. முத்துசாமி 1918-ல் சங்கரதாச சுவாமிகள் ஏற்படுத்திய 'மதுரை மீனலோசனி வித்துவ பாலசபை’ என்ற நாடகக் குழுவில் டி.கே.எஸ் சகோதரர்கள் பயிற்சி பெற்றனர். மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பல பகுதிகளுக்கும் சென்று நாடகம் நடித்தனர். ஆகஸ்ட் 3, 1922-ல் தந்தையால் அந்த நாடகக் குழுவிலிருந்து சகோதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய ’பால மனோகர சபை’ என்னும் நாடகக் குழுவில் ஆகஸ்ட் 4, 1922-ல் சகோதரர்களுடன் சேர்க்கப்பட்டார். சங்கரதாஸ் சுவாமிகள் மன வேதனை அடைந்ததால் அக்டோபர் 16, 1922-ல் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் இணைக்கப்பட்டனர்.
'சுலோச்சனா சதி'யில் ராமராக நடித்தார். சீமந்தினியில் சுமேதாவாக நடித்தார். பெரும்பாலான நாடகங்களில் தோழி வேடத்தில் நடித்தார். 1921-ல் கம்பெனி சென்னைக்கு வந்தபிறகு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். நாடக ஆசிரியராக நாடகங்களைத் தயாரிக்கவும் கற்றார். டி.கே.எஸ் சகோதரர்கள் நால்வரில் டி.கே. முத்துசாமி நாடகம் புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். எழுத்தாளர் நிருபாதேவியின் மலையாள நாவலான அன்னபூர்ணாவை “குமாஸ்தாவின் பெண்” என்ற பெயரில் நாடகமாக எழுதினார். 1935-ல் பிற டி.கே.எஸ். சகோதரர்கள் மூவரும் ’மேனகா’ என்ற பேசும் படத்தில் நடித்தபோது டி.கே. முத்துசாமி அதன் இசையமைப்பாளராக இருந்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 20:21:51 IST