under review

பண்டார சாத்திரங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
 
Line 1: Line 1:
{{OtherUses-ta|பண்டாரம்|[[பண்டாரம் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=பண்டாரம்|DisambPageTitle=[[பண்டாரம் (பெயர் பட்டியல்)]]}}
மடங்களில் வாழ்ந்த சமயத் தலைவர்களால் எழுதப்பட்ட நாற்பது நூல்கள் பண்டார சாத்திரங்கள் எனப்படுகின்றன. இவை, சைவ மடங்களில் பொறுப்பேற்றுச் சைவ சமயம் வளரப் பணியாற்றிய பண்டார சந்நிதிகளால் இயற்றப்பட்டவை. அவர்கள் சைவ சமயம் பற்றிச் செய்த ஆராய்ச்சிகளும் அவர்களது ஆசாரியர்கள் செய்த உபதேசங்களும் இப்பண்டார சாத்திர நூல்களில் அடங்கியுள்ளன. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் பண்டார சாத்திரங்களை இயற்றியுள்ளனர்.  

Latest revision as of 18:26, 27 September 2024

பண்டாரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டாரம் (பெயர் பட்டியல்)

மடங்களில் வாழ்ந்த சமயத் தலைவர்களால் எழுதப்பட்ட நாற்பது நூல்கள் பண்டார சாத்திரங்கள் எனப்படுகின்றன. இவை, சைவ மடங்களில் பொறுப்பேற்றுச் சைவ சமயம் வளரப் பணியாற்றிய பண்டார சந்நிதிகளால் இயற்றப்பட்டவை. அவர்கள் சைவ சமயம் பற்றிச் செய்த ஆராய்ச்சிகளும் அவர்களது ஆசாரியர்கள் செய்த உபதேசங்களும் இப்பண்டார சாத்திர நூல்களில் அடங்கியுள்ளன. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் பண்டார சாத்திரங்களை இயற்றியுள்ளனர்.

பண்டார சாத்திர நூல்கள்

திருவாவடுதுறை ஆதினம் வெளியிட்டவை:

திருவாவடுதுறை ஆதினம் 13 நூல்களை வெளியிட்டது. அவை,

  • அம்பலவாண தேசிகர் - தசகாரியம்
  • சுவாமிநாத தேசிகர் - தசகாரியம்
  • சன்மார்க்க சித்தியார்
  • சிவாச்சிரமத் தெளிவு
  • சித்தாந்தப் பஃறொடை
  • உபதேசப் பஃறொடை
  • பஞ்சாக்கரப் பஃறொடை
  • சித்தாந்த சிகாமணி
  • உபாய நிட்டை வெண்பா
  • நிட்டை விளக்கம்
  • உபதேச வெண்பா
  • அதிசய மாலை
  • நமச்சிவாய மாலை

- என்பன.

தருமபுர ஆதீனத்தின் முதற் குரவரான குருஞானசம்பந்தர் அருளிய நூல்கள்:

  • சொக்கநாத வெண்பா
  • சிவபோக சாரம்
  • சொக்கநாதக் கலித்துறை
  • ஞானப்பிரகாச மாலை
  • திரிபதார்த்த போதி தசகாரிய அகவல்
  • சோடச கலாப பிராசா கட்கம்
  • முத்தி நிச்சயம்
  • நவரத்ன மாலை

தருமபுர ஆதீனத்தின், ஒன்பதாவது குரவர் திருநாவுக்கரசு தேசிகர் இயற்றியவை:

  • சித்தாந்த நிச்சயம்
  • வருணாச்சிரம சந்திரிகை

பத்தாவது குருமகாசந்நிதானம் சிவஞான தேசிகர் இயற்றியவை:

  • ஸ்ரீ காசி துண்டி ராஜ கணபதி திருவருட்பா
  • ஸ்ரீ காசி விசுவநாதர் திருவருட்பா
  • ஸ்ரீ கேதார நாதர் திருவருட்பா
  • ஸ்ரீ காசி விருத்த காறேச்சுரர் திருவருட்பா
  • ஸ்ரீ காசி கால பைரவர் திருவருட்பா
  • ஸ்ரீ காசி தாரகப் பத்து
  • ஸ்ரீ காசி அன்னபூரணியம்மை திருவருட்பா
  • ஸ்ரீ காசி கேதார கௌரியம்மை திருவருட்பா
  • ஸ்ரீ காசி பாகீரதியம்மை திருவருட்பா
  • ஸ்ரீ காசி கதிர்காம வேலவர் திருவருட்பா
  • ஸ்ரீ சிதம்பர நடேசர் திருவருட்பா
  • ஸ்ரீ அசபா நடனப் பதிகம்
  • ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருவருட்பா
  • ஸ்ரீ ஆபத்தராணர் மாலை
  • ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி திருவருட்பா
  • ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருவருட்பா
  • ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருவருட்பாப் பொருள்

பிற சித்தாந்த சாத்திர விளக்க நூல்கள்

வெள்ளி அம்பலவாண முனிவரது 'ஞானாவர்ண விளக்கம்', சீர்காழி சிற்றம்பல நாடிகளது 'துகளறுபோதம்', சோமசுந்தர நாயகரது 'அர்ச்சதீபம்'. வாகீசமுனிவரின் 'ஞானாமிர்தம்', 'குட்டித் திருவாசகம்' எனப்புகழ்பெற்ற திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலியனவும் சைவ சமய உண்மைகளைக் கூறும் சாத்திர நூல்களாகத் திகழ்கின்றன.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Nov-2023, 05:27:00 IST