சுபமங்களா மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|சுபமங்களா|[[சுபமங்களா (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=சுபமங்களா|DisambPageTitle=[[சுபமங்களா (பெயர் பட்டியல்)]]}} | ||
[[File:Subamangala jan 1992.jpg|thumb|சுபமங்களா ஜனவரி 1992 இதழ்]] | [[File:Subamangala jan 1992.jpg|thumb|சுபமங்களா ஜனவரி 1992 இதழ்]] | ||
சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் வெகு ஜன இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது. | சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் வெகு ஜன இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது. |
Latest revision as of 18:22, 27 September 2024
- சுபமங்களா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுபமங்களா (பெயர் பட்டியல்)
சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் வெகு ஜன இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.
சுபமங்களா உள்ளடக்கம்
சுபமங்களா, கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு 1991 பிப்ரவரி தொடங்கி 1995 டிசம்பர் வரை 59 இதழ்கள் வெளிவந்தது. சுபமங்களா இதழ் தோறும் நேர்காணல்களுடன் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள், நீள் கதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் போன்றவற்றையும் வெளியிட்டது.
சுபமங்களா மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
சுபமங்களா சிறுகதைகளை அதிகம் வெளியிட்டது. மொழிபெயர்ப்புச் சிறுகதைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. அஜீத் கௌர், இடாலோ கால்வினோ, மகாஸ்வேதாதேவி, ஸ்ரீமதி பிரதிபாராய், மாதவிக்குட்டி, பி.என். விஜயன், ப்ரன்ஸ் காஃப்கா, கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கே. அய்யப்ப பணிக்கர் எனப் பலரது சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டது.
சுபமங்களாவில் வெளியான மலையாள மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் குறித்து குறிஞ்சிவேலன், “இளமையில் துணியாமல் முதுமையில் துணிந்தும் முடியாமல் தத்தளிக்கும் முதுமைக் காதலை எம்.டி. வாசுதேவன் நாயரின் நீண்ட கதையான 'வானப் பிரஸ்தம்' மூன்று இதழ்களில் குறுந்தொடராகவும், மனதைக் கொள்ளை கொள்ளும் கதைகளில் மிகச் சிறந்த புதிய பாணியில் எழுதப்பட்ட கமலா தாஸின் (மாதவிக் குட்டி) 'பறவையின் வாசனை' என்னும் கதையும், 'டீலக்ஸ் லக்ஷுரி கோச்' என்னும் கதையை எழுதிய விஜயனின் புதிய நடையிலான எழுத்தையும் சுபமங்களா தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது சிறப்பான அம்சமாகும்.
நேர்காணல், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அனைத்து வகை மலையாள இலக்கியங்களையும் குறிஞ்சிவேலன், நிர்மால்யா, வி.கெ. பாலகிருஷ்ணன், திருவைகாவூர் கோ. பிச்சை போன்ற சிறந்த மொழி பெயர்ப்பாளர்களின் மூலம் மலையாள இலக்கியத்திற்கும் தமிழ் வாசகர்களுக்கும் 'சுபமங்களா' ஒரு பாலமாக இருந்ததை நினைக்கும் போது, அப்பணி கோமலுடன் நின்று விடாமல், வருங்காலங்களிலும் இச் செயல் மூலம் உலக இலக்கியங்களுக்கும் தமிழ் வாசகர்களுக்கும் தன் பணியைத் தொடர வேண்டும் என்னும் ஆதங்கமும் ஆசையும் என்னுள் உள்ளன.” என்கிறார்.
குறிஞ்சிவேலனின் அந்த ஆசையும் எண்ணமுமே, பிற்காலத்தில் ‘திசையெட்டும்’ என்னும் மொழிபெயர்ப்புக்கான இதழை அவர் தொடங்கக் காரணமாக இருந்தது.
சுபமங்களா மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் பட்டியல்
சுபமங்களா மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் | ||||
எண் | சிறுகதையின் பெயர் | எழுதியவர் | மொழிபெயர்த்தவர் | மாதம்/ஆண்டு |
1991 | ||||
கனகத்துக்கு வேண்டியவர்கள் | கவிதா சின்ஹா | சு. கிருஷ்ணமூர்த்தி | மார்ச் | |
சீதாவின் கல்யாணம் | மனோஜ்தாஸ் | கி. ராஜநாராயணன் | மே | |
புல்லும் வானமும் | ஸ்ரீமதி பிரதிபாராய் | சரஸ்வதி ராம்நாத் | ஜூன் | |
பிடிவாதக்காரன் | பி.பி. நிகாம் | திருவைகாவூர் கோ. பிச்சை | ஆகஸ்ட் | |
துர் நாற்றம் | மா. வரதராஜூ | பாவண்ணன் | அக்டோபர் | |
1992 | ||||
முகத்திரை | இஸ்மத் சுக்தாய் | சரஸ்வதி ராம்நாத் | ஜனவரி | |
முரண்பாடுகள் | பிந்தியா சுப்பா | திருவைகாவூர் கோ.பிச்சை | ஜூன் | |
யுதிஷ்டிரர் | அஜீத் கௌர் | சரஸ்வதி ராம்நாத் | ஜூலை | |
பறவையின் வாசனை | மாதவிக்குட்டி | நிர்மால்யா | ஆகஸ்ட் | |
நானும் அவளும் | நதீன் கோதிமர் | செ. யோகநாதன் | செப்டம்பர் | |
இருளும் ஒளியும் | பார்லாஜர்க்விஸ்ட் | சா. தேவதாஸ் | அக்டோபர் | |
விருந்தாளி | தீனா படையாச்சி | ப்ரீதம் | டிசம்பர் | |
1993 | ||||
டீலக்ஸ் லக்ஷுவரிகோச் | பி.என். விஜயன் | வி.கெ. பாலகிருஷ்ணன் | பிப்ரவரி | |
கடவுள் | ஸ்ரீமதி பிரதிபாராய் | சரஸ்வதி ராம்நாத் | மே | |
1994 | ||||
சம்பகளி | என்.எஸ். தஸ்நீம் | க. கோபி | ஜனவரி | |
மரணச்செய்தி | சுனில்தாஸ் | வி. கிருஷ்ணமூர்த்தி | ஏப்ரல் | |
ஒரு தம்பதியின் சிக்கல்கள் | இடாலோ கால்வினோ | சத்யன் | ஜூன் | |
எழுதாத கடிதம் | போல்பெவால் | ஆர். கிருஷ்ண மூர்த்தி | செப்டம்பர் | |
மகர்சவர் | மகாஸ்வேதாதேவி | ஆர். கிருஷ்ணமூர்த்தி | அக்டோபர் | |
கிராம மருத்துவர் | ப்ரன்ஸ் காஃப்கா | சி.மோகன் | டிசம்பர் | |
1995 | ||||
கோவில் | ஹ. போ. மராடே | சரஸ்வதி ராம்நாத் | மார்ச் | |
மோதிரம் | பிரதிபா ராய் | சரஸ்வதி ராம்நாத் | மே | |
ஜாடி | ஐசக் டெனிசன் | அருண்மொழிநங்கை | மே | |
அவனுடைய அம்மா | ஜோக்வின் கல்லகாஸ்லாரா | சம்யுக்தா | ஜூன் | |
வீடியோ மரணம் | கே. அய்யப்ப பணிக்கர் | கோ. பாலசுப்ரமணியன் | ஆகஸ்ட் | |
என் தொலைபேசியை உபயோகிக்க மட்டுமே வந்தேன் | கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் | திலகவதி | ஆகஸ்ட் | |
வளையத்துக்குள்ளே | சுனில்தாஸ் | வி. கிருஷ்ணமூர்த்தி | செப்டம்பர் |
உசாத்துணை
- சுபமங்களா இதழ்
- இலக்கிய இதழ்: சுபமங்களா: இந்து தமிழ் திசை கட்டுரை
- சுபமங்களாவின் இலக்கிய பங்களிப்பு, ஜெ. தேவி, முனைவர் பட்ட ஆய்வு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Mar-2023, 07:28:44 IST