under review

சரவணப்பெருமாள் கவிராயர்: Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|சரவணப்பெருமாள்|[[சரவணப்பெருமாள் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=கவிராயர்|DisambPageTitle=[[கவிராயர் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=சரவணப்பெருமாள்|DisambPageTitle=[[சரவணப்பெருமாள் (பெயர் பட்டியல்)]]}}
சரவணப்பெருமாள் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், கவிராயர் கவனகர் மரபில் வந்தவர். வெகு விரைவாக கற்பனை, சிலேடை, யமகம், திரிபு மற்றும் சந்தப்பாடல்களை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
சரவணப்பெருமாள் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், கவிராயர் கவனகர் மரபில் வந்தவர். வெகு விரைவாக கற்பனை, சிலேடை, யமகம், திரிபு மற்றும் சந்தப்பாடல்களை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 18:20, 27 September 2024

கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)
சரவணப்பெருமாள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரவணப்பெருமாள் (பெயர் பட்டியல்)

சரவணப்பெருமாள் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், கவிராயர் கவனகர் மரபில் வந்தவர். வெகு விரைவாக கற்பனை, சிலேடை, யமகம், திரிபு மற்றும் சந்தப்பாடல்களை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சரவணப் பெருமாள் கவிராயர் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரமக்குடி முதுகுளத்தூரில் வேளாளர் மரபில் அருணாச்சல கவிராயருக்கு மகனாகப்பிறந்தார். இவருடைய தாத்தா அஷ்டவதானி சரவணப்பெருமாள் கவிராயர். சரவணப் பெருமாள் கவிராயர் ஒரே வேளையில் பத்துக்கும் மேற்பட்ட செயல்களில் கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலையான அவதானத்தில் திறன் பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

சரவணப் பெருமாள் கவிராயர் இராமநாதபுரம் அரசவையில் கவிஞராக இருந்தார். இவருடைய காலத்தில் வாழ்ந்த செல்வந்தர்களை புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்றார். இவர் இயற்றிய தனிப்பாடல்கள் தனிச்செய்யுள் சிந்தாமணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடல்நடை

  • கந்தவருக்குச் சந்தவெண்பா

"கும்பனுக்குஞ் சங்கரனுக் குங்குருவே பிள்ளைமதிக்
கும்பனுக்குஞ் சங்குவரிக் குங்குயிலுக்-கும்பயந்தேன்
தென்றலுக்கும் ஐங்கணைச்சிலம்பனுக்கும் என்செயச்சொல்
என்றலுக்கும் மங்கைநித்த மே"

நூல்கள் பட்டியல்

  • மதுரைச்சிலேடை வெண்பா
  • திருச்சுழியல் ஓரேழுத்தந்தாதி
  • கழுகுமலை ஓரேழுத்தந்தாதி
  • மகர வந்தாதி
  • பனசைத் திரிபந்தாதி
  • கயற்கண்ணி மாலை
  • புவனேந்திரன் அம்மானை
  • கந்தவருக்குச் சந்தவெண்பா

மறைவு

சரவணப் பெருமாள் கவிராயர் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் காலமானார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Dec-2022, 19:20:18 IST