கேரளபுரம் சிவன் கோவில்: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|சிவன்|[[சிவன் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=சிவன்|DisambPageTitle=[[சிவன் (பெயர் பட்டியல்)]]}} | ||
{{Read English|Name of target article=Keralapuram Sivan Temple|Title of target article=Keralapuram Sivan Temple}} | {{Read English|Name of target article=Keralapuram Sivan Temple|Title of target article=Keralapuram Sivan Temple}} | ||
[[File:கேரளபுரம் சிவன் கோவில், ,முகப்பு.png|thumb|கேரளபுரம் சிவன் கோவில்]] | [[File:கேரளபுரம் சிவன் கோவில், ,முகப்பு.png|thumb|கேரளபுரம் சிவன் கோவில்]] |
Latest revision as of 18:19, 27 September 2024
- சிவன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Keralapuram Sivan Temple.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில். மூலவர் வீரகேரளத்து மகாதேவர்.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் தக்கலைக்கு அருகில் அமைந்துள்ள தொன்மையான ஊர் கேரளபுரம். தக்கலையிலிருந்து கருங்கல் செல்லும் சாலை வழியாக சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது கேரளபுரம்.
மூலவர்
கேரளபுரம் சிவன் கோவிலின் மூலவர் வீரகேரளத்து மகாதேவர். வீரகேரளன் என்ற வேணாட்டரசனின் சமாதிக் கோவில் என்பதால் மாசானமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் லிங்க வடிவில் உள்ளார்.
கோவில் அமைப்பு
கருவறை, ரிஷப மண்டபம், சுற்றாலை மண்டபங்கள், பிரகாரங்கள் கொண்ட கேரள பாணி கோவில். கருவறை வட்டவடிவில் உள்ளது. மூலவர் லிங்க வடிவில் உள்ளார். தெற்கே நடராசர் மற்றும் சிவகாமி சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் நின்றகோல விநாயகர், கங்காள மூர்த்தி, சுப்பிரமணியர், சாஸ்தா ஆகிய பரிவார தெய்வங்கள உள்ளன. மாணிக்கவாசகர் சன்னதி உள்ளது.
ரிஷப மண்டபத்தில் குலசேகரப்பெருமாள், சேரமான்பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி, ராமர், லட்சுமணர், தேவதாசி மாதுமைக்குட்டி, தேவதாசி நீலம்மைக்குட்டி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.
ஆலயவளாகத்தில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இதன் மூலவர் விநாயகர் உத்தராயண காலத்தில்(மார்ச் முதல் ஜூன்) கருப்பு நிறத்திலும் தட்சணாயன காலத்தில்(ஜூலை முதல் பிப்ரவரி) வெள்ளை நிறத்திலும் காட்சியளிப்பதாக அறியப்படுகிறது.
வரலாறு
கேரளபுரம் ஊரின் தொன்மை கி.பி. 1317-ம் ஆண்டு வரை செல்கிறது. பழைய கல்வெட்டுகளில் செங்குன்னூர் வளநாட்டில் தென்னாட்டுப் பிரிவில் பாலக்கோட்டு தேசத்து முத்தளக்குறிச்சி என இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 1606-ம் ஆண்டு கல்வெட்டில்(கன்.கல்.தொ.4 எண் 21) வீர ரவிவர்மனான குலசேகரப் பெருமாள் என்ற வேணாட்டு அரசன் கீழபேரூர் இல்லத்தில்(திருவனந்தபுரம்) இருந்தபோது கேரளபுரம் மகாதேவர் கோவிலில் சுற்றாலை மண்டபங்கள், மடப்பள்ளி, ரிஷபமண்டபம், கருவறை, விமானம் ஆகயவற்றை கட்டிய செய்தி உள்ளது.
கி.பி. 1317-ம் ஆண்டு கல்வெட்டில்(T.A.S Vol. IV P.89) வீரஉதமார்தாண்டவர்மாவின் கட்டுப்பாட்டில் கோவில இருந்த செய்தி உள்ளது. கோவிலின் ரிஷபமண்டபம், சுற்று மண்டபம் கட்ட உதவிய தனி நபர்களின் பெயர்களும் கல்வெட்டில் உள்ளன. கல்வெட்டுகளின்படி கோவிலின் கருவறை பொ.யு.16-ம் நூற்றாண்டிற்கு முன்பும், பிற பகுதிகள் பொ.யு. 1606 காலகட்டத்திலும் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
கோவிலில் பணிபுரிந்துள்ள தேவதாசிகள் குறித்த செய்திகள் கல்வெட்டில் உள்ளன. கோவிலில் பணிபுரிந்த இரண்டு தேவதாசிகள் ரிஷப மண்டபத்தில் உள்ள குலசேகரபெருமாள் சிற்பத்தை செய்ய பணம் கொடுத்துள்ளனர். செண்பகம் மார்த்தாண்டம் குட்டி என்ற தேவதாசி ரிஷபமண்டபத்தில் உள்ள ராமர், லட்சுமணர் சிற்பங்களைச் செய்ய நிதி கொடுத்துள்ளார். செண்பகம் மார்த்தாண்டம் குட்டி, சுசீந்திரம் தாணுமலையான் கோவில் சிறப்பு முதல்குடி தேவதாசி நல்லாம்பிள்ளையின் மகள். செண்பகம் மார்த்தாண்டம் குட்டியின் கணவன் கேரளபுரம் நிர்வாகப் பொறுப்பில் ஸ்ரீகாரியம் செய்தவன்.
பூஜைகளும் விழாக்களும்
மாசி மாதம் அஸ்வதி நட்சத்திரம் தொடங்கி பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் திருக்கல்யாணம் முக்கிய விழா. கோவிலுக்கு இரண்டு தேர்கள் உள்ளன. அம்மன் தேரில் விநாயகர் வலம் வருகிறார். 9-ம் திருவிழாவில் பிச்சாடனார் சாலையில் வீதிவலம் வருகிறார். கேரள பண்பாட்டு தாக்கம் உள்ள ஆலயம் என்றாலும் விழா சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒன்றியவை.
உசாத்துணை
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- புகைப்படங்கள்
வெளியிணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:53 IST