ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன்: Difference between revisions
(Created page with "ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் சங்க காலப் புலவர். ஆரிய மன்னர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == குறுந்தொகை பாடிய ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் எ...") |
No edit summary |
||
Line 21: | Line 21: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 03:58, 25 April 2022
ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் சங்க காலப் புலவர். ஆரிய மன்னர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
குறுந்தொகை பாடிய ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் என்பவரும், கபிலரால் தமிழறிவு பெற்ற ஆரியவரசன் பெயராகிய ஆரியவரசன் பிரகத்தன் என்பவரும் ஒருவரே என்பது தமிழறிஞர்கள் கருத்து.
இலக்கிய வாழ்க்கை
இவர் குறுந்தொகையில் ‘கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது’ என்ற துறையில் ஒரு பாடல் பாடினார். ’அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை’ (தான் கண்டறிந்த ஒன்றை மறைத்துப் பொய் கூறுதல் சான்றோர்க்கு இயல்பாகாது) என்ற கருத்தையும் இப்பாடலில் கூறினார்.
பாடல் நடை
- குறுந்தொகை: 184
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்டு
ஆண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.