under review

திப்புத்தோளார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
திப்புத்தோளார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர்.
திப்புத்தோளார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
திப்புத் தோளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது. அது குறுந்தொகை நூலின் முதல் பாடலாக உள்ளது.
திப்புத்தோளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். திப்புத்தோளர் என்றால் வலிமை மிக்க தோளை உடையவர் என்பது பொருள்.
 
துப்பு என்னும் சொல் 'துப்புக் கெட்டவன்' என்று கூறும் வழக்கில் வலிமையைக் குறிப்பதை நாம் காண்கிறோம். இந்தத் துப்பு 'திப்பு' என்னும் சொல்லாலும் சங்ககாலத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. திப்புத்தோளர் என்றால் வலிமை மிக்க தோளை உடையவர் என்பது பொருள்.
 
பாடல் தரும் செய்தி
உயிரினங்களின் வாழ்க்கை உடலுறவில் இன்பம் காண்கிறது. இந்த இன்பம் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணை. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். முருகனின் பெருமை இந்தப் பாடலில் பேசப்படுவதால் குறுந்தொகை நூலுக்கே இந்தப் பாடல் முதல் பாடலாக வைக்கப்பட்டுள்ளது.


சேஎய் என்பவன் முருகன். அவன் யானைமேல் செல்கிறான். அவன் தன் காலிலே வீரத்தின் சின்னமாகக் கழல் அணிந்திருக்கிறான். அந்தக் காலால் அவுணர்களைத் தேய்த்துக் கொன்றான். அவன் ஏறிச் சென்ற யானையும் அவுணர்களைக் குத்திக் கொன்றது. அதனால் அதன் தந்தக் கொம்புகளும் சிவந்து காணப்பட்டன. அவுணர்களின் குருதி பாய்ந்ததால் போர்க்களமே செங்களமாக மாறியது.
இந்த முருகன் குன்றத்தில் தலைவி வாழ்கிறாளாம். முருகனைப் போலவே ஆறு இதழ்களுடன் செந்நிறத்துடன் பூத்திருக்கும் காந்தள் பூ அவள் மலையில் மிகுதியாக உள்ளனவாம். எனவே தலைவன் தலைவி அணிந்துகொள்ளும் பரிசுப் பொருளாக வழங்கும் காந்தள் பூ தொடுத்த தழையாடை தலைவிக்கு வேண்டாமாம்.
இவ்வாறு சொல்லித் தோழி தலைவன் தலைவிக்குத் தரும் கையுறையை ஏற்க மறுக்கிறாள். திருமணம் செய்துகொண்டு தலைவியை அடையும்படி எடுத்துரைக்கிறாள்.
கையுறை (இக்காலத்தில் கையூட்டு எனப்படுகிறது)
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
திப்புத்தோளார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. இது குறிஞ்சித்திணைப்பாடல். தோழி கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. "தோழி கையுறை மறுத்தது" என்ற துறையைச் சேர்ந்தது
== பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
== பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
* இப்பாடலில் முதற்பொருளாகக் குன்றும், கருப்பொருளாக முருகன், யானை, காந்தள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தது.
* குறிஞ்சி: வீரக்கழல் அணிந்த சேஎய் (முருகன்) போர்க்களத்தில் ரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், ரத்தம் தோய்ந்த சிவந்த தந்தங்களையும் உடைய யானையையும் உடையவன். முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது.
* தலைவன் அளிக்கும் மலர்களை வாங்கிக்கொள்ளத் தோழி மறுக்கிறாள்.
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
திப்புத்தோளார்
திணை: குறிஞ்சி; துறை: தோழி கையுறை மறுத்தது
1. குறிஞ்சி
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்
<poem>
<poem>
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
Line 30: Line 22:
* [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l12202a9-122504 திப்புத்தோளார் - tamilvu]
* [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l12202a9-122504 திப்புத்தோளார் - tamilvu]


{{Being created}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:29, 31 August 2024

திப்புத்தோளார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

திப்புத்தோளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். திப்புத்தோளர் என்றால் வலிமை மிக்க தோளை உடையவர் என்பது பொருள்.

இலக்கிய வாழ்க்கை

திப்புத்தோளார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. இது குறிஞ்சித்திணைப்பாடல். தோழி கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. "தோழி கையுறை மறுத்தது" என்ற துறையைச் சேர்ந்தது

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • இப்பாடலில் முதற்பொருளாகக் குன்றும், கருப்பொருளாக முருகன், யானை, காந்தள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தது.
  • குறிஞ்சி: வீரக்கழல் அணிந்த சேஎய் (முருகன்) போர்க்களத்தில் ரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், ரத்தம் தோய்ந்த சிவந்த தந்தங்களையும் உடைய யானையையும் உடையவன். முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது.
  • தலைவன் அளிக்கும் மலர்களை வாங்கிக்கொள்ளத் தோழி மறுக்கிறாள்.

பாடல் நடை

திணை: குறிஞ்சி; துறை: தோழி கையுறை மறுத்தது

செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.