under review

மதுரை அமெரிக்கன் கல்லூரி: Difference between revisions

From Tamil Wiki
m (Created/reviewed by Je)
(Added display-text to hyperlinks)
Line 24: Line 24:


* [http://saveamericancollege.blogspot.com/ கல்லூரியின் நலவிரும்பிகளினால் தொடங்கப்பட்ட இணையதளம்]
* [http://saveamericancollege.blogspot.com/ கல்லூரியின் நலவிரும்பிகளினால் தொடங்கப்பட்ட இணையதளம்]
*https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/26597-2014-03-25-13-56-52
*[https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/26597-2014-03-25-13-56-52 சீர்திருத்தக் கிறித்தவமும் மதுரையும் ]
*https://americancollege.edu.in/campus-2/buildings
*[https://americancollege.edu.in/campus-2/buildings  
MAIN CAMPUS | The American College]


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:32, 14 April 2022

அமெரிக்கன் கல்லூரி மையக்கட்டிடம்

அமெரிக்கன் கல்லூரி (1881) மதுரையில் அமைந்துள்ள பழமையான கல்லூரி. அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர்களால் உருவாக்கப்பட்டது. இது 1881 ஆம் ஆண்டு மதுரையில் தி அமெரிக்கன் மதுரா மிஷன் அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் தென்தமிழகத்தின் ஒரே கல்லூரி இதுவே

வரலாறு

1841 ல் அமெரிக்கன் கல்லூரி சிறிய அளவில் மதுரை சுதேசிக்கல்லூரி என்ற பெயரில் ஒரு துணைக்கல்லூரி (collegiate department) தொடங்கப்பட்டது. ரெவெரெண்ட் ஜார்ஜ் வாஷ்பர்ன் 1881ல் அதை ஒரு சிறுகல்லூரியாக தொடங்கினார். 1890 வரைமதுரை திருமங்கலத்தில் மதுரை சுதேசிக் கல்லூரி  அங்குள்ள உறைவிடப் பள்ளியில் செயல்பட்டு வந்தது.  தொடக்கத்தில் 17 மாணவர்கள் இருந்தனர்.  பின்னர் அது இடப்பற்றாக்குறை காரணமாகப் பசுமலை ஒயிற்றின் தேவாலயத்தில் செயல்பட்டது.  37 மாணவர்கள் சேர்ந்தனர்.

அங்கும் இட நெருக்கடி வரவே மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்தவப் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.  இங்குச் செயல்பட்டு வரும் போதே நிரந்தரமாகத் தனிக் கட்டடம் கட்ட இக்கல்லூரியின் முதல்வராக இருந்த திரு. வாஷ்ப்ர்ன் இடம் தேடினார். இறுதியாக மதுரை வைகை ஆற்றின் வடகரையில் பனை மரக்காடான பகுதியில் மதுரை சுதேசிக் கல்லூரிக் கட்டடம் எழுப்ப வாஷ்பர்ன் முடிவு செய்தார்.  இதனை தலைமையிடத்திற்குத் தெரிவித்த போது ஏற்கனவே முன்பொரு தடவை அமெரிக்காவிலிருந்து நன் கொடையாக வந்திருந்த நிதி ரூ.32,000ஐ பயன் படுத்த அனுமதி கிடைத்தது.இதுவே மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வரலாற்றுத் தொடக்கம்

பிங்ஹாம்படன் கூடம்

அன்றைய அரசுத் தரப்பி லிருந்து 15 ஏக்கரும் ஐரோப்பிய விதவைப் பெண்கள் சங்க நிதியின் மூலம் 10 ஏக்கரும் வாங்கப்பட்டன.  இந்த 25 ஏக்கருக்கான வரவு செலவுகளை திரு. வாஷ்பர்ன் வெளியிட்டார்.

ஜேம்ஸ் கூடம்

மையக்கட்டடம் கட்ட ஒப்பந்தக்காரருக்கு ரூ.43500/-க்கு ஒப்பந்தம் விடப்பட்டது.  புதிய வளாகம் வாங்குவதற்காக அமெரிக்க கிறிஸ்தவ மிஷனிடம் பெறப்பட்ட நிதி ஜான் டேவிசன் ராக்பெல்லர் என்ற உலகின் முதல் எண்ணை அதிபரின் நன்கொடையில் வந்தது.ரெவெ ஜும்ப்ரோ(Rev. W.M. Zumbro) இரண்டாவது கல்லூரி முதல்வராக இருந்தபோது இக்கல்லூரி மதுரையில் இன்றிருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. ஜும்ப்ரோ அமெரிக்காவில் மிஷிகன் பல்கலைகழகத்தில் பட்டம்பெற்றவர்.

பூர் நினைவு நூலகம்

கட்டிடங்கள்

  • 1907-1908களில் இக்கல்லூரியின் மையக் கட்டடம் அமெரிக்க கல்வி நிலையக் கட்டடங்களை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது.  சென்னை உயர்நீதி மன்றம் கட்டிய கட்டடப் பொறியாளர் ஹென்றி இர்வின் இதை வடிவமைத்தார்.₹52,000 ரூபாய் செலவில் ஆங்கிலோசாக்ஸன் பாணியில் கட்டப்பட்டது.
  • பிங்ஹாம்டன் கூடம் (Binghamton Hall) 1930 ல் முதல்வர் வில்லியம் ஜும்ப்ரோ நினைவாக கட்டப்பட்டது. பிங்ஹாம்டன் நகர்மக்களின் நிதிக்கொடையால் கட்டப்பட்டதனால் அப்பெயர் பெற்றது
  • லேடி ஜேம்ஸ் கூட (Lady James Hall) வேதியலுக்காக கட்டப்பட்டது. லேடி எல்லென் ஜேம்ஸ் மற்றும் ராபர்ட் சிஷ்ஹாம்( Robert Chisholm) நிதியில் இது கட்டப்பட்டது
  • டேனியல் பூர் நினைவு நூலகம் அமெரிக்க மிஷன் இயக்கத்தின் முதன்மைப் போதகர்களில் ஒருவரான டேனியல் பூர் நினைவாகக் கட்டப்பட்டது.
  • ஜூபிலி சாப்பல் (Jubilee Chapel) 1931ல் பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி கட்டப்பட்டது.

உசாத்துணை

MAIN CAMPUS | The American College]


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.