under review

சுத்தானந்த பாரதி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Added display-text to hyperlinks)
Line 151: Line 151:
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdkMyy#book1/ தேசிய கீதம் சுத்தானந்த பாரதி இணையநூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdkMyy#book1/ தேசிய கீதம் சுத்தானந்த பாரதி இணையநூலகம்]
* [https://ramanans.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ ரமணன் பதிவு]
* [https://ramanans.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ ரமணன் பதிவு]
* https://www.hindutamil.in/news/blogs/41981-10.html
* [https://www.hindutamil.in/news/blogs/41981-10.html சுத்தானந்த பாரதி 10 | சுத்தானந்த பாரதி 10 - hindutamil.in]
*https://sites.google.com/site/rsrfaces/home/cuttananta-paratiyar
*[https://sites.google.com/site/rsrfaces/home/cuttananta-paratiyar rsrfaces - சுத்தானந்த பாரதியார்]
*பசுபதி பதிவுகள்
*பசுபதி பதிவுகள்
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006083_%E0%AE%85%E0%AE%B1_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf அறநூல் இணைய நூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006083_%E0%AE%85%E0%AE%B1_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf அறநூல் இணைய நூலகம்]
Line 162: Line 162:
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekZhd&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/ தமிழிசைப்பாடல்கள் இணையநூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekZhd&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/ தமிழிசைப்பாடல்கள் இணையநூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/tva-search?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D சுத்தானந்த பாரதியார்29 நூல்கள் இணையநூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/tva-search?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D சுத்தானந்த பாரதியார்29 நூல்கள் இணையநூலகம்]
*https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/26377-2014-04-25-06-48-30
*[https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/26377-2014-04-25-06-48-30 'புவியெல்லாம் போற்றிய கவியோகி' சுத்தானந்த பாரதியார்!]


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:39, 14 April 2022

சுத்தானந்த பாரதி

சுத்தானந்த பாரதி (யோகி சுத்தானந்த பாரதியார்) (மே 11, 1897 - மார்ச் 7, 1990) தமிழறிஞர், துறவி, விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர். தமிழில் காப்பியம், கவிதை, நாடகம், நாட்டியம், இசைப்பாடல் வரலாறு, கடித இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சுயவரலாறு, நாட்டுவரலாறு, புனைகதைகள், பயண இலக்கியம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் ஆன்மிகம், உடல்கூறு ஆய்வு, யோகம் எனப் பல துறைகளில் எழுதியவர். பாரத மகாசக்தி காப்பியம் அவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்று.

பிறப்பு, கல்வி

சுத்தானந்த பாரதி பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யருக்கும் காமாட்சி அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாக மே 11, 1897-ல் சிவகங்கையில் பிறந்தார். இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன்.

சுத்தானந்த பாரதி ஆரம்பத்தில் தெய்வசிகாமணியோகி என்பவரிடம் முறையாகத் தமிழ் படித்தார். பின் மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். சுத்தானந்த பாரதி யோகம், ஆன்மிகம், இலக்கியம், இசை, தேசியப் போராட்டம், கல்வி கற்பித்தல் என நாட்டம் கொண்டிருந்தார். நைஷ்டிகப் பிரம்மச்சாரி.

ஆன்மீகம்

சுத்தானந்த பாரதி சிறுவயதிலேயே பூரணானந்தர், ஞானசித்தர். ரமணர், அரவிந்தர். மேஷர்மிபாபா, சிவானந்தர் எனப் பல ஆன்மிக யோகிகளைச் சந்தித்து ஆன்மீகத்தாக்கத்தை அடைந்தார். தன் 30-33 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி, கங்கோத்ரி போன்ற இடங்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்து அங்கே இரண்டு மாதங்கள் தங்கித் தவம் செய்தார். அக்காலங்களில் யோகிகளையும் துறவிகளையும் சந்தித்தார். சிரவண பெலகோலாவிலும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திலும் சில காலம் தங்கியிருந்தார்.

சுத்தானந்த பாரதி புதுச்சேரி அரவிந்தாஸ்ரமத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் மவுனவிரதம் பூண்டிருக்கும் போது பிரெஞ்சு உட்பட பல மொழிப் புத்தகங்களைப் படித்தார். வடலூரில் யோகசமாஜம் நிறுவி சிலகாலம் இருந்தபோதும் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். சிவகங்கை சோழபுரத்தில் சர்வதேசக் குழந்தை ஆண்டில் (1979) சுத்தானந்த யோக சமாஜம் நிறுவினார். சுத்தானந்த பாரதி அரவிந்தரால் யோகி என்றும் சுவாரி சிவானந்தரால் ரிஷி என்றும் சிருங்கேரி நரசிம்ம பாரதி ஸ்வாமிகளால் கவியோகி என்றும் அழைக்கப்பட்டார். இந்தப் பெயர்களில் அரவிந்தர் கொடுத்த பெயரே நிலைத்தது.

சுத்தானந்த பாரதி

அரசியல்

சுத்தானந்த பாரதி நாட்டு விடுதலையில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1917இல் திலகர், விபின் சந்திரர், தாகூர், மகாத்மா எனப் பலரைச் சந்தித்தார். 1918-1920 இல் நாடெங்கும் சுற்றியலைந்தபோது சுபாஷ் சந்திரபோசைச் சந்தித்தார். அதனால் பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்புக்கு ஆளானார்.

அவர் எழுதிய நூல்களில் தமிழில் புரட்சி, சுதந்திரக்கனல், வீரத்தேவன் ஆகியன சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டவை. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்த மருது சகோதரர்களின் வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை தமிழர் புரட்சி.

ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், இந்தி, தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் அறிந்தவர். 1928-30ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுக்கச் சுற்றினார். சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய கவிதைநூல் பாரதசக்தி காவியம். நாட்டுப் பற்று, மதுவிலக்கு, தீண்டாமை போன்றவற்றை அவரது நாடகங்களும் சிறுகதைகளும் வற்புறுத்தியது.

இலக்கியப்பணிகள்

சுத்தானந்த பாரதி வ.வே.சு.ஐயரின் சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர்கள் நடத்திவந்த பாலபாரதி இதழில் தொடர்ச்சியாக எழுதினார். சுத்தானந்த பாரதி தமிழில் காப்பியம், கவிதை, நாடகம், நாட்டியம், இசைப்பாடல் வரலாறு, கடித இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சுயவரலாறு, நாட்டுவரலாறு, புனைகதைகள், பயண இலக்கியம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் ஆன்மிகம், உடல்கூறு ஆய்வு, யோகம் எனப் பல துறைகளில் எழுதியவர். அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய பைந்தமிழ்ச் சோலை என்ற நூல் தமிழின் தொன்மை, இலக்கிய வளம் பற்றிக் கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் பண்டிதர்களுக்காகவே எழுதப்பட்ட காலக்கட்டத்தில் சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும்படி எழுதியவர் சுத்தான பாரதி.பழைய இலக்கியங்களை கல்வியாளர் அல்லாதவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்களில் அவரும் ஒருவர்.

சுத்தானந்த பாரதி (பாரத்வாஜ ஆசிரமம்)

தெலுங்கில் 2, இந்தியில் 4, பிரெஞ்சு மொழியில் 6. ஆங்கிலத்தில் 38 என 50 நூல்களை எழுதியுள்ளார். சுத்தானந்த பாரதி எழுதி அச்சில் வந்தவை 270 நூல்கள். அச்சில் வராதவை 800 அளவில் உள்ளன. இவை தவிர தமிழகத்தில் முப்பது, நாற்பதுகளில் வெளிவந்த இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளில் பல நூல் வடிவில் வரவில்லை. 1897 முதல் 1990 வரை 93 ஆண்டுகள் வாழ்ந்த இவருடைய பல புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை. நூல்பட்டியல் மட்டுமே கிடைக்கின்றது. அவர் பத்து சிறுகதைத் தொகுதிகளையும் 19 நாவல்களையும் எழுதியுள்ளார்.

யோகியான சுத்தானந்த பாரதியாரின் குறள்பா வடிவிலான யோகசித்தி என்ற நூல் அவரின் அனுபவத்தின் வெளிப்பாடாக அமைந்தது. அதில் 12 இயல்களும் 405 குறள்பாக்களும் உள்ளன. இதற்கு அவரே உரையும் எழுதியிருக்கிறார். அதே நூலை அவர் The Gospel of Project Life என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூல் அவரது பாரதமகாசக்தி காப்பியத்தின் ஒரு பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுத்தானந்த பாரதியின் முதன்மை நூல் அவர் பாரதமாதாவை நாயகியாக்கி எழுதிய பாரத மகாசக்தி காப்பியம் ஐந்து காண்டங்களும் 416 படலங்களும் 50000 பாடல்களும் கொண்டது. 1948இல் வெளிவந்தது. அதன் மறுபதிப்பு 1969-ல் வந்தது.

நாடகப்பணி

சுத்தானந்த பாரதி அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் இயற்றியுள்ளார். சீவக சிந்தாமணி (காமதிலகன்) சிலப்பதிகாரம் (கண்ணகி) மணிமேகலை (அமுதசுரபி) கம்ப ராமாயணம் (மாயமான், ராமதூதன்) போன்ற இலக்கியங்களை வேறு தலைப்புகளில் நாடகமாக்கினார். அவரது சரித்திர நாடகங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே அரங்கேறின. அவருக்கு மேடைநாடகம் பற்றிய அனுபவம் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் பல நடத்திய நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவரிடம் நாடகம் பற்றிய செய்திகளை விவாதித்திருக்கிறார். இராஜமாணிக்கம் அவருக்கு எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஓபரா நாடகம் (இசை நாடகம்) போல் தமிழகத்தில் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சுத்தானந்த பாரதி அரவிந்த ஆசிரமம்

திரைப்படம்

சுத்தானந்த பாரதி தீவிரமாக நாடகங்கள் எழுதிய காலக்கட்டத்தில் (1930-40) தயாரிப்பாளர்கள் அவரது நாடகங்களை படமாக்குவதில் ஆர்வம் காட்டினர். அவர் ஆண்டாள், கிருஷ்ண பக்தி, அபூர்வ சிந்தாமணி, ஏழைபடும் பாடு, பொன்வயல்(கல்கியின் பொய்மான் கரடு) போன்ற சினிமாக்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். பொன்வயல் சினிமாவில் வரும் சிரிப்புத்தான் வருகுதய்யா (சீர்காழி கோவிந்தராசன் பாடியது) என்ற பாடல் அவர் எழுதியது.

தமிழ் இசை

சுத்தானந்த பாரதியின் முக்கியப் பங்களிப்புகளில் தமிழ் இசையைப் பரப்பியதும் ஒன்று. சுத்தானந்த பாரதி கர்நாடக இசையை முறையாகப் படித்தவர்.அவரது இசை நூல்களில் கீர்த்தனாஞ்சலி, மேளராக மாலை சங்கீத ரத்னாகரம் ஆகியன முக்கியமானவை. அண்ணாமலை செட்டியார் அவரது தமிழிசை கீர்த்தனைகளை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவரது தமிழ்ப் பாடல்களுக்கு டைகர் வரதாச்சாரியார் பொன்னையா பிள்ளை, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை கோமதிசங்கர், தண்டபாணி தேசிகர் போன்றோர் ஸ்வரம் அமைத்துள்ளனர். அக்காலத்து இசைக்கலைஞர்களான எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, பி.யு. சின்னப்பா, சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் சுத்தானந்த பாரதியின் இசைப்பாடல்களை மேடையில் பாடினர். அவர் நாட்டிய சாஸ்திரம் பற்றி நவரச நடனாஞ்சலி என்னும் நூல் இயற்றியிருக்கிறார். ஐந்து பயண நூல்களை எழுதியுள்ளார்.

சுத்தானந்த பாரதி சிவகங்கை

இதழியல்

சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நிறுவிய சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து வெளிவந்த பாலபாரதி பத்திரிகையிலும், கும்பகோணத்திலிருந்து வெளிவந்த சமரசபோதினியிலும் எழுதியிருக்கிறார். அவற்றின் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.

சுத்தானந்த பாரதி நடத்திய ஆங்கிலப் பத்திரிகைகள் Renaissance, Call - Divine, Nector Jeevan Prakash ஆகியன. சுத்தானந்த பாரதி தன் இறுதிக்காலத்தில் சென்னை அடையாற்றில் வாழ்ந்தபோது, யோகப் பயிற்சி என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.

விருதுகள்

  • 1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் சுத்தானந்த பாரதி.
  • சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1887இல் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தது. அது அவரது மொத்த பணிக்கு என்றாலும் அப்போது பாரதமகாசக்தி காவியத்திற்காக நல்கப்பட்டது என்றே சொல்லப்பட்டது.
சுத்தானந்த பாரதி இறுதிக்காலம்

மறைவு

யோகி சுத்தானந்த பாரதி தன் தொண்ணூற்றி இரண்டாவது வயதில் சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் மார்ச் 7, 1990-ல் காலமானார்.

நினைவுநூல்

சுத்தானந்த பாரதி வாழ்க்கை வரலாற்றை பெ.சுபாசு சந்திரபோசு இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசைக்காக எழுதியிருக்கிறார்

கல்கி அட்டை

நூல்கள் பட்டியல்

சுத்தானந்த பாரதியாரின் 29 நூல்கள் இணையநூலகச் சேமிப்பில் உள்ளன.

  • உடலுறுதி
  • விஞ்ஞான மணிகள்
  • கவிக் கனவுகள்
  • கீர்த்தனாஞ்சலி
  • நவரஸ நடனாஞ்சலி
  • பாரத கீதம்
  • தமிழ்க் கனல்
  • இளிச்சவாயன்
  • அன்னை
  • இவளும் அவளும்
  • நாகரிகப் பண்ணை
  • இல்லற ஒழுக்கம்
  • இதுதான் உலகம்
  • பாப்பா பாட்டு
  • கலிமாவின் காதல்
  • பொது நெறி
  • கல்விக்கதிர்
  • பாட்டாளி பாட்டு
  • திருக்குறள் இன்பம்
  • சிலம்புச் செல்வம்
  • மணிமேகலை அமுதம்
  • நாட்டியக் கலை விளக்கம்
சுத்தானந்தர் வரலாறு
ஆன்மிகம்
  • திருமந்திர விளக்கம்
  • பகவத் கீதை
  • தியான சாதனம்
  • ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை
  • பேரின்பம்
  • யோக சித்தி
  • அருட்செல்வம்
வாழ்க்கை வரலாறு
  • ஞானி எமர்ஸன்
  • நாவலர் பெருமான்
  • பெரியவாள் கதை
  • தயானந்த ஜோதி
  • நாவலர் பெருமான்
  • அருட்பெருமான்
  • சிவானந்த ஜோதி
காவியம்
  • பாரத சக்தி மகா காவியம்
கவிதை
  • பேரின்ப மாலை வீரர் பாட்டு
  • வளையாபதி அகவல்
தன்வரலாற்று நூல்
  • ஆத்ம சோதனை
  • சோதனையும் சாதனையும்
கதைச் சுருக்கங்கள்
  • விக்டர் ஹியூகோவின் Les Miserable - ஏழைபடும் பாடு(தமிழ்)
  • The Laughing Man - இளிச்சவாயன் (தமிழ்)
  • டிவைன் காமெடி - தாந்தே - 1940 (தமிழினி பதிப்பகம் வழி 1998இல் இரண்டாம் பதிப்பாக வந்திருக்கிறது)
இசை ஆசிரியர்கள் வரலாறு
  • பூச்சி அய்யங்கார்
  • மதுரை பொன்னுசாமிப் பிள்ளை
  • புதுக்கோட்டை சமஸ்தான ஆஸ்தான இசைக்கலைஞர் ஹரிதீர்த்தம் அய்யர்
தமிழிசைப் பாடல்கள்
  • எப்படிப் பாடினரோ - கர்நாடக தேவ காந்தாரி
  • தூக்கிய திருவடி துணை - சங்கராபரணம்
ஆங்கிலம்
  • Sri Aurobindo
  • Integral Yoga
  • The Gospel of Perfect Life
  • Yogi Shuddhananda
  • Yoga for All
  • Our religion
  • Cosmic Riddles
  • Lord Krishna and His Gospel
  • Experiences of a Pilgrim Soul

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.