under review

மோ.கோ. கோவைமணி: Difference between revisions

From Tamil Wiki
(Para Added and Edited: Images Added: Link Created: Proof Checked)
(Corrected errors in article)
Line 4: Line 4:

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
மோ.கோ. கோவைமணி ஜூன் 03, 1963 அன்று பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர்  பட்டம் பெற்றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சுவடியியல், கணிப்பொறிப் பயன்பாடு, சைவ சித்தாந்தம் ஆகியன பயின்று பட்டயம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் தொடங்கி, உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

== கல்விப் பணிகள் ==
== கல்விப் பணிகள் ==
Line 13: Line 13:

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
மோ.கோ. கோவைமணி சுவடியியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். களப்பணி மேற்கொண்டு சுவடிகளைத் திரட்டினார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், பயணக்கட்டுரை எனப் பல்துறைகளில் நூல்களை எழுதினார். 90-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் உரையாற்றினார்.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75%-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தவராக அறியப்படுகிறார்.

[[File:Mani honour.jpg|thumb|கோவை மணிக்குப் பாராட்டு]]
[[File:Mani honour.jpg|thumb|கோவை மணிக்குப் பாராட்டு]]

Revision as of 14:00, 16 June 2024

மோ.கோ. கோவைமணி
கோவை மணி

மோ.கோ. கோவைமணி (பிறப்பு: ஜூன் 03, 1963) தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் ஓலைச்சுவடியியல் துறையில் இணைப்பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். கவிதை, ஆய்வு, சுவடியியல் எனப் பல்துறை நூல்களை எழுதினார், பதிப்பித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தார். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

மோ.கோ. கோவைமணி ஜூன் 03, 1963 அன்று பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சுவடியியல், கணிப்பொறிப் பயன்பாடு, சைவ சித்தாந்தம் ஆகியன பயின்று பட்டயம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் தொடங்கி, உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

கல்விப் பணிகள்

மோ.கோ. கோவைமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் தொடங்கி, உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு சுவடியியல் சான்றிதழ் மற்றும் பட்டயத்திற்காக ஐந்து பாட நூல்களை எழுதினார். இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்காக தமிழ் ஓலைச்சுவடியியல் அறிமுகம் நூலை எழுதினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கத்திற்காக தமிழ் இளநிலை மற்றும் முதுநிலைக்கு நான்கு பாடத்திட்ட நூல்களை எழுதினார்.

ஆய்வு மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இரண்டு மணி நேரத்தில் தமிழ் ஓலைச்சுவடியை எளிதில் படிக்கவைக்கும் எளிய முறைப் பயிற்சியை அறிமுகம் செய்து நடத்தினார்.

மோ.கோ. கோவைமணி

இலக்கிய வாழ்க்கை

மோ.கோ. கோவைமணி சுவடியியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். களப்பணி மேற்கொண்டு சுவடிகளைத் திரட்டினார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், பயணக்கட்டுரை எனப் பல்துறைகளில் நூல்களை எழுதினார். 90-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75%-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தவராக அறியப்படுகிறார்.

கோவை மணிக்குப் பாராட்டு

அமைப்புப் பணிகள்

மோ.கோ. கோவைமணி சுவடியியல் தொடர்பாக மாநில, தேசிய மற்றும் உலகளவில் பல மாநாடுகளை, கருத்தரங்குகளை நடத்தினார். சுவடியியல் சார்ந்து இணையத்தில் பல நேரலை நிகழ்வுகளை நடத்தினார். திருக்குறள் பதிப்பின் 200-ம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டின் இயக்குநராகப் பணியாற்றினார். அனைத்துலக முருக இலக்கிய மாநாடு மற்றும் கருத்தரங்கின் இயக்குநராகப் பணிபுரிந்தார். அனைத்துலக பாரதியார் நூற்றாண்டு நினைவு மாநாடு மற்றும் கருத்தரங்கின் இயக்குநராகப் பணியாற்றினார். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டார். அப்பச்சிமார் காவியம், கலியுகப் பெருங்காவியம் போன்ற பல சுவடிகளின் ஆய்வுப் பதிப்புப் பணியை ஒருங்கிணைத்தார்.

பொறுப்பு

  • ஆலோசனைக்குழு உறுப்பினர், நியூபார்ன் யூத் டிரஸ்ட், தஞ்சாவூர்.
  • பொருளாளர், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
  • தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • செயற்குழு உறுப்பினர், ஆசிரியர் பேரவை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • தலைவர், ஆசிரியர் பேரவை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • ஆலோசனைக்குழு உறுப்பினர், விங்ஸ் - சிறகுகள், தஞ்சாவூர்.
  • பாடத்திட்டக்குழு உறுப்பினர், நீரகழாய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • பாடத்திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கூட்டுநர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • SAP உறுப்பினர் (2015-2020), சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.
  • புறநிலைத் தேர்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
  • புறநிலைத் தேர்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
  • புறநிலைத் தேர்வாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
  • புறநிலைத் தேர்வாளர், திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம்.
  • புறநிலைத் தேர்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
  • துறைத்தலைவர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • பதிவாளர் (பொறுப்பு.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • சுவடிகள் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர், புதுதில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம்
  • Chairperson (Tamil), AIIA, CCIM, New Delhi.
  • EAP Project Co-Ordinator, Digitization, Cataloguing and Preservation of Palm leaf Manuscripts in the Tamil University, Endangered Archives Program (EAP), British Library, London, November 2019 to April 2023.
சிறந்த நூலுக்கான விருது

விருதுகள்

மோ.கோ. கோவைமணி எழுதிய ‘ஓலைச்சுசுவடியியல்’ நூலுக்குத் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு கிடைத்தது.

மதிப்பீடு

மோ.கோ. கோவைமணி, சுவடியியல் சார்ந்த பயிற்சிகளை எளியமுறையில் வடிவமைத்துப் பயிற்சியளித்தார். இந்தியா மட்டுமல்லாது மலேசியா, இலங்கை போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கானவர்களுக்கு சுவடியியல் பதிப்புப் பயிற்சிகளை அளித்தார். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்தார். கள ஆய்வுகள் மூலம் அரிய பல சுவடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது சம்ஸ்கிருதம் சார்ந்த சுவடிகளையும் சேகரித்தார். கதைப் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சமய, ஆன்மிக நூல்கள் எனப் பலவற்றை ஓலைச்சுவடியிலிருந்து நூல்களாகப் பதிப்பித்தார். தமிழின் முதன்மைச் சுவடியியல் துறை ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும், பயிற்சியாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • இந்திய காலக்கணிதம்
  • சித்த மருத்துவத்தில் நாடி
  • தமிழும் விசைப்பலகையும்
  • பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு
  • பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள்
  • செவ்வியல் தமிழ்ச்சுவடிகள்
  • தமிழில் கதைப்பாடல் சுவடிகள்
  • உதயத்தூர் புலைமாடத்தி வரத்து
  • கதைப்பாடல்கள் மூன்று
  • இதழ்ப் பதிப்பு நூல்கள்
  • ஓலைச்சுவடியியல்
  • பதிப்புலகத் தூண்கள்
  • இதழ்ப் பதிப்பு வரலாற்றில் இதழ்கள்
  • புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை
  • நாடி மருத்துவம்
  • தமிழும் விசைப்பலகையும்
  • ஆத்திசூடித் திறவுகோல்
  • எட்டுத்தொகை நூல்களில் பாடவேறுபாடுகள்
  • நாச்சியாரம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்
  • தமிழ் நாவலர் சரிதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்
  • முத்துமாலையம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்
  • பதிப்புலகத் தூண்கள்
  • எண்ணும் எழுத்தும்
  • தமிழ்ச் சுவடிகளில் எழுத்தமைதி
  • புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை
  • தமிழ்ச் சுவடிப்பதிப்பு வரலாற்றில் இதழ்களின் பங்கு
  • தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை
  • தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள் - தொகுதி 6 முதல் 10 வரை
  • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி ஆய்வு மாலை - இரண்டு தொகுதிகள்
  • குமரகுருபரர் ஆய்வு மாலை - மூன்று தொகுதிகள்
  • தமிழ்க்கடவுள் முருகன் ஆய்வு மாலை - இரண்டு தொகுதிகள்
  • திருக்குறள் ஆய்வுமாலை
  • இந்தியக் காலவியல்
  • திரிகடும் மூலமும் நாட்டார் உரையும்
  • மகாகவி பாரதியார் ஆய்வுக்கோவை
  • முருகன் இலக்கிய ஆய்வுக்கோவை - இரண்டு தொகுதிகள்
  • செவ்வியல் தமிழ்ச் சுவடிகள்
  • உயர்வுள்ளல் - தமிழியல் கட்டுரைகள்
  • சுவடியியல்
  • ஐக்கூ ஐநூறு
  • செம்புலப் பெயல்நீர் (கவிதைகள்)

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.