under review

தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 29: Line 29:
* [https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537 தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்? - BBC News தமிழ்]
* [https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537 தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்? - BBC News தமிழ்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdlZIy#book1/ தொல்காப்பியப் பொருளதிகாரம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdlZIy#book1/ தொல்காப்பியப் பொருளதிகாரம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Apr-2023, 07:45:21 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]

Latest revision as of 16:23, 13 June 2024

பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி
இலக்குவனார்
பேரா முருகன்

தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள்: தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழியாக உலகளாவிய மொழியியலாளர்களின் கவனத்துக்குச் சென்றது.

பார்க்க தொல்காப்பியம்

பார்க்க தொல்காப்பியர் காலம்

பார்க்க தொல்காப்பிய பதிப்புகள்

மொழியாக்கங்கள்

முதன்முதலில் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்தவர் பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி (பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாஸ்திரி) திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியிலும் தமிழ்ப்பேராசிரியராக இருந்த சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930-லும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937-லும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945-லும் வெளியிட்டார்.

இரண்டாவதாகத் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்தவர் இலக்குவனார். இலக்குவனாரின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதியாகத் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு 1963-ல் வெளிவந்தது. இலக்குவனார், சுப்பிரமணிய சாஸ்திரியாரின் மாணவர்

2000-ல் முனைவர் வி. முருகன் (ஆசியவியல் நிறுவனப் பேராசிரியர்) தொல்காப்பியத்தை முழுவதுமாக மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பு நேருக்குநேர் மொழிபெயர்ப்பு. மூன்று அதிகாரங்களுக்கும் அமைந்துள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தை அ.அ.மணவாளன் ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்துள்ளார்.

ஈ. எஸ். வரதராஜ ஐயர், பொருளதிகாரத்தை மட்டும் இருபகுதிகளாக 1948-ல் மொழிபெயர்த்தார்.

தே. ஆல்பர்ட், 1985-ல் எழுத்து, சொல் அதிகாரங்களை மட்டும் பெயர்த்துள்ளார்.

கமில் சுவலபில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழாய்வு இதழ்களில் 1972-ல் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கி, 1974-ல் முடித்தார். பின்னர் 1975-ல் சொல்லதிகாரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கி 1978 வாக்கில் முடித்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2023, 07:45:21 IST