under review

சி. சீநிவாசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 19: Line 19:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://daily.navinavirutcham.in/?p=21965&fbclid=IwAR1fle5QiYz2Wlctd8M04oXbbvLGI4we2hrStiHR0ebj2Zah4UoX4sZssRI_aem_AbWQQ38suTYAVnvudXf31HzXkfhKQHpyD_thEGB2TBZWl-dGHRSp2EcgVVbVnr38NTW6eKuFRaWgUDDE279cBvqn சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர்/கால சுப்பிரமணியம்]
* [https://daily.navinavirutcham.in/?p=21965&fbclid=IwAR1fle5QiYz2Wlctd8M04oXbbvLGI4we2hrStiHR0ebj2Zah4UoX4sZssRI_aem_AbWQQ38suTYAVnvudXf31HzXkfhKQHpyD_thEGB2TBZWl-dGHRSp2EcgVVbVnr38NTW6eKuFRaWgUDDE279cBvqn சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர்/கால சுப்பிரமணியம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|20-Apr-2024, 21:55:58 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:59, 13 June 2024

சி. சீநிவாசன் (ஸி.ஸ்ரீநிவாஸன்) (20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர். அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சி. சீநிவாசன் தி.நகர்-மாம்பலத்தில் வசித்தார். தி.ஜானகிராமனின் நண்பர். இவரால்தான் ‘மோகமுள்’ சுதேசமித்திரனில் தொடராக வந்தது

இதழியல்

சுதேசமித்திரனில் ஸி.ஆர்.ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆசிரியராயிருந்த காலத்தில் சி. சீநிவாசனும் அதில் வேலைசெய்தார். 1972-ல் சுதேசமித்திரன் மறு எழுச்சியுடன் மீண்டும் நடைபெற்றபோது சி. சீநிவாசன் தலைமையில் ஒரு ஆசிரியர் குழு அதை நடத்தியது.

சீ.சீநிவாசனால்தான் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் சுதேசமித்திரனில் தொடராக வந்தது.

இலக்கிய வாழ்க்கை

சீ. சீநிவாசன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். ஜோஸப் வெஷ்பர்க்கின் 'பள்ளித்தோழன்' (Verdi-Joseph Wechsber), இளையோருக்கான வாழ்க்கை வரலாறுகளை எழுதிப் புகழ்பெற்ற நைனா பிரவுன் பேக்கரின் 'சிறுதுளி பெருவெள்ளம்' (Nickels and Dimes-Nina Brown Baker), ஹோவர்ட் ஸ்விக்கெட்டின் 'இரும்புப் பெட்டி' (Strongbox-Howard Swiggett) என்ற நாவல்களையும் அறிவியலில் பெண்களின் பங்கு பற்றி எழுதிய எட்னா யோஸ்ட்-ன் 'நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்(Modern Americans in Science and Invention-Edna Yost)-தென் இந்திய சைன்ஸ் கிளப்) விஞ்ஞான நூலையும் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்புகள் மட்டுமே புத்தக வடிவில் கிடைக்கின்றன. பிற எழுத்துக்கள் பற்றித் தெரியவில்லை.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • இரும்புப் பெட்டி (Strongbox, ஹோவர்ட் ஸ்விக்கெட்)
  • அன்புப்பிடியில் இருவர் (Death Comes for the Archbishop, வில்லா கேதர்)
  • போரும் பாவையும் (For Whom The Bell Tolls, எர்னஸ்ட் ஹெமிங்வே )
  • அன்னையின் குரல் (Cry, the Beloved Country, ஆலன் பேட்டன்)
  • பள்ளித்தோழன் (Verdi, ஜோஸப் வெஷ்பர்க்)
  • சிறுதுளி பெருவெள்ளம் (Nickels and Dimes, நைனா பிரவுன் பேக்கர்)
  • நவீன அமெரிக்க விஞ்ஞானிகள் (Modern Americans in Science and Invention)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2024, 21:55:58 IST