under review

1942 (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 18: Line 18:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்கள்]]
[[Category:20ம் நூற்றாண்டு படைப்புகள்]]
[[Category:1950 நாவல்கள்]]
[[Category:20ம் நூற்றாண்டு நாவல்கள்]]

Revision as of 17:17, 10 April 2022

1942 கு.ராஜவேலு எழுதிய நாவல். சுதந்திரப்போராட்டப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் இது. 1942-ல் காந்தியின் அறைகூவலை ஒட்டி தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் சித்தரிப்பு கொண்டது.

எழுத்து, வெளியீடு

1942 நாவல் 1950-ல் எழுதப்பட்டது. ராஜவேலு தன் 22-ஆவது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார். அவ்வனுபவத்தை ஒட்டி இந்நாவலை எழுதினார்.

கதைச்சுருக்கம்

ஆலைத்தொழிலாளி கண்ணப்பன் விடுதலைப்போரில் ஈடுபட்டமையால் சிறைக்கு செல்கிறான். கண்ணப்பனின் தாயார் நோயுற்று சாகும் நிலையில் இருப்பதனால் அதை அவனிடம் சொல்லும்பொருட்டு அவனுடைய அத்தைமகன் வடிவேலுவும் சிறைசெல்கிறான். கண்ணப்பன் சிறையில் இருந்து தப்பி தாயைப்பார்க்கச் செல்கிறான். அதற்குள் தாய் மறைகிறார். கண்ணப்பனின் காதலி விஜயலட்சுமியின் தந்தை கறுப்புப்பணம் ஈட்டமுயன்று மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதனால் அதே இடுகாட்டுக்கு அவளும் இறுதிச்சடங்குகளுக்காக வருகிறாள். அவர்கள் அங்கே சந்திக்கிறார்கள். வடிவேலுவின் முறைப்பெண் விஜயலட்சுமி. ஆனால் அவன் கண்ணப்பனின் காதலை மதித்து விஜயலட்சுமியை துறக்கிறான். 1942-ல் நிகழ்ந்த போராட்டம், சிறைவாசம் ஆகியவற்றை இந்நாவல் பதிவுசெய்கிறது.

இலக்கிய இடம்

தமிழில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி எழுதப்பட்டது இந்நாவல்.

உசாத்துணை


✅Finalised Page