under review

கவிதைக்காரன் இளங்கோ: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:கவிதைக்காரன் இளங்கோ.png|thumb|கவிதைக்காரன் இளங்கோ]]
[[File:கவிதைக்காரன் இளங்கோ.png|thumb|கவிதைக்காரன் இளங்கோ]]
கவிதைக்காரன் இளங்கோ (இளங்கோ) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர். திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குனராகவும் உள்ளார். திரைக்கதை விவாதங்களிலும் பங்களிப்பாற்றுகிறார்.
கவிதைக்காரன் இளங்கோ (இளங்கோ) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர். திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தார். தற்போது திரைக்கதை விவாதங்களில் பங்களிப்பாற்றுகிறார்.
== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
கவிதைக்காரன் இளங்கோவின் இயற்பெயர் இளங்கோ. வடசென்னையில் பிறந்தார். சென்னைமுத்தியால்பேட்டை மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றார். தனியார் திரைப்படக் கல்வியகத்தில் ஓராண்டு ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடித்தார்.  

Line 14: Line 14:
== நூல்கள் ==
== நூல்கள் ==
===== நாவல் =====
===== நாவல் =====
* ஏழு புட்டுகள் (யாவரும் பதிப்பகம்)
* ஏழு பூட்டுகள் (யாவரும் பதிப்பகம்)
===== கவிதைத் தொகுப்பு =====
===== கவிதைத் தொகுப்பு =====
* ப்ரைலியில் உறையும் நகரம் (யாவரும் பதிப்பகம்)
* ப்ரைலியில் உறையும் நகரம் (மெய்பொருள் பதிப்பகம்)
* 360 டிகிரி (யாவரும் பதிப்பகம்)
* 360 டிகிரி (யாவரும் பதிப்பகம்)
* கோமாளிகளின் நரகம் (யாவரும் பதிப்பகம்)
* கோமாளிகளின் நரகம் (யாவரும் பதிப்பகம்)

Revision as of 11:55, 6 June 2024

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ (இளங்கோ) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர். திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தார். தற்போது திரைக்கதை விவாதங்களில் பங்களிப்பாற்றுகிறார்.

பிறப்பு,கல்வி

கவிதைக்காரன் இளங்கோவின் இயற்பெயர் இளங்கோ. வடசென்னையில் பிறந்தார். சென்னைமுத்தியால்பேட்டை மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றார். தனியார் திரைப்படக் கல்வியகத்தில் ஓராண்டு ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடித்தார்.

அமைப்புப் பணிகள்

  • Pure Cinema அமைப்பு நடத்தும் Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்தினார்.
  • ‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்ற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தினார்.

திரை வாழ்க்கை

கவிதைக்காரன் இளங்கோ திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியிலிருந்தார். அதன்பின் உதவி இயக்குநராகவும் சில வருடங்கள் பணி பணியாற்றினார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் (Script Consultant) பங்களிப்பாற்றினார்.

இதழியல்

கவிதைக்காரன் இளங்கோ கணையாழியின் துணையாசிரியராகவும், 'யாவரும்' இணைய இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 2019 முதல் கணையாழி கலை இலக்கியத் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கவிதைக்காரன் இளங்கோவின் முதல் கவிதைத் தொகுப்பு 'ப்ரைலியில் உறையும் நகரம்', 2014-ல் அன்றைய ஆளுனர் ரோசய்யாவால் ராஜ்பவனில் வெளியிடப்பட்டது. 'பனிகுல்லா', 'மோகன்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. '360 டிகிரி', 'கோமாளிகளின் நரகம்' ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'ஏழு பூட்டுக்கள்' எனும் நாவலும் எழுதினார். 'திரைமொழிப் பார்வை' எனும் கட்டுரை நூலும் வெளிவந்தது. கவிதைக்காரன் இளங்கோ தனது முன்னோடியாக பிரமிள் மற்றும் ஆத்மாநாமை குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்
  • ஏழு பூட்டுகள் (யாவரும் பதிப்பகம்)
கவிதைத் தொகுப்பு
  • ப்ரைலியில் உறையும் நகரம் (மெய்பொருள் பதிப்பகம்)
  • 360 டிகிரி (யாவரும் பதிப்பகம்)
  • கோமாளிகளின் நரகம் (யாவரும் பதிப்பகம்)
சிறுகதைகள் தொகுப்பு
  • பனிகுல்லா (யாவரும் பதிப்பகம்)
  • மோகன் (யாவரும் பதிப்பகம்)
கட்டுரை
  • திரைமொழிப்பார்வை (யாவரும் பதிப்பகம்)

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page