உமாபதி சிவாசாரியார்: Difference between revisions
(Created page with "உமாபதி சிவாசாரியார்(உமாபதி சிவம், கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்) (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) == வாழ்க்கைக் குறிப்பு == தாம் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தில் பாயிர வரிகள் 26-29ல் தான் இன்...") |
No edit summary |
||
| Line 21: | Line 21: | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* சிவப்பிரகாசம் | |||
* திருவருட்பயன் | |||
* வினாவெண்பா | |||
* போற்றிப் பஃறொடை | |||
* கொடிக்கவி | |||
* நெஞ்சுவிடு தூது | |||
* உண்மைநெறி விளக்கம் | |||
* சங்கற்ப நிராகரணம் | |||
* <br /> | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Revision as of 08:47, 15 May 2024
உமாபதி சிவாசாரியார்(உமாபதி சிவம், கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்) (பொ.யு. 14-ம் நூற்றாண்டு)
வாழ்க்கைக் குறிப்பு
தாம் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தில் பாயிர வரிகள் 26-29ல் தான் இன்னூலை இயற்றிய காலம் சகம் ஆண்டு 1235 என்று குறித்துள்ளார். எனவே பொ.யு. 1313-ல் இன்னூல் இயற்றப்பட்டிருக்கிறது எனலாம். ஆகவே, ”உமாபதி சிவத்திற்கு எண்பத்தோராண்டுகட்கு முன் கி.பி 1232-ல் மெய்கண்ட தேவர் இருந்தனர் என்பது எவ்வாற்றானும் ஏற்புடைத்தேயாம்” என்கிறார் பேராசிரியர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்.
தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.
வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றதோடு மட்டுமில்லாமல் திருக்குறள், பன்னிரு திருமுறைகளையும் கற்றார். வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமை பெற்றார்.
பதினாறாம் வயதில் இவருடைய திருமணம் நடந்தது. வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. எனவே உமாபதி தீட்சிதர், தமக்குரிய பூஜை முறை நாட்களில், தில்லை திருச்சிற்றம்பலத்தானுக்கு பூஜைகள் செய்தார். மற்ற நாட்களில் தனது தந்தை தமக்கு பெட்டகத்துடன் அளித்திருந்த ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜரின் அர்ச்சாவதாரங்களை (விக்கிரகங்களை) பூஜித்து வந்தார்.
ஆன்மிக வாழ்க்கை
இந்நாட்களில் வடமொழி பவுட்கர ஆகமத்துக்கு வடமொழியில் விருத்தியுரை, சிவபரத்துவமான கருத்துக்களோடு ஸ்ரீநடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ' குஞ்சிதாங்கிரி ஸ்தவம்' என்ற வடமொழி தோத்திர நூல் முதலியவற்றையும் இயற்றினார் உமாபதி. அன்றிருந்த ஜாதிக் கட்டுகளை மீறி, மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை பெற்றார். இதனால் ஊரை விட்டு விலகவும் நேர்ந்தது.
இவர் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற பல நூல்களைக் கற்று, மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்றதுடன், அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் கொற்றவன்குடி' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம்.
அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் ""கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்'' எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஉமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு உமாபதி சிவம் நடத்த வேண்டிய பூஜை முறை வந்த ஒரு நாளில், ஸ்
நூல்கள்
- சிவப்பிரகாசம்
- திருவருட்பயன்
- வினாவெண்பா
- போற்றிப் பஃறொடை
- கொடிக்கவி
- நெஞ்சுவிடு தூது
- உண்மைநெறி விளக்கம்
- சங்கற்ப நிராகரணம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.