first review completed

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
 
No edit summary
Line 12: Line 12:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
’அனிதா’ என்ற புனை பெயரில் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் முதல் கவிதை நூல், ’சூரிய மழை', 1983-ல் வெளியானது. ’வலிமையான புதுக்கவிதை நூல் இது’ என்று குமுதம் பாராட்டியது. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார். தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், சமய, இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார். பட்டிமன்றங்களின் நடுவராக இயங்கினார். தமிழகத்தில் பல கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளிகள், ரோட்டரி, அரிமா சங்கங்கள், தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்புரையாற்றினார். அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் நூல்களான திருப்பூர் குமரன், என் மொழி செம்மொழி எனும் இரு நூல்களும் கர்நாடக மாநிலத்தில் தமிழ் வழியில் கல்வி பயில்பவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன.  
’அனிதா’ என்ற புனை பெயரில் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் முதல் கவிதை நூல், ’சூரிய மழை', 1983-ல் வெளியானது. ’வலிமையான புதுக்கவிதை நூல் இது’ என்று குமுதம் பாராட்டியது. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார். தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், சமய, இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார். பட்டிமன்றங்களின் நடுவராக இயங்கினார். தமிழகத்தில் பல கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளிகள், ரோட்டரி, அரிமா சங்கங்கள், தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்புரையாற்றினார். அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் நூல்களான 'திருப்பூர் குமரன்', 'என் மொழி செம்மொழி' எனும் இரு நூல்களும் கர்நாடக மாநிலத்தில் தமிழ் வழியில் கல்வி பயில்பவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன.  


அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை நூல்கள், உரைநடை நூல்கள், கவிதை நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என்று 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 35-க்கும் மேற்பட்ட ஒலி, ஒளிப்பேழைகளை வெளியிட்டார். மும்பைத் தமிழர்களின் வரலாறு (இரண்டு) தொகுதிகள்), வரலாற்றில் பிள்ளைமார்கள், வரலாற்றில் முதலியார்கள் போன்ற இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை நூல்கள், உரைநடை நூல்கள், கவிதை நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என்று 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 35-க்கும் மேற்பட்ட ஒலி, ஒளிப்பேழைகளை வெளியிட்டார். மும்பைத் தமிழர்களின் வரலாறு (இரண்டு) தொகுதிகள்), 'வரலாற்றில் பிள்ளைமார்கள்', 'வரலாற்றில் முதலியார்கள்' போன்ற இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.


== பொறுப்பு ==
== பொறுப்புகள் ==


* திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர்
* திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர்
Line 176: Line 176:
* [https://www.youtube.com/@anithaakrishnamoorthy9967 அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி யூ ட்யூப் தளம்]
* [https://www.youtube.com/@anithaakrishnamoorthy9967 அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி யூ ட்யூப் தளம்]
* அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரா கிருஷ்ணன், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015
* அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரா கிருஷ்ணன், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015
{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:57, 5 May 2024

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1956) எழுத்தாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர். திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர். தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் செயல்பட்டார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடுவம்பாளையத்தில், ஆகஸ்ட் 13, 1956 அன்று, இரா. குப்புசாமி - பழனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில், அரசியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். பொது நிர்வாகத்தில் ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் நகரில் தயாராகும் ஆயத்த ஆடைகளை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தார். திருமண விவரங்களை அறிய இயலவில்லை.

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி நூல்கள்
அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

’அனிதா’ என்ற புனை பெயரில் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் முதல் கவிதை நூல், ’சூரிய மழை', 1983-ல் வெளியானது. ’வலிமையான புதுக்கவிதை நூல் இது’ என்று குமுதம் பாராட்டியது. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார். தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், சமய, இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார். பட்டிமன்றங்களின் நடுவராக இயங்கினார். தமிழகத்தில் பல கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளிகள், ரோட்டரி, அரிமா சங்கங்கள், தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்புரையாற்றினார். அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் நூல்களான 'திருப்பூர் குமரன்', 'என் மொழி செம்மொழி' எனும் இரு நூல்களும் கர்நாடக மாநிலத்தில் தமிழ் வழியில் கல்வி பயில்பவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன.

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை நூல்கள், உரைநடை நூல்கள், கவிதை நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என்று 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 35-க்கும் மேற்பட்ட ஒலி, ஒளிப்பேழைகளை வெளியிட்டார். மும்பைத் தமிழர்களின் வரலாறு (இரண்டு) தொகுதிகள்), 'வரலாற்றில் பிள்ளைமார்கள்', 'வரலாற்றில் முதலியார்கள்' போன்ற இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

பொறுப்புகள்

  • திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர்
  • அறிவே ஆயுதம் - தன்னம்பிக்கை பேரவைத் தலைவர்

பதிப்பகம்

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், சூரியன் பதிப்பகம் என இரண்டு பதிப்பகங்களை ஆரம்பித்து 50-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.

அனிதா கு. கிருஷ்ணமூர்த்திக்கு கொல்கத்தா தமிழ்ச்சங்கப் பாராட்டு

விருதுகள்

  • தமிழக அரசின் 'சிறந்த எழுத்தாளர்' விருது
  • 'திருப்பூர் முத்தமிழ் மன்றம்' வழங்கிய விருது
  • கர்நாடகத் தமிழர் பேரவை சார்பில் அளிக்கப்பட்ட ’ஒற்றுமை மாமணி’ விருது
  • 'தமிழ் மாமணி' விருது
  • வ.உ.சி. யின் மகன் வ.உ.சி. வாலேஸ்வரன் வழங்கிய 'வ.உ.சி. இலக்கியச் செல்வர்' விருது
  • கோவை - குஜராத் சமாஜில் நீதியரசர் ராமசுப்பிரமணியம் வழங்கிய 'நூறில் ஒருவர் விருது'
  • திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் சங்கம் அளித்த ’சொல்வேந்தர்’ விருது
  • அவிநாசி அக்னி தமிழ் பேரவை சார்பில் வழங்கப்பட்ட ’சொற்சுடர்’ விருது
  • திருப்பூர் குமரன் விருது
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அளித்த சிறந்த நூலுக்கான பரிசு - தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார் (2007)
  • தமிழறிஞர் விருது

ஆவணம்

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் கவிதை நூல்களை ஆய்வு செய்து மகாராஷ்டிரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவரும், மும்பை மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவரும், மும்பை தானே பகுதியில் உள்ள 'லிட்டில் பிளவர் கான்வென்ட்' முதல்வருமான திருமதி. அமலா ஸ்டான்லி 'பூக்களும் தும்பிகளும்' என்கிற பெயரில் நூல் ஒன்றை எழுதினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சித்ரா அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் கவிதை நூல்களை ஆய்வு செய்து நூல் ஒன்றை வெளியிட்டார்.

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகளை ஆய்வு செய்து கோயமுத்தூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி. சந்திரா கிருஷ்ணன் நூல் ஒன்றை எழுதினார். அந்த நூலை கலைஞன் பதிப்பகம், மலேசிய பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி பேச்சாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், பதிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகப் படைப்பாளியாகச் செயல்பட்டார். திருப்பூர் தமிழ்ச் சங்கம் மூலம் சிறந்த பல நூல்களை அடையாளம் கண்டு பரிசளிக்கச் செய்தார். தமிழ், இனம், மொழி சார்ந்து இயங்கிய, திருப்பூரின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளியாக அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி அறியப்படுகிறார்.

நூல்கள்

  • மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு
  • முதலியார்களின் வரலாறு
  • கர்நாடக மாநிலத் தமிழர்களின் வரலாறு
  • தமிழர் பரிந்துரை வணிகம் (சென்னையின் தமிழ் வணிகர்கள்)
  • சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள்
  • தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்
  • திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பைத் தமிழர்கள்
  • தேசியக் கொடியின் தந்தை திருப்பூர் குமரன்
  • வெற்றிக்கு வழிகாட்டுகிறார் வ.உ.சிதம்பரனார்
  • கல்வித் தந்தை காமராஜர்
  • அறிவியல் தந்தை அப்துல்கலாம்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • அறிவுலக மேதை அண்ணா
  • ஆண்டாள் என்கிற தமிழச்சி
  • வ.உ. சிதம்பரனாரும் நானும்
  • திருவள்ளுவரே உன் ஊசியைத் தா!
  • தமிழர்களின் கடவுள் ஐயப்பன்
  • திமுக: நான் ஏன் ஆதரிக்கிறேன்
  • பேரறிஞர்அண்ணாவின் கம்பரசம்
  • தன்னம்பிக்கை தரும் ஆன்மிகம்
  • பேரறிஞர் அண்ணாவின் தமிழ்த்தேசியம்
  • கவிதைக்கென்ன வேலி?
  • பேரறிஞர் அண்ணாவின் தமிழர்நாடு
  • தமிழர்களின் வணிகம் பெருகத் தேவை இன உணர்வா? பொருளாதாரமா?
  • தமிழ் இராமர் அயோத்திராமர்
  • வரலாற்றில் பிள்ளைமார் தலைவர்கள்
  • சுதந்திரம் என்பது சுக்கா? மிளகா?
  • அறிவே ஆயுதம்
  • தென்னாடுடைய சிவனே போற்றி
  • மனதைத் திற அறிவு வரட்டும்
  • அறிவும் சிரிப்பும்
  • இதயத்தின் ரகசியம்
  • காந்தி-கீதை-கோட்சே
  • தீரன் சின்னமலை - மராட்டிய வீரன் சிவாஜி யார் நமது மன்னர்?
  • திருவள்ளுவர் விழியில் வ.உ.சிதம்பரனார்
  • வ.உ.சிதம்பரனாரும் பாரதியாரும்
  • தமிழர் தாயுமானவர் ஆரியர் தயானந்தர்
  • மக்கள் தலைவர் வ.உ.சி
  • கலீல் கிப்ரான் தீர்க்கதரிசி
  • தமிழ் எனது கைவாள்
  • வள்ளலார் நமக்கு வழிகாட்டி
  • வ.உ.சி. அரசியல் சிந்தனைகள்
  • திருமுருக கிருபானந்தவாரியார்
  • வாட்ஸ் அப் முத்துக்கள்
  • வெற்றி என்பது பணம்
  • அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம்
  • செங்குந்தர் வரலாறு
  • காந்தி கணக்கு
  • தில்லையாடி வள்ளியம்மை
  • வேலு நாச்சியார்
  • பேசு நான் மட்டும் உன் பேச்சைக் கேட்கிறேன்
  • தமிழால் இணைவோம்
  • என் மொழி செம்மொழி
  • தமிழர்களும் விவேகானந்தரும்
  • ஞானத்தந்தை பாரதியார்
  • பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்
  • வாழ்க்கையில் முன்னேற வெற்றிமொழிகள்
  • வ.உ.சிதம்பரனாரின் பொன்மொழிகள் - புகைப்படங்கள்
  • அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்
  • அரியநாதர், அண்ணா, பாவேந்தர், வேதாத்திரிமகரிஷி
  • பூக்களும் தும்பிகளும்
  • கூவாய் பூங்குயிலே  
  • தந்தை பெரியார் சிந்தனைகள்
  • என் கோபமெல்லாம் சீதையோடுதான்
  • கனவுகள் பூப்பறிக்கும்
  • பைபிள் நீதிக்கதைகள்
  • வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள்
  • சுதந்திரம் என்பது சுக்கா? மிளகா? (மாணவர்பதிப்பு)
  • சூரிய மழை
  • வசந்தகாலத் தேரோட்டம்
  • ஒருரோஜாப்பூவும், இரண்டு உதடுகளும்
  • கைமாறும் கணையாழிகள்
  • தேரில் வருகிறாள் தேவதை
  • புன்னகையும் புல்லாங்குழலும்
  • காதல் சந்தை
  • நல்லதொரு குடும்பம்
  • வரலாற்றில் முதலியார்கள்
  • வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் வ.உ.சி.
  • வ.உ.சி. காந்தி - யார் நமது தந்தை
  • தமிழர் தலைவர்களை நெஞ்சம் மறக்குமா?
  • காந்தி, வ.உ.சிதம்பரனாரை ஏமாற்றினாரா?

ஒலி-ஒளிப் பேழைகள்

  • வ.உ.சிதம்பரனார் பகுதி 1
  • வ.உ.சிதம்பரனார் பகுதி 2
  • வ.உ.சி. வாய்மை, தூய்மை, நேர்மை
  • அறிஞர் அண்ணா
  • காமராசர்
  • செண்பராமன் பிள்ளை
  • ஜி.டி. நாயுடு
  • ஆர்.கே. சண்முகம் செட்டியார்
  • தில்லையாடி வள்ளியம்மை
  • மா. சிங்காரவேலர்
  • ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பகுதி 1
  • ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பகுதி 2
  • தீரன் சின்னமலை
  • திருப்பூர் குமரன் பகுதி 1
  • திருப்பூர் குமரன் பகுதி 2
  • ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்
  • வீரமங்கை வேலு நாச்சியார்
  • தமிழும் வள்ளலாரும்
  • வாசிப்பை நேசிப்போம்
  • சுதந்திரப் போராட்டத்தில் கொங்கு நாட்டின் பங்கு
  • சுடரேந்திய வெற்றியாளர்கள் (தன்னம்பிக்கை)
  • மறைக்கப்பட்ட தமிழர் தலைவர்கள் வரலாறு
  • வீரத்திருமகன் முத்துராமலிங்கத் தேவர்
  • கிருபானந்த வாரியார்
  • மாவீரன் பூலித்தேவன்
  • மாவீரர் அழகு முத்துக்கோன்
  • வேதாத்திரிய ரகசியம்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • முதலியார் பிள்ளைமார் வரலாறு
  • ஏறுதழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு
  • அறிவும் சிரிப்பும்
  • அறிவே ஆயுதம்
  • தீரன் சின்னமலையின் நண்பர் திப்புசுல்தான்
  • வேதாத்திரி மகரிஷியும் அப்துல்கலாமும்
  • சுதந்திரப் போராட்டத்தில் வன்னியர்களின் பங்கு

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.