under review

ஐசக் ஹென்றி ஹக்கர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Created/reviewed by Je)
Line 37: Line 37:
*https://hackermemorialchurchmoolachel.blogspot.com/2014/01/csi-hacker-memorial-church-moolachel.html
*https://hackermemorialchurchmoolachel.blogspot.com/2014/01/csi-hacker-memorial-church-moolachel.html


{{being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:01, 23 March 2022

ஐசக் ஹென்றி ஹக்கர்

ஐசக் ஹென்றி ஹக்கர் (1848-1933) (Isaac Henry Hacker) லண்டன்மிஷன் சொசைட்டியின் மதப்பரப்புநர், கல்வியாளர், வரலாற்றுப் பதிவாளர்

பிறப்பு , கல்வி

ஐசக் ஹென்றி ஹக்கர் 7 ஜூலை 1848 ல் பிரிட்டனில் பிர்மிங்ஹாம் ( Birminghram) பகுதியில் பிறந்தார். 3 அக்டோபர் 1877 ல் குரு பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

எலிசபெத் டைமன்ட் போலார்ட் (Elizabeth Dymond Pollard) ஐ 1849ல் மணந்தார். எலிசபெத் ஏப்ரல் 1 1885ல் முட்டம் கடற்கரை ஊரில் தன் 36 ஆம் வயதில் மறைந்தார். ஹாக்கர் பேலிஸின் மகள் வினிஃப்ரட் பேலிஸ்Winifred Baylis (1868) ஐ நெய்யூரில் 24 ஆகஸ்ட் 1887ல் மணந்தார்

மதப்பணிகள்

மூலச்சல் ஐசக் ஹென்றி ஹக்கர் நினைவு ஆலயம்

ஐசக் ஹென்றி ஹக்கர் லண்டன்மிஷன் சொசைட்டியில் இணைந்து மதப்பணியாளர் ஆனார். நெய்யூர் பகுதியில் பணியாற்றி வந்த ரெவெ பேலிஸ் (Baylis) அவர்கள் 9 ஜனவரி 1878ல் மறைந்தபோது நெய்யூருக்கு அனுப்பப்பட்டார். நெய்யூர் மற்றும் அப்பகுதிகளில் மதப்பணிகளையும் கல்விப்பணிகளையும் செய்தார். ஹாக்கரும் அவர் மனைவியும் பள்ளியாடி பகுதியில் பள்ளிகளை உருவாக்கினர். ஹக்கர் 42 ஆண்டுகள் மதப்பணியாற்றினார். அவர் கட்டிய ஆலயங்களில் IHH என்னும் எழுத்துக்கள் இருக்கும். மொத்தம் 18 ஆலயங்களைக் கட்டியிருக்கிறார்.ஹக்கர் அவருடைய சமகாலத்தவரான ஜேம்ஸ் எம்லின் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். தன் நூலில் ஜான் லோ , ஜேம்ஸ் டதி, டதி அம்மையார் சாமுவேல் மெட்டீர் ஆகியோரை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார்.

இதழியல்

ஹக்கர் நெய்யூரில் இருந்து தேசஉபகாரி என்னும் இதழை நடத்தினார். தமிழகத்தில் வெளிவந்த பழைய கிறிஸ்தவ இதழ்களில் இதுவும் ஒன்று.

மறைவு

ஹக்கர் கொடைக்கானலில் வாழ்ந்து 5 மே 1933 ல் மறைந்தார்.

நினைவகம்

24 டிசம்பர் 1957 ல் தக்கலை அருகே மூலச்சலில் கட்டப்பட்ட ஆலயம் ரெவெரெண்ட் ஹக்கர் நினைவு ஆலயம் என பெயரிடப்பட்டது ( Hacker Memorial Church)

நூல்கள்

ஹக்கர் தன் மதப்பணியை விரிவான குறிப்புகளுடன் நூல் வடிவில் எழுதியிருக்கிறார். அவற்றில் அரிய புகைப்படங்களும் உள்ளன. தென்னகவரலாறு மற்றும் கேரள வரலாற்றை அறிய மிக உதவியான நூல்களாக அவை கருதப்படுகின்றன

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.