being created

சாந்தகுமாரி கமலகாந்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சாந்தகுமாரி கமலகாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1965) ஈழத்துப் பெண் கலைஞர், நாடகம், இசை ஆசிரியர். மாணவர்களுக்கு நாடகங்கள், இசை, கலை நிகழ்ச்சிகள் அரங்காற்றுகை செய்தார். == வாழ்க்கைக் குறிப்...")
 
Line 19: Line 19:
* கர்நாடக இசை வினாவிடை
* கர்நாடக இசை வினாவிடை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:சாந்தகுமாரி, கமலகாந்தன்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சாந்தகுமாரி, கமலகாந்தன்: noolaham]


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:41, 26 February 2024

சாந்தகுமாரி கமலகாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1965) ஈழத்துப் பெண் கலைஞர், நாடகம், இசை ஆசிரியர். மாணவர்களுக்கு நாடகங்கள், இசை, கலை நிகழ்ச்சிகள் அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சாந்தகுமாரி கமலகாந்தன் இலங்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செல்வரத்தினம், செல்லம்மா இணையருக்கு மார்ச் 2, 1965-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழிலும், முள்ளியவளையிலும் கற்றார். 1990-ல் யாழ் பல்கலைக்கழகத்தின் இசைக்கலைமாணிப் பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்தில் சதாசிவம் அர்களிடமும் ஏ.கே.கருணாகரன், ஜெகதாம்பிகை, இராமநாதன் ஐயர், பதம்லிங்கம், பாலசிங்கம் போன்றவர்களிடமும் இசை கற்றார். 2017-ல் முதுகலைமாணிப்பட்டத்தைப் பெற்றார்.

இவர் இசை பாரம்பரிய குடும்பத்தை கொண்டவர். இவரது சகோதரன் முல்லை ஜெயா ஜேர்மனியில் தமிழரின் கலைப் பொக்கிசங்களை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் தன்னாலான பங்களிப்பை வழங்கினார். இவரின் கணவரும் பாடகர். இவருடைய மகனும் இசைக்கலைஞர். 1991ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டார். 1998-ல் வீட்டில் ஏற்பட்ட ஓர் விபத்தில் மகளை இழந்தார். தொடர்ந்து தனது ஊரில் இருக்க விரும்பாமல் 2000-2004 வரை திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் சொந்த ஊர் திரும்பினார். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இசை ஆயிரியர்களாவும் விரிவரையாளர்களாகவும் உள்ளனர்.

அமைப்புப் பணிகள்

மிகவும் பெரிய மாணவிகளைக் கொண்ட ”இன்னியம்” எனும் கீழைத்தேச வாத்தியக் குழுவினை பல வருடங்களாக நடாத்தினார். 2011-ல் ஆசிரிய ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.

நாடக வாழ்க்கை

1979, 1980, 1981ஆம் ஆண்டுகளில் மு.வித்தியானந்தாக் கல்லூரியில் பல இலக்கிய நாடகங்களில் நடித்து தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றார். பல நாடகங்களை நெறியாள்கை செய்து மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார். போராட்ட காலத்தில் கண்ணதாசன் என்பவரால் உருவாக்கப்பட்ட நுண்கலைக்கல்லூரியில் இவரும் ஒரு ஆசிரியராக இருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்களை கலைத்துறையில் பயிற்றுவித்தார். 2009-ல் இடப்பெயர்வின் பின் இந்நுண்கலைக் கல்லூரியானது செயலிழந்து இருந்தது. 2014ஆம் ஆண்டு மீண்டும் இவருடைய முயற்சியால் அக்கல்லூரியை உருவாக்கி இன்று வரை அதன் தலைவராக இருந்து செயற்பட்டு வருகிறார்.

கலை வாழ்க்கை

1974-ல் முள்ளியவளை நா.நடராஜ அய்யர் அறிமுகப்படுத்திய வில்லிசை நிகழ்வு நலிவடைந்தபோது தன் முயற்சியால் அதை மீட்டார். 2019-ல் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்களுக்கு அதனைப் பழக்கி தேசிய மட்டத்திலும் முதலிடத்தைப் பெறச் செய்தார். இந்நிகழ்வினை நெறியாள்கை செய்தமைக்காக முல்லை இசைப் பேரொளி எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.

முல்லை மண்ணில் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், கும்மி, மகுடி, கூத்து, வில்லிசை, குடமூதல், கரகம் என கலைவடிவங்கள் ஆகிய கிராமிய கலை வடிவங்களை மீட்டார். 2018, 2019ஆம் அண்டுகளில் கலாசார திணைக்களத்தால் மன்றங்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் நுண்கலைக்கல்லூரியை வடமாகாணத்தில் முதலிடம் பெறச் செய்தார். இதில் இடம்பெற்ற வில்லிசை நிகழ்வை இவரே நெறியாள்கை செய்தார்.

எழுத்து

கல்வி பொதுத்தராதர உயர்தரத்துக்கான கர்நாடக இசை வினாவிடைப் புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

விருதுகள்

  • 2013-ல் இலங்கை அரசால் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பிரதீபா பிரபா விருது

நூல் பட்டியல்

  • கர்நாடக இசை வினாவிடை

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.